Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடியத் தேர்தல் குறித்து தமிழர்கள் விழிப்பு அவசியம்!
#1
ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களில் வழிநடத்தலில் வின்சென்ட் வீரசுந்தரம்

கடந்த மாதம் ஸ்ரீலங்காவில் முடிவடைந்த தேர்தலில் தமிழர்களால் வகுக்கப்பட்ட மதிநுட்பமான நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களை நாம் நன்கு அறியக்கூடியதாகவுள்ளது.

இதேபோல, எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அல்லது நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

....
......

கனேடிய அரசியலில் தமிழர்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டுமாயின், எம்மவர்கள் சகல கட்சிகளிலும் அங்கத்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதொன்றாகும்.

எனினும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், எதுக்கு ஆதரவு அளித்தாhல் எமது "நோக்கம்" நிறைவேறும் என்பதை துல்லியமாக கணிக்க வேண்டிய பொறுப்பு "எங்கள் அமைப்புக்களுக்குள்ள" முக்கிய கடமையாகும். இந்த வரலாற்றுப் பொறுப்பை "எங்கள் அமைப்புக்கள்" சரிவரச் செய்வார்கள் என நம்புகிறோம்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடியத் தேர்தலில் தேசிய அரசியல் கட்சியான பழமைவாதக் கட்சியின் சார்பாகத் "ஸ்ரீலங்காத்" தமிழர் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் போட்டியிடுகின்றார்.

இவரது வெற்றியினை உறுதிப்படுத்தம் முகமாக பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழ் மக்களுக்குக் "கனேடிய அரசியல்" குறித்த நெழிவு சுழிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

http://sooriyan.com/index.php?option=conte...id=2645&Itemid=
Reply


Messages In This Thread
கனேடியத் தேர்தல் குறித்து தமிழர்கள் விழிப்பு அவசியம்! - by kurukaalapoovan - 12-19-2005, 09:57 PM
[No subject] - by RaMa - 12-20-2005, 07:38 AM
[No subject] - by Rasikai - 12-20-2005, 02:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)