12-19-2005, 09:44 PM
Vasampu Wrote:மணிமாறன்
நீங்கள் முதலில் ஒரு தனிமனிதனைக் குற்றம் சாட்டினீர்கள். இப்போது நிர்வாகத்தை குற்றம் சாட்டுகின்றீர்கள். உண்மையில் நிர்வாகம் குற்றம் செய்திருந்தால் அதற்கு முழு நிர்வாகமே பொறுப்பே தவிர ஒரு தனிநபரல்ல. எனக்கு அந்த கோவில் நிர்வாகம் பற்றி தனிப்பட்டரீதியில் எதுவும் தெரியாது. ஆனால் எனது இலண்டனிலிருக்கும் உறவினர் பலர் தந்த சேதிகளுக்கும் நீங்கள் குறிப்பிடுவதற்கும் நிறைய முரன்பாடுகள். அந்தக் கோவில் நிர்வாகம் தவறு செய்கின்றதென்றால் அதை அந்த கோவிலிலேயே அம்பலப் படுத்துங்களேன். நிச்சயமாக நிர்வாகம் தவறு செய்திருந்தால் உங்கள் நண்பரைப் போன்று பலர் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களும் இவ்விடயத்தில் உங்களோடு ஒத்துழைப்பார்கள். அதை விடுத்து ஒரு தலைப்பட்சமாக உங்கள் கருத்தை மட்டும் இங்கெழுதினால் அவரின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது. ஒருவர் தவறு செய்கின்றாரென்று குற்றம் சாட்டமுன் நாம் நேர்மையாக நடந்து காட்ட வேண்டும்.
வணக்கம் வசம்பு அவர்களே!
இதை நீங்கள் மற்றவர் விடயங்களிலும் பொருத்தி பார்ப்பீர்களானால். பல்வேறு முறன்படும் கருத்துக்களில் இருந்து நீங்கள் விடுதலைபெறலாம்.
தயவாகக் கூறினேன் தவறாக எண்ணாதீர்கள்
நன்றி

