12-20-2005, 09:34 AM
இலங்கையில் மீண்டும் போர்மேகங்கள் திரள்கின்றன. ஈழத் தமிழர்களின் சாதாரண உரிமைகளைக்கூட அடியோடு மறுக்கும் சக்திகளின் பிரதிநிதி மகிந்தா ராஜபட்சே, குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி வேட்பாளர். அவரை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே போட்டியிட்டார். முன்னவர் ஒரு லட்சம் வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருக்கிறார். நாடு தழுவிய அளவில் நடந்த தேர்தலில், ஒரு லட்சம் என்பது பெரிய வேறுபாடல்ல.
இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் வாக்களிக்கவில்லை. முப்பது லட்சம் பேரில் நூற்றுக்கணக்கில்தான் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர் என்று செய்திகள் வந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அவர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருவர். தமிழர் இயக்கங்களின் தங்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவர்.
சிங்களர் ஒருவர்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், இனவாதம் என்று வரும் போது, ஈழத்திலிருந்து தனியாகத் தங்களுக்கு எல்லைக்கோடு போட்டுக் கொள்வார்கள். நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் பகுதிகளுக்கு வந்து ரணில் விக்ரமசிங்கே கூட வாக்குக் கேட்கவில்லை. காரணம், சிங்களவர்களின் சீற்றத்திற்கும், புத்தத் துறவிகளின் அக்கினிக் கண்களுக்கும் ஆளாக வேண்டும் என்று அச்சம் கொண்டார்.
போர்முனையில் நின்ற ஈழத் தமிழர்கள் சமாதானத்திற்கும் தயாராக இருந்தனர். அவர்கள் தூக்கிய துப்பாக்கியில் குண்டு மட்டுமல்ல; வெண்புறாவும் கூடு கட்டி இருக்கிறது. எனவே தான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நார்வே எடுத்த முயற்சியின் காரணமாகப் போர் நிறுத்தம் செய்தனர். அப்போது ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தார். அவரே போர் நிறுத்த உடன்பாட்டில் அரசு சார்பாகக் கையெழுத்திட்டார். அவரிடமிருந்து ஈழத் தமிழர்கள் நிரம்ப எதிர்பார்த்தனர்.
ஈழத் தமிழர்களின் வடக்கு, கிழக்கு மாநிலப் பள்ளிகள், ஆலயங்கள், மாதாகோயில்களில் இன்றைக்கும் ராணுவ முகாம்கள் உண்டு. அந்த முகாம்களை மூடி ராணுவத்தை அதன் முகாமுக்கு அனுப்புவது என்பது உடன்பாட்டில் ஓர் அம்சம். ஆனால், அந்தச் சாதாரணக் கோரிக்கை கூடச் செயலுக்கு வரவில்லை. அங்கிருந்து ராணுவம் வெளியேற மறுக்கிறது என்றார் ரணில்.
தற்போது தங்களிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதாக இலங்கையின் புதிய ராணுவத் தளபதி கூறுகிறார். இதன் பொருள் என்ன? போர் நிறுத்த காலத்தில் இலங்கை அரசு தமது ராணுவத்தை நவீனப்படுத்திவிட்டது. நாசகார ஆயுதங்களை வாங்கிக் குவித்து விட்டது என்று அர்த்தம்.
இலங்கை அரசியல் திசையைத் தீர்மானிப்பது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ அல்ல. ராணுவம்தான். அதனால்தான், அமைதி உடன்பாட்டையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தது. அந்த ராணுவத்தில் ஈழத்தமிழர்கள் எந்தப் பொறுப்பிற்கும் வரமுடியாது. தமது பராக்கிரமத்தைக் காட்ட ஈழத்தை இலங்கை ராணுவம் மயான பூமியாகப் பயன்படுத்திக் கொள்ளும்.
வழியில் போகிறவனை அண்ணா என்று அழைத்தானாம். ஏண்டா! மடையா! என்னோடா பிறந்தாய்? முட்டாள்! என்றானாம் வழிப்போக்கன். அப்படித்தான் ஈழத்தமிழர்களை சிங்கள இனவாதிகள் பார்க்கிறார்கள்.
அந்த ராணுவத்திற்கு இசைவான ஓர் அரசு இப்போது அமைந்திருக்கிறது. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தா ராஜபட்சே நாடாளுமன்றத்தில் முதல் உரை நிகழ்த்தினார்.
இலங்கை அரசு, சிங்கள இனவாதப் பேரரசுதான் என்பதனை அவர் தெளிவாக அறிவித்தார். இதுவரை சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஈழத்தமிழர்களுக்கு அளித்த உறுதிமொழியையும் உதறித் தள்ளினார்.
இலங்கைக்கு, சிங்களவர்களின் ஒற்றை ஆட்சிதான், கூட்டாட்சி என்பது இல்லை என்றார். ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். இது ஈழ மக்களுக்கு விடுத்த போர் பிரகடனமாகும்.
இந்தப் பிரகடனம் கேட்டு ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி அடையவுமில்லை. வியப்படையவும் இல்லை. சிங்கள இனவாதிகள் தங்களுக்கு எந்த உரிமையும் தரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். உரிமையைப் போராடித்தான் பெற முடியும் என்பதனை அவர்கள் அறிவார்கள்.
ஆனால், இலங்கை அரசுடன் ஏன் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்? தங்கள் விடுதலை இயக்கத்திற்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். உரிமைகளை அவர்கள் பெற முடியவில்லையென்றாலும் உலக அரங்கில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. கெரில்லாப் போருக்கு மட்டுமல்ல; சமாதானத்திற்கும் தயார் என்பதனை அவர்கள் உலகிற்கு உணர்த்திவிட்டார்கள்.
சமரசத்திற்கோ, சமாதானத்திற்கோ, உடன்பாட்டிற்கோ தயாராக இல்லை என்பதனை ராஜபட்சே தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் இனி எந்தத் தாக்குதலையும் ராணுவம் எதிர்கொள்ளும் என்று, இலங்கையின் புதிய தளபதி தெரிவித்திருக்கிறார். சூரியனுக்குப் பனிக்கட்டிகள் சவால் விடுகின்றன.
நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய முதல் உரையில் ராஜபட்சே ஓர் நச்சுக் கருத்தை நட்டு, இலங்கைச் சுழலுக்குள் இந்தியாவை இழுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்?
ஐ.நா. மன்றத்தின் உதவியோடு ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வேடிக்கை.
நார்வே நாட்டின் முன் முயற்சியால் ரணில் விக்ரமசிங்கேயுடன் ஈழ விடுதலை இயக்கம் உடன்பாடு கண்டது. அதன் பின்னர் சந்திரிகாவுடன் உடன்பாடு கண்டது. இந்த உடன்பாடுகளை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. ஆனால், ஈழமக்கள் பொறுமையின் பெட்டகமாக இருந்தனர்.
இப்போது இந்தியாவை ஏன் புதிய குடியரசுத் தலைவர் ராஜபட்சே அழைக்கிறார்? அதன் மூலம் ஈழ மக்களை அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அந்தக் கூண்டில் நிற்க வேண்டியது இலங்கை இனவாத அரசுதான். உலகம் அறிய நடுநிலை நாடான நார்வேயின் முன்னிலையில் கையெழுத்திட்ட இரண்டு உடன்பாடுகளையும், எட்டிக்காயாகக் கருதியது அந்த அரசுதான்.
எந்தக் காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும், ஈழத் தமிழர்களை இலங்கையின் மைந்தர்களாக சிங்கள இனவாதம் ஏற்றுக் கொள்ளாது. அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் கருதுகிறது. இனியும் கருதும். போராடித்தான் தங்கள் நியாயத்தை, உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற நிலைக்கு ஈழத்து மக்களைத் தள்ளுவது சிங்கள இனவாதம்தான். அவர்கள் மகாவம்சப் பரம்பரையினராம். புத்த புராணங்களில் ஆதாரங்களைத் தேடுகிறார்கள். ஈழத் தமிழர்கள் நசுக்கப்பட வேண்டிய பொட்டுப் பூச்சிகளாம்.
இந்த முருங்கைப் பந்தலில் நின்று எதற்காக இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள்?
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக சமர வீரா பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் அவர் டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார்.
ஈழப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண புதிய அரசு தயாராக இருப்பதாகப் பிரதமரிடம் தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தை திறந்த மனதுடன் நடைபெற வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி ராஜபட்சே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஈழ விடுதலை இயக்கத்துடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவுகளை அதன் ராணுவமே புதை குழிக்கு அனுப்பியது. இது வரலாறு.
இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை என்று சமர வீரா புதிய திரை விரிக்கிறார். ஆனால், ராஜபட்சேயின் நாடாளுமன்ற உரையில் அதற்கான அறிகுறியே இல்லை.
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காணும் முறையில் ராஜபட்சேயின் உரை அமையவில்லை. போருக்குத் தயார் என்று புதிய ராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி மூலம் தான் ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது, இந்திய அரசின் நிலைப்பாடு. வாஜ்பாய் வகுத்த இந்தக் கொள்கைகளை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இலங்கையில் ஒற்றை ஆட்சிதான்; கூட்டாட்சி இல்லை என்று, நாடாளுமன்றத்தில் ராஜபட்சே அறிவிக்கிறார். பின்னர் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற முடியும்?
இலங்கையில் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சம்மட்டி அடியாகத் தெரிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்கது.
கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பதனை இலங்கை அரசு ஏற்க வேண்டும். ராஜபட்சேயின் உரை திருத்தப்பட வேண்டும். அதுவரை இலங்கை அரசுடன் இந்தியா எந்த உடன்பாடும் கொள்ளக்கூடாது.
ஏனெனில் ஈழப் பிரச்னை என்பது முப்பது லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை. அவர்களுடைய அரசியல் உரிமைகள், பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதில், ஆறுகோடித் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர்.
யுத்தம் என்றால் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்தது. இனி போர் என்றால் கொழும்பில்தான் நடைபெறும்.
Thanks:Kumudam..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............