Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி
#3
ஆயுத ஏந்திப் போராடி தமது உரிமைகளைப் பெற முதற்கட்டமாக 500 மாணவர்கள் தற்பாதுகாப்பு பயிற்சி பெற முன்வருகை
யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் மற்று வன்முறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி தமது உரிமைகளை வென்றெடுப்பது என யாழ் பல்கலைக் கழம மற்றும் மாவணவ சமூகம் முடிவு எடுத்துள்ளது.

இன்று காலை யாழ் பரமேஸ்வராச் சந்தியில் இடம்பெற்ற கண்காணிப்புக் குழு அலுவலகம் நோக்கி மனுக் கையளிக்கச் சென்ற மாணவ சமூகத்தினர் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து பல்கலைகழகத்தில் மாணவ சமூகத்தினர் அவசர ஒன்றுகூடல் ஒன்றை நடத்தி இனிமேல் மாணவர்கள் ஆயுத பயிற்சி பெற்று இராணுவத்தினருக்கு எதிராக உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்படுத என தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஒடுக்கு முறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தம்மைத் தயார்படுத்தவதற்கான தற்காப்பு போர் பயிற்சியினை பெறுவதற்கு பெருமளவான மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளிடம் கோரி இராணுவ அடக்கு முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு போர்ப் பயிற்சியினை பெறுவதற்கு 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவ வன்முறை சம்பவங்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை நண்பகல் அளவில் நடைபெற்ற யாழ் ஒன்றியத்தின் இவசர சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 12-19-2005, 02:09 PM
[No subject] - by நர்மதா - 12-19-2005, 02:12 PM
[No subject] - by தூயவன் - 12-19-2005, 02:18 PM
[No subject] - by iruvizhi - 12-19-2005, 09:06 PM
[No subject] - by kurukaalapoovan - 12-19-2005, 09:46 PM
[No subject] - by Thala - 12-20-2005, 07:22 AM
[No subject] - by MUGATHTHAR - 12-20-2005, 08:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)