12-19-2005, 07:49 PM
வசம்பண்ணா!
நாங்கள் சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்துவது எமது நடவடிக்கைகளை ஒரு ஒழுங்கு முறைப்படுத்துவது. ஆனால் அந்த விதிமுறைகளிலுள்ள ஓட்டைகளை காப்பரணாக பாவித்து பொதுநலனுக்கு கேடுசெய்பவர்களுக்கு அந்த சட்டவிதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும் அவசியமில்லை. இதை நீங்கள் வேண்டுமாயின் இன்னொரு "மனுநீதி" என்று அழைக்கலாம்.
இந்த கோயில் விவகாரத்தில் அங்கு ஒரு நிர்வாகம் இருக்கும் அதன்மூலமாக அணுகலாம்தானே என நீங்கள் வினவியிருந்தீர்கள். சிலவேளைகளில் உங்களுக்கு அந்த கோயில் தொடர்பான முழுமையான விபரங்கள் தெரியாத காரணத்தால் இப்படி சொல்கின்றீர்கள் என எண்ணுகின்றேன். அது ஒரு குழு நிர்வாகம். அந்தக்குழுக்களின் பின்னனி, பிறப்பிடம் எல்லாம் ஊரறிந்த இரகசியம்.
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல எனது நண்பர் அங்கு நிர்வாகம் என சொல்லப்படும் அமைப்பிடம் இதுதொடர்பாக வினவியபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர்கள் தொடர்பான மேலதிக விடயங்களையும் அறிந்தவுடன் எனது நண்பர் "உண்டியலில் போட்ட காசு" என்று எம்ஊர்களில் பொதுவாக சொல்வார்களே அப்படி சொல்லி விட்டுவிட்டார். வேறு என்னதான் அவரால் செய்யமுடியும்.