12-19-2005, 03:07 PM
வலி தெரியாக்காயங்கள் பாகம் 14
காதலுடன் வேணியின் படிப்பும் இனிதாகவே தொடர்ந்தது.அவள் வீட்டுக்கு அந்த கடிதம் வரும் வரைஇலண்டனுக்கு அகதியாய் போன அவள் மச்சான் அனுப்பிய கடிதம் தான் வந்து இருந்தது. அதை உடைத்துப் பார்த்த அவள் அப்பா அம்மாவிடம் கதைத்தது இவளுக்கும் கேட்டது."இஞ்சையப்பா உம்மட மருமோன் விசா கிடைத்து இலங்கைக்கு வாறாராம்.நல்ல நாள் பார்த்து வீட்டை உம்மட தம்பியாக்கள் பொம்பிளை கேட்டு வருவினமாம் தான் அவையளுக்கு கடிதம் போட்டவராம்.எங்கள் விருப்பத்தை உம்மட தம்பியிட்டை சொன்னால் போதுமாம் .எழுத்து முடித்து விட்டு திரும்பி போவhராம் படிப்பு முடிய வேணியும் லண்டனில படிப்பை தொடரலாம்" என்று எழுதி இருக்கு நாங்கள் என்ன சொல்லுவோம் வாற கிழமைக்குள் சொல்லட்டாம்.அப்போ வேணி அம்மா சொன்னா மருமோனும் நல்ல விருப்பம் தானே அவயளின்ரை விருப்பபடி செய்வோம் அப்பா" என்று கதைத்து கொண்டு இருக்க வேணிக்கு உடனே சண்ணை பார்க்கவேனும் என்ற ஆவல் வந்தது " அம்மா நோட்ஸ் கொப்பி வாங்கி கொண்டு வாறன்" என்று சொல்லி விட்டு அவசரமாக் சண் வீடு நோக்கி போன வேணியை அப்போ தான் பஸ்ஸில் இருந்து இறங்கிய சண் கண்டான்
அவனை கண்டதும் வேணிக்கு ஆறுதலாக இருப்பதற்கு பதிலாக அழுகை தான் வந்தது அவள் முகத்தை பார்த்த சண் உடனே கேட்டான் "என்ன வேணி பிரச்சனை" என்று கேட்டபடியே அவளை நெருங்கினான்இ "வாங்கோ எனக்கு தலை வெடிக்குது இண்டைக்கு லண்டன்னிலை இருந்து கடிதம் வந்தது என்னை பொம்பிளை கேட்டு" என்று சொன்ன வேணியின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்தான் சண்.
-தொடரும்-

inthirajith