Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்...
#4
[size=18]இராணுவமே உன் அட்டகாசத்தை உடன் நிறுத்து- இல்லையேல் நீ எரியப் போகிறாய்: பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை!!

யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் தன் அட்டகாசத்தை நிறுத்தாவிட்டால் யாழ்ப்பாணத்திலேயே எரிந்து புதைகுழியாய் போவது நிச்சயம் என்று பொங்கியெழும் மக்கள் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொங்கி எழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில நாட்களாக மக்களது இயல்பு வாழ்க்கையைச் சிதறடித்து போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா இனவெறிப்படைவாதிகள் அப்பட்டமாக மீறி வருகின்றனர். சமாதானத்திற்கான பாதை முடங்கிவிட்டது.

யாழ். மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தும் தக்கவைத்து, போரினைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான தயாரிப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தொடங்கிவிட்டது. சிறிலங்காப் படைகளின் சிங்கள பௌத்த பேரினவாத போக்கு தமிழ்மக்ககளை கோரமாக பலி வாங்கத் தொடங்கிவிட்டது என்பதற்கு கடந்த நாள் சம்பவங்கள் சான்றாகின்றன.

கிருசாந்தி, ரஜனி, சாரதாம்பாள் பாலியல் படுகொலைகள் வரிசையில் மிருசுவிலில் வல்லிபுரக் கோவில், தீவகம், அல்லைப்பட்டி பகுதி எனத் தொடர்ந்து நேற்று முன்தினம் புங்குடுதீவுவில் தர்சினி மீதான பாலியல் கோரச் சம்பவங்கள் நீள்கின்றன.

புங்குடுதீவில் தர்சினியின் நடமாட்டத்தை கவனித்த சிறிலங்கா கடற்படை ஒநாய்கள் அவளை இழுத்துச்சென்று உடலைக் குதறி, மார்பகத்தை சிதைத்து கோரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலையை செய்து கிணற்றுக்குள் வீசிவிட்டனர்.

இக்கோரச் செயலுக்கு அமைதி முறையில் கண்டனம் தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் பொல்லுகளால் தாக்கியும் தங்கள் அநாகரிகச் செயலை நிறைவேற்றிக் கொண்டனர்.

எங்கும் சுற்றிவளைப்பு, தேடுதல் என தமிழன் ஏறிமிதிக்கப்படுகின்றான். தெருத் தெருவாக சந்திக்குச் சந்தி இராணுவ அடாவடிக் கும்பல் நிலைகொண்டு விட்டது. தமிழினின் சுதந்திர நடமாட்டம் கட்டுப்படுகின்றது. அவனது மண்ணிலேயே அவன் அவமதிக்கப்படுகின்றான்.

சொந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வேலி பிரித்து வருகின்றான், விவரம் கேட்கின்றான். அடித்துக் துன்புறுத்துகின்றான். கட்டிப்போட்டு இழுத்தும் செல்கின்றான்.

தமிழ்மக்கள் மீது தொடரும் அடாவடித்தனங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அமைதி ஊர்வலமாகச் யாழ் பல்கலைக்கழக உபவேந்தனார் தலைமையில் சென்றோரையும் விட்டுவைக்கவில்லை.

யாழ். பல்கலைக்கழக அறிவுஜீவிகள், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் தடியடியும் சப்பாத்துக்கால் உதையும் நடந்தேறின.

புண்பட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் மருத்துவமனையில் கிடக்கின்றார்கள்.

எங்கும் சிறிலங்கா படையின் வன்முறையும், அச்சுறுத்தலும் கட்டவிழ்து விடப்படுகின்றன. உயர் அறிவுஜீவிகள் தொடக்கம் சாதாரண விவசாயிகள் தொழிலாளர்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் வரை எவரையும் பேரினவாத அரச பயங்கரவாதம் கடந்த காலத்தில் விட்டுவைக்கவில்லை.

இனியும் நீ வீட்டுவைக்கப் போவதும் இல்லை என்பது எம்ககுத் தெரியும். அதனால் உன் அராஜகத்தை அடக்க நாம் தயாராகிவிட்டடோம்.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டு விட்டது.

சமாதானம் என்ற முகத்திரை கிழிந்துவிட்டது.

சமாதானம் என்ற கோசம் வெறும் பம்மாத்து என்பது தெளிவாகிவிட்டது.

எமது பெண்கள் நீ கிள்ளி எறியும் பகடக்காய்கள் அல்ல!

எமது பெண்கள் புரட்சித் தீயென கனல்கொண்டு விட்டனர்!

தமிழர் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள தயாராகிவிட்டனர்!

தமிழன் நிமர்ந்து விட்டான்!

இனியும் பொறுக்கப் போவதில்லை!!

பொங்கி எழும் மக்கள் படை தயாராகிவிட்டது!!

எனவேதான் சிங்களப் படைக்கு இது ஒர் எச்சரிக்கை-

உன் அடாவடித்தனத்தை நிறுத்து- இல்லையெனில் யாழ். மண் உனது புதைகுழியாகிவிடும்- அழிக்கப்படுவாய்!!



புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-15-2005, 11:31 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:36 AM
[No subject] - by sri - 12-20-2005, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)