12-19-2005, 11:53 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு 14 </b></span>
<b>(வாசிச்சு சிரியுங்கோ சீரியசாக எடுக்க வேண்டாம் )</b>
தூரத்தில் எங்கையோ சங்கு ஊதிற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்புகிறார் முகத்தார் என்னஇது சங்குசத்தம் அபசகுணமெண்டெல்லோ சொல்லுவினம். . . .என்ற படி எழும்பி முன்னுக்கு வருகிறார் கேட்டும் திறந்திருக்கு. . .வாசலிலை வாழைமரம் வேறை கட்டியிருக்கிறாங்கள் கதிரைகளும் போட்டிருக்கு என்ன விசயம் எனக்குத் தெரியாமல் என்ரை வீட்டிலை பக்கத்திவீட்டு அன்னம்மா வாறா என்னவெண்டு கேப்பம் . . .என்னைக் கண்டும் காணாமல்போகுது மனுசி எல்லாம் பொண்ணம்மாவைச் சொல்லனும் இப்ப அயல் சனங்களும் மதிக்குதுகள் இல்லை எங்கை உள்ளுக்கை பிச்சுகொண்டு போற எண்டு ஒருக்கா போய்ப் பாப்பம் . . .அட ஹாலுக்கை நிறையச் சனங்கள் இருக்கு அதென்ன நடுவிலை பெட்டியொண்டு பொண்ணம்மா வேறை அதுக்குப் பக்கத்திலை இpருந்து அழுது கொண்டிருக்கிறா. . .ஆர் அது பெட்டிக்கை. . . . .ஜயோ. . . முகத்தார். . அப்ப இது. . . .
முகத்தாருக்கு இப்பதான் சங்குச் சத்தம் விளங்குது கடவுளே .வாழவேண்டிய என்னை இடையிலை எடுத்து ஏன் இந்தச் சோதனை. .பாவம் பொண்ணம்மா என்னமாதிரி அழுகிறாள் இவ்வளவு நாளும் ரிவிலை நாடகங்கள் பாத்தது இப்பதான் அவளுக்குப் பிரயோசனப்படுகுது. வந்திருக்கிற பெண்டுகள் அவளுக்கு ஒரு ஆறதல் சொல்லுவம் எண்டில்லாமல் என்னதான் தங்களுக்குள்ளை கதைக்குதுகளோ தெரியலை. .திடீரெண்டு பொண்ணம்மா எழும்பி உள்ளுக்கை போறா . . கடவுளே ஒருவரும் அவளைக் கவனிக்கவில்லையே எதாவது தற்கொலைக்கு முயற்சி செய்யப்போறாளோ தெரியேலையே. . பின்னாலை நான் எண்டாலும் போய் தடுக்கவேணும். . .என்னது அறைக்கைபோய் கதவைவேறை சாத்திகிறாள் . ஆ. . .யன்னல் இஞ்சை திறந்திருக்கு இதுக்கிலாலை பாப்பம் என்ன செய்யிறாள் எண்டு . . ஜயோ அலுமாரிக்குப் பின்னாலை ஏதொவை எடுக்கிறாள் புூச்சி மருந்தோ தெரியவி;ல்லையே ..தற்கொலை தான் கன்போம். . .சா. . புருஷன் இல்லை எண்டவுடனை தற்கொலைக்குப் போற பொண்ணம்மா உண்மேலையே பத்தினித் தெய்வம்தான் முகத்தார் தன்னையே அறியாமல் கண் கலங்குகிறார். .சாக முன்னம் அவளின் முகத்தை ஒருக்கா பாப்பம் எண்டு எட்டிப் பாக்கிறார். இதென்ன கூத்து முழுசா ஒரு நெக்ரோ சோடாவை ஒரு இழுவெலை எல்லோ குடிக்கிறாள். . .கொஞ்சநேரம் நானும் தடுமாறிட்டன்தான் சரி. . சரி. . நான் போணா அவளும் வரவேணும் எண்டு சட்டமேயில்லையே.
.வெளியிலை சொந்தங்கள் என்ன செய்யுது எண்டு பாப்பம். . .ஹாலுக்கை வந்த முகத்தார் தனது உருவத்தையும் பாக்கிறார் சா. . என்ன ஒரு வடிவான ஆம்பிளை. . .முகத்திலை இருக்கிற மகிழ்ச்சி. . பெரிய விடுதலை கிடைத்ததுபோல. . . மச்சான் காரன் சாறம் அவிழுறதும் தெரியாம என்ன பண்ணுறான். . .10ரூபா காசுக்கு அலைஞ்சு திரியிறவன் இண்டைக்கு பொக்கட் நிறையக் காசு அக்காகாரியை நல்லாத்தான் ஏமாத்திறான் . . இவளுக்கு வேணும் இவனை வீட்டுப்பக்கம் சேக்காதை எண்டனான் இப்ப நான் போனது அறிஞ்சதோடை வந்து ஒட்டிட்டான் போல. .நீ அடிக்கிற கசிப்புக்கு கிட்டடிலை வந்து சேருவாய்தானே அப்ப வைச்சுக்கிறன். இதென்ன தம்பியன்ரை பெடியொண்டு கோடிப்பக்கம்(வீட்டு பின்பக்கம்) போகுது என்னண்டு போய்ப் பாப்பம். . அட அன்னம்மான்ரை பெடிச்சிவேறை இதுக்கை நிக்குது. இரண்டு பேரும.;. அட கறுமாந்திரமே. . . எங்கை வந்து என்ன பண்ணுதுகள் தடி எடுத்து இரண்டு குடுப்பமெண்டு பாத்தால் ஏலாமல் கிடக்கு. . .
அதுசரி என்ரை பிள்ளைகள் ஒண்டும் வெளியிலை இருந்து வரேலைப் போல கிடக்கு. பொண்ணம்மாட்டை எப்பிடிக் கேக்கிறது. . பேசாம கிட்டப் போய் நிப்பம் யாராவது அவளிட்டை கேப்பினம் தானே. இவ்வளவு தூரம் முன்னுக்கு நிக்கிறன் மனுசிக்கு என்னை தெரிய மாட்டன் எங்குதே. .உயிரோடை திரியேக்கையே அவளுக்கு என்னைத் தெரியிறேலை இனி இப்ப எப்பிடித் தெரியப் போகுது. . .இரண்டு பெடியள் பாக் ஒண்டோடை வாறாங்கள் எதாவது சாப்பாட்டுச் சாமானோ தெரியலை இப்ப என்னத்துக்கு பொண்ணம்மாவை அறைக்கை கூட்டிக் கொண்டு போகினம். . .இண்டைக்கு இந்த இடத்தை விட்டு அசையாமல் என்ன நடக்குதெண்டு பாக்கிறன். . .இஞ்சை பார்டா. . பொண்ணம்மா வேறை சீலை உடுத்து பவுடர் போட்டுக் கொண்டு வாறதை அடடா.. . .வந்த பெடியள் வீடியோகாரப் பெடியள் என்னைப் படமெடுக்கப் போறாங்கள் போல. . .பொண்ணம்மா பாத்தியே சிங்கிள் போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சுபோகும் எண்டு தடுத்தியே இப்ப வீடியோ எடுக்க வெளிக்கிட்டுட்டாய். .பிள்ளையள் வரமாட்டினமாம் அதுதான் விடீயோ எடுத்து அனுப்பப் போறன் எண்டு பக்கத்திலிருந்தவர்களுக்கு பொண்ணம்மா சொல்வது எனக்குக் கேக்கிறது. . . .வீடியோ காரப் பெடியன் நல்லா அழுங்கோ. . அழுங்கோ எண்டு சொல்லி படம் எடுக்க எனக்கு சிரிப்புத்தான் வந்தது. . .இருந்தாலும் பெடியன் தன்ரை கமரை லென்ஸ் பழுதாகிவிடும் எண்டு ஒரு துணியால் எனது தலையையும் நெற்றியையும் மறைத்தது எனக்கு அவமானமா போய்விட்டது. எனக்கு கம்பீரத்தை குடுக்கிறதே அந்த வழுக்கைத் தலைதான் இது தெரியாம. .இவங்கள் எல்லாம் ஒரு கமராமன். ஆனாலும் முகத்தாற்ரை விடீயோ லண்டனிலை ஓடப்போவதை நினைக்க முகத்தாருக்கு பெருமையாகதான் இருந்தது. .
.என்ரை கூட்டாளிமார் யார் யார் வந்திருக்கினம் எண்டு ஒருக்கா வெளியிலை போய் பாப்பம். வெத்திலையும் சுருட்டும் ஓசிலை கிடைக்கிதெண்டு தெரியாச மூஞ்சையெல்லாம் வந்திருக்கு. சரி. . .சரி. . புண்ணியமாப் போகட்டும் என்ரை கூட்டாளி இரண்டு பேரையும் காணேலையே. .எங்கை போட்டாங்கள் சா . . வந்தாங்கள் எண்டால் பேசிக் கொண்டிருக்கலாம் முகத்தார் சலிச்சுப் போய் அதிலை குந்துகிறார். தூரத்தில் சாத்திரியும் புல்லிலை வாறது தெரியுது. அடடா. . நண்பன்கள் எண்டா இப்பிடியெல்லோ இருக்கனும் என்ரை இழப்பு துக்கம் கவலையை மறக்க தண்ணியடிச்சிருக்கிறாங்கள் போல பாவங்கள். . .நல்லா பழகினவைக்கு என்னை தெரியுமாமே எதுக்கும் கிட்டப் போய் பாப்பம். சாத்திரியும் சின்னப்புவும் இருந்த கதிரைக்கு முன்னால் போய் நிக்கிறார் முகத்தார் அவர்களுக்கும் இவரைத் தெரியவில்லை. என்ன கதைக்கிறார்கள். . .
சாத்திரி : சின்னப்பு முகத்தான் பாவம் என்ன உன்னை விடவே சின்ன வயசு போய் சேர்ந்திட்டான்
சின்னப்பு : வாழ்க்கேலை பொய் சூடு வாது எதுவும் இல்லாமல் என்னைப் போல இருந்தா 100 வருஷம் வாழலாம் கண்டியோ இது முகத்தான் எங்களோடை ஒரு கதை மனுசியோடை ஒரு கதை இனி தொழிலும் சுத்துமாத்து கொண்டு போட்டுது. .
அட பாவி சின்னப்பு எத்தனை தரம் கானுக்கை விழுந்து கிடந்த உன்னை கொண்டு வந்து வீட்டிலை சேர்த்திருப்பன். . .உன்னாலை வீட்டிலை மனிசியோடை சண்டை பிடிச்சிருக்கிறன் எல்லாத்தையும் மறந்திட்டு நான் சூடுவாதுகாரன் என்கிறாய் எனக்கு இது வேணுமடா. . . .
சின்னப்பு : சாத்திரி இன்னொரு விசயம் ஒருவருக்கும் சொல்லேலை உனக்கு மட்டும்தான் சொல்லுறன் முகத்தான் என்னட்டை கொஞ்ச காசு வேறை வாங்கினவன் இனி யாரிட்டை கேக்கிறது டீகாயில் கணக்கெண்டு விடவேண்டியதுதான். . .
இதோடா. . ஏன் பொண்ணம்மாட்டை ஒருக்கா கேட்டுப்பாரன் அப்ப தெரியும். . .20ரூபாக்கு வாசலிலை வந்து கிடக்கிற நீ என்னைச் சொல்லுறாய் கடன்காரன் எண்டு சாத்திரி இதையெல்லாம் நம்பாதை மப்பிலை உளறுது. . . .சா. . .என்ன உலகமிது பிள்ளைகள் சாவுக்குத்தன்னும் வராமல் படமெடுக்கிறாங்கள் மனிசிக்காரி என்னடா எண்டால் சோடாவை குடிச்சுக் குடிச்சு அழுகிறாள் கூட இருந்தவங்களும் நான் இல்லை எண்டவுடனை கடக்காரன் சுத்துமாத்து எண்டு சொல்லுறாங்கள் எனக்கு இஞ்சை இருக்கவே பிடிக்கேலை . . . .வாசலிலை கறுப்பா கொம்போடை 2பேர் நிண்டு உன்னைக் கூப்பிற மாதிரி தெரியுது. . .அது எப்பிடி அவங்களுக்கு மட்டும் என்னைத் தெரியுது. . .ஓ. . .இவைதான் என்னைக் கூட்டிட்டுப் போக வந்த தூதரே. ..சரி வாறன். . .
தூதர் : வோய். . .எங்கை நிக்கிறீர் உம்மை கூட்டிட்டுப் போகேக்கை றோட்டிலை வடிவான பிள்ளையள் 2 போக கொஞ்சம் பிராக்குப் பாத்திட்டம் அதுக்கை எங்களையே சுத்திட்டு இஞ்சை வந்திடடீர் சரியா ஆள்தான்
முகத்தார் : ஜயா மனுசியைப் பாக்க ஆசையாக் கிடந்திச்சு அதுதான் ஒருக்கா பாத்திட்டு போவம் எண்டு வந்தனான்
தூதர் : மனிசிலை அவ்வளவு அன்பா. . அப்பிடியெண்டா சொல்லும் டக் கெண்டு கயித்தை வீசி அவவையும் கூட்டிட்டுப் போவம்
முகத்தார் : ஜயா . .சாமி அங்கை யெண்டாலும் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கப் பிடாதே அந்த கயித்தை இஞ்சாலை என்னைவிட வயசான ஒருஆள் கதிரேலை இருக்கிறார் அவருக்கு வீச ஏலுமெண்டா வீசுங்கோ. புண்ணியமாப் போகும்.
தூதர் : வெரி. . .சொறி. . .எங்களுக்கு இண்டைக்கு மனுசரைத்தான் எடுக்கச் சொல்லி ஓடர். . .வாங்கோ போவம். . . .
முகத்தாரை பிடிச்சு இழுத்துக் கொண்டு போகிறார்கள் முகத்தார் கை காலை உதறுகிறார்
பொண்ணம்மா : இந்த மனுசனுக்கு பக்கத்திலை படுக்கேலாது இடிச்சுப் பிடிச்சுக் கொண்டு கிடக்குது. . .இஞ்சரப்பா. . .எழும்புங்கோ ஒருக்கா. . .
திடுக்கிட்டு எழும்பிய முகத்தார் எங்கை ஆட்கள் எங்கை பெட்டி எண்டு தேடுகிறார் தலையிலை ஒரு தட்டுதட்டி சுய நினைவுக்கு கொண்டு வாறா பொண்ணம்மக்கா. .
முகத்தார் : இஞ்சரப்பா பொல்லாத கனவொண்டு கண்டனான் பயமாக்கிடக்கு. .
பொண்ணம்மா : அப்பிடி யென்ன கனவு கண்டனீயள்
முகத்தார் : எங்கடை வீட்டிலை செத்த வீடு ஒண்டப்பா. . .
பொண்ணம்மா : செத்த வீடு கனவு கண்டால் கலியாண வீடு நடக்குமெண்டு சொல்லுவினம்
முகத்தார் : யாருக்கு. . .எனக்கா. . . .?
(பொண்ணம்மக்கா கட்டிலுக்கு கீழை குனிந்து எதையோ தேடுவது தெரிய சுருண்டு படுக்கிறார் முகத்தார்)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>