Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய வம்சாவழி தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எந்தவித அ
#1
இந்திய வம்சாவழி தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது - மனோ கணேசன்


இலங்கையினை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இந்தியாவை ஒரு தந்தையாகத் தான் நினைத்து வந்தார்கள்;. ஆனால் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது இவ்வாறு மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி ரொட்றி மண்டபத்தில் இந்திய வம்சாவழி மக்கள் இயக்க தொடக்க நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் மாத்திரம் அல்ல, இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்பிலும் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையம் கிடையாது என்பது மனம் வருந்தக்கூடிய நிதர்சனமான உண்மை.

தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தினருக்கு அதி உயர் பயிற்சிகள், ஆயுத தளபாட உதவிகள், தொழிநுட்ப உதவி, கூட்டு முப்படை உதவிகள், என்ற வரிசையில் இன்று பலாலி வானூர்தித்தள விரிவாக்கல் வரை இந்தியாவின் சிறீ லங்கா பேரினவாதத்திற்கு தாராள மயப்படுத்தப்பட்ட உதவிப்பட்டியல் நீண்டு வருகின்றது என்பதை துயரத்துடன் நாம் அவதானித்தக்கொண்டே வருகின்றோம் என அவர் அங்கு தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

http://www.sankathi.net/
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
இந்திய வம்சாவழி தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எந்தவித அ - by iruvizhi - 12-19-2005, 01:23 AM
[No subject] - by நர்மதா - 12-19-2005, 11:56 AM
[No subject] - by vasanthan - 12-19-2005, 12:46 PM
[No subject] - by நர்மதா - 12-19-2005, 12:58 PM
[No subject] - by vasanthan - 12-19-2005, 01:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)