Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் இன்று ஓட்டோ சாரதிகள் மீதும் இராணுவம் கொடூரத் தாக்குதல
#1
யாழில் இன்று ஓட்டோ சாரதிகள் மீதும் இராணுவம் கொடூரத் தாக்குதல்!!
யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை கொடூரத் தாக்குதலை நடத்தி ஓட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.

இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.

ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.

நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகி உள்ளன.

இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த அஜித்குமார என்பவர் படுகாயமடைந்ததா செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 10 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ஆபத்தான நிலையில் பலாலி மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Reply


Messages In This Thread
யாழில் இன்று ஓட்டோ சாரதிகள் மீதும் இராணுவம் கொடூரத் தாக்குதல - by கீதா - 12-20-2005, 06:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)