12-11-2003, 11:22 AM
நீங்கள் அனைவரும் குறிப்பாக உந்த குருவியும், பரணியும் கதைக்கும் வாதங்கள் அடிமைத்தனம் என்பதை அறியாது பேசும் நியாயங்கள். இன்று வரை பெண்கள் மனித சமுதாயத்தில் இராண்டாந்தர பிரஜைகள் தான். நீஙகள் என்ன சொல்லி மறுத்தாலும் உலகில் உள்ள மனிதம் ஏற்றுக்கொண்ட உண்மை அது. அதனால்தான் இன்று அதை நிவர்த்தி செய்ய வெறும் சலுகைகளை மட்டும் கொடுத்து விட்டு பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று உங்களை போன்றவர்கள் புலம்புகிறீர்கள். பெண் விடுதலை என்றால் நீஙகள் நினைப்பது போல் Nவுலைக்கு போவது, படிப்பது, அரசதலைமையில் இருபப்பது போன்ற விடயங்கள் அல்ல. இன்று பெண்களை சுயமாக கூட சிந்திக்க விடாது தடுப்பது இந்த ஆண் வரக்கமே. அட உங்கடை வீட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். பெண் என்றால் அடக்க ஒடக்கமாக இருக்க வேண்டும், பொம்பளை சிரிச்சா போச்சு, நீ பொம்பிளைப்பிள்ளை (இங்கோ பிள்ளை என்பதே அவர்களை சின்னவர்கள், அறிவில் குன்றியவர்கள் என்பதை பொருட்படுத்தும் பதங்கள்) நீ கவனமாக இருக்க வேண்டும் என்று இன்னமுமு; சொல்வதை தயவு செய்து மறுக்க வேண்டாம். ஒரு பெண் குழந்தை பிறந்தால் அதற்கு சமைக்கும் உபகரணங்கள், பிள்ளை தள்ளும் வண்டில்கள் போன்ற வற்றை அந்த குழந்தைகளுக்கு சின்ன வயசில் கொடுப்பது கூட அவர்கள் அதறகு மட்டும் லயக்கானவர்கள் என்பதை நிலை நிறுத்தவே. ஆண் என்றால் வீரம், எனவே கார், துவக்கு போன்ற விழையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுப்பதுpல் கூட நமது பக்க சார்பு இருப்பதை காண முடியவி;ல்லையா? நமது சமுதாயத்தல் குழந்தை பிறந்ததும் அதன் முழுப் பொறுப்பும் பெண் தலையில் விழுவதை நீங்கள் காணவில்லையா? நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் கதைக்கிறீங்கள் சிங்கள பேரின வாதிகள் போல.. உங்களுடன் கதைத்து பிரியோசனம் இல்லை, ஆனால் விழித்தெழுந்த பெண்கள் உங்களை சுட்டெரிப்பதை பாரக்க முடியாது நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள். பாவம் உங்களை குறை சொல்ல முடியாது, உங்களிற்கள் இருக்கும் அந்த ஆண் என்ற ஆதிக்கத்தையும் ஆணவத்தையும்; தான் குறை சொல்ல முடியும். இப்படி எல்லாம் பேசுவதால் நான் ஒரு பெண்ணிய வாதியாக முடியாதுஈ காரணம் எனது பிற்போக்கு சமுதாயம் எனக் கூட்டி வழர்த்த ஆணாதிக்க வேர்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது. இதை எந்த ஆணும் மறுக்க முடியாது!

