Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முஸ்லிம்
#27
அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீர் ஆக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!





நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். நாய் வாலை மட்டுமல்ல ஆல மரத்தை பலா ஆக்க முடியாது. நீலநிறக் காகத்தை பச்சைக் கிளி போல் பேச வைக்க முடியாது. கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த இயலாது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் ஒரு தனிப் பாடல் இருக்கிறது. ஒளவையார் பாடியது. இவர் சங்க கால ஒளவையார் அல்ல. பிற்காலத்தில் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி வாழ்ந்த 12ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

ஆலைப் பலாஆக்க லாமோ அருஞ்சுணங்கன்

வாலை நிமிர்த்த வசமாமோ - நீலநிறக்

காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா

மூர்க்கனைச் சீர் ஆக்கலா மோ.

நாய், காகம், கருணையிலா மூர்க்கன் இவற்றோடு ஒளவையார் புத்த சாமிகளையும் சேர்த்திருக்கலாம். உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்தரின் சீடர்களுக்கு பேச்சு வார்த்தை, அமைதி என்றாலே "அலஜி""யாகப் போய் விட்டது. அது இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடங்கி இந்த நோய் இருந்து வருகிறது.

""புலிகளுடன் பேசக் கூடாது. நாட்டில் உள்ள வளங்கள் அத்தனையையும் திரட்டி வி.புலிகளை போரில் தோற்கடிக்க வேண்டும். நாட்டில் இனப் பிரச்சினை என்று ஒன்றில்லை. இருப்பது தமிழ்ப் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த மக்களின் உரிமைகள் எதையும் குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது. அரசின் ஆணை சிறீலங்கா முழுதும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் "" இப்படியான வாசகம் அடங்கிய கடிதம் ஒன்றினை புத்தமத பீடாதிபதிகள் சனாதிபதி சந்திரிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்தக் கடிதத்தில் மூன்று பீடாதிபதிகள், அஸ்கிரியா மதபீடாதிபதி வண. உடுகம சிறீபுத்தராகித்த தேரர், மல்வத்தை வண. இரம்புக்வெல சிறீ விப்பசி மகாநாயக்க தேரர் மற்றும் அமரபுர மகாநாயக்க தேரர், கையெழுத்து இட்டுள்ளார்கள்.

இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து பெண், பொன், மண் ஆசைகளைத் துறந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மும்மணிகளிடம் சரண் அடைந்த துறவிகள் அல்ல.

அரண்மனை போன்ற வீடுகளில் குடியிருந்து, பால் பழம் அருந்தி, பஞ்சு மெத்தையில் படுத்து பென்ஸ் தேரில் பவனி வரும் அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடங்களின் பீடாதிபதிகள். இவர்கள் காலில்நாடாளும் சனாதிபதி சந்திரிகா தொடங்கி சாதாரண அப்புகாமி வரை விழுந்து தொழுது எழும் புத்த(ஆ)சாமிகள்.

கடந்த காலங்களில் இந்த புத்தமத பீடாதிபதிகள், சிங்கள-பொத்த பேரினவாதிகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது எடுத்த அரைகுறை முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள்.

பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், டட்லி சேனநாயக்கா -செல்வநாயகம் ஒப்பந்தம் கைவிடப்பட்டதற்கும் இந்த சக்திகளே காரணமாக இருந்தது.

சென்ற ஆண்டு சிறீலங்கா அரசு பெரிய ஆரவாரத்தோடு கல்வி, தொழிற்துறையில் சமவாய்ப்பு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தது. அந்தச் சட்ட மூலம் அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் அதனை எதிர்த்து புத்த பிக்குகள், கொழும்பு ஆனந்தா, நாலந்தா பௌத்த கல்லூரி மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எதிர்ப்பைக் கண்டு வெருண்டுபோன சனாதிபதி சந்திரிகாவும் அவரது மதிமந்திரி காமினி பீரீசும் அந்த சட்ட மூலத்தைக் கைவிட்டு விட்டதாக அவசர அவசரமாக அறிவித்தார்கள். அதன்பின்தான் அந்த எதிர்ப்பு அலை ஓய்ந்தது.

சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில், மனித நேயத்தின் அடிப்படையில் தீர்த்து வைக்க முன்வந்த நோர்வே நாட்டின் மீதும் இந்த சிங்கள-பௌத்த பேரினவாதிகளது நெற்றிக்கண் பார்வை திரும்பியுள்ளது. நோர்வே நாடு சிறீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது. நோர்வே நாடு வி.புலிகளுக்கு ஆதரவான நாடு. வி.புலிகளை அந்த நாட்டில் சுதந்திரமாக இயங்க விட்டிருக்கும் நாடு என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள்.

கொழும்பில் உள்ள நோர்வே நாட்டு தூதுவரலாயம் முன் வீரவிதான, பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் போன்ற 49து பேரினவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வெளிநாடொன்றின் உதவி தேவைப் பட்டால் அது அண்டையிலுள்ள இந்தியாவாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

நீண்ட காலமாக சிங்கள-பௌத்த பேரினவாதிகள் இந்தியாவிற்கு எதிராக விஷம் கக்கி வந்திருக்கிறார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழு மூச்சாக இந்த சக்திகள் எதிர்த்தன.

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் வித்தியாசம் காணமுடியாத கோளாறுதான் இந்த எதிர்ப்புக்கு உண்மையான காரணம் ஆகும்.

இப்போது கூட வட-கிழக்கில் வாழும் தமிழர்களைக் காட்டிலும் மலையகத் தமிழர்கள் மீது இந்த பேரினவாத சக்திகள் அதிக வெறுப்பைக் கக்கி வருகின்றன.

அப்படியென்றால் இந்தியா மீது ஏன் இந்தத் திடீர்க் காதல்? அது ஒரு அரசியல் தந்திரந்தான். நோர்வே நாட்டை வேண்டாம் என்றால் அது அப்பட்டமானன பச்சை சந்தர்ப்வாத எதிர்ப்பாகத் தெரியும். அதற்காகவே நோர்வே வேண்டாம் இந்தியாவை அழையுங்கள் என்று சொல்கிறார்கள்.

நோர்வே நாட்டை வேண்டாம் என்பவர்கள் அந்த நாடு வாரி வழங்கும் நிதியுதவியை வேண்டாம் என்று சொல்வதில்லை. அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு வெட்கப்படுவதும் கிடையாது.

இவ்வளவிற்கும் நோர்வே நாடு சனாதிபதி சந்திரிகாவின் அழைப்பின் பேரில்தான் சிறீலங்கா அரசு -விடுதலைப் புலிகள் இரு சாராரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர ஒப்புக் கொண்டுள்ளது.

நியாயமாகப் பார்க்கப் போனால், தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால் இந்த சிங்கள-பௌத்த பேரினவாதிகளது கோபம் சந்திரிகா மீதுதான் திரும்பியிருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்ட ஊர்வலம் நோர்வே நாட்டு தூதுவராலயத்துக்கு முன் இல்லாமல் அலரிமாளிகைக்கு முன்னால் இடம் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து எய்தவன் இருக்க அம்பை நோவ வேண்டிய அவசியம் இல்லை.

அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடாதிபதிகளது கோபாக்கினியைத் தணிக்க நீதி அமைச்சர் பீரிஸ் கண்டிக்கு யாத்திரைபோய் திரும்பி இருக்கிறார். இந்த மதபீடாதிபதிகளைச் சந்தித்த அமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தையில் இரகசியம் எதுவும் இருக்காது என்றும் தீர்வுத் திட்டம் மக்கள் முன்னிலையில வைக்கப்படும் என்றும், பெரும்பான்மை சிங்கள-பௌத்த மக்களது உரிமை எதுவும் மெலினப்படுத்த மாட்டாது எனவும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதி மொழி அளித்துள்ளார்.

சிங்கள ஆட்சியாளர்கள் இப்படி ஏன் மஞ்சள் சட்டைக்குள் மறைந்து கொண்டிருக்கும் யுத்த வெறியர்களுக்குப் பயந்து சாகிறார்கள்? இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

(1) சிறீலங்கா சுதந்திரக் கட்சி சரி, ஐக்கிய தேசியக் கட்சி சரி தங்கள் தேர்தல் வெற்றிக்கு இந்த புத்தமத பீடாதிகள், பௌத்த பிக்குகள் இவர்களை நம்பி இருக்கிறார்கள்.

(2) பௌத்த மத பீடாதிபதிகள் சிறீலங்கா அரசு தங்களுடைய ஆலோசனைப்படியும் ஆசியோடும் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளார்கள். இந்த உரிகை சிங்கள மன்னர்களது காலத்திலும் இருந்து தங்களுக்கு இருந்து வந்துள்ளது என்பது அவர்களது வாதம்.

ஒரு கோணத்தில் பார்க்கும்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடாத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு சிங்கள-பௌத்த பேரினவாதிகள் எதிர்ப்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம். காரணம் இந்த புத்தமத பீடாதிபதிகள் முதலில் தங்களை பௌத்த சிங்களவர்களின் இரட்சகர் எனவும் அப்புறந்தான் புத்தரின் சீடர்கள் என்றும் பகிரங்கமாகச் சொல்லி வருகிறார்கள்.

மௌரிய பேரரசின் சக்கரவர்த்தியான அசோகன் கலிங்கப் போரில் ஏற்பட்ட மனித உயிரழிவுகளைப் பார்த்து மனம் உடைந்து போய் அமைதியைத் தேடுகிறான். அன்பு, கருணை, அகிம்சை இவற்றைப் போதிக்கும் புத்தபிரானின் போதனைகள் அவனுக்கு மனச் சாந்தி அளிக்கிறது. புத்தசமயத்திற்கு மதம் மாறிய அவன் புத்தரின் போதனையை பாரதநாட்டில் மட்டுமல்ல அதற்கு வெளியே கடல்கடந்தும் பரப்ப தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.

அங்கே போரினால் ஏற்பட்ட உயிர் அழிவை வெறுத்து அசோகன் மும்மணிகளிடம் சரண் அடைகிறான். ஆனால் இங்கே மும்மணிகளிடம் சரண் அடைந்த புத்தமத பீடாதிபதிகள் போருக்குத் தூபதீபம் காட்டுகிறார்கள். அமைதி வேண்டாம் போர்ப்பறை கொட்டட்டும் என்று முழங்குகிறார்கள்!

துறவுக்கு அடையாளமாக மஞ்சள் அங்கி அணிந்து, இகபர சுகங்களைத் துறந்து, மும்மணிகளை வணங்கி, புத்தரின் பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்குவகை வாய்மைகளைக் கடைப்பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகுவதே பௌத்த தேரர் ஒருவருக்கு புத்தபகவானால் விதிக்கப்பட்ட உயரிய ஒழுக்க நெறியாகும்.

புத்தமதம் மனித உயிர்களுக்கு மட்டும் அல்லாமல் எந்த உயிர்களுக்கும் மனத்தினாலோ, வாக்கினாலோ தீங்கு விளைவிக்கக் கூடாதென்ற உயரிய கோட்பாட்டை கொண்டதாகும்.

பௌத்தர்களில் இல்லறத்தாரும், துறவறத்தாரும் புத்தர், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணம் (அடைக்கலம்) அடைய வேண்டும். இதற்குப் பாலி மொழியில் திரிசரணம் என்பது பெயர்.

புத்தம் சரணம் கச்சாமீ ( புத்தரிடம் அடைக்கல் புகுகிறேன்)

தர்மம் சரணம் கச்சாமீ ( தர்மத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)

சங்கம் சரணம் கச்சாமீ (சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)

இதை மூன்ற முறை சொல்ல வேண்டும். அதாவது மும்மணிகளை மூன்று முறை வணங்க வேண்டும்.""முத்திற மணியை மும்மையின் வணங்கி""என்பது மணிமேகலை வாக்கு.

பௌத்த தேரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்துவகை ஒழுக்கங்கள் (தசசீலங்கள்) ஆவன. (1) கொல்லாமை. (2) கள்ளாமை. (3) பிறனில் விளையாமை. (4)பொய் சொல்லாமை. (5)கள்ளுண்ணாமை. இவை பஞ்ச சீலம் எனப்படும். இவை துறவறத்தோருக்கும், இல்லறத்தோருக்கும் பொதுவானவை. பௌத்த தேரர்கள் இவற்றுடன் சேர்த்து மேலும் ஐந்து ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவை (6) உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை. (7) இசை, ஆடல், பாடல், நாடகம் முதலியவற்றைக் கேட்டலும் பார்த்தலும் செய்யாமை. (8) சந்தனம், மலர் முதலிய நறுமணப் பொருள்களை நீக்குதல் (9) உயரமானதும் விசாலமானதுமான இருக்கைகளை நீக்குதல். (10) நாணயங்களையும் வெள்ளி பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் நீக்குதல் என்பன.

திரிசரணம், தச சீலம் இவற்றை மேற்கொண்டால் மட்டும் போதாது. நிர்வாணம் அடைவதற்கு இவற்றுடன் நான்கு வாய்மைகளையும் எண்வகையான நெறிகளையும் கைக்கொண்டு ஒழுக வேண்டும். நான்கு வாய்மைகளை ஆரிய சத்தியம் என்றும், எட்டு வகையான நெறிகளை ஆரிய அஷ்டாங்க (எட்டு) மார்க்கம் என்றும் கூறுவார்கள். (ஆரிய என்றால் உயர்ந்தது என்று பொருள்).

நான்கு வாய்மைகளாவன (1) துன்பம். (2) துன்ப காரணம். (3) துன்ப நீக்கம், (4) துன்பம் நீக்கும் வழி என்பன.

எட்டுவித உயர்ந்த வழியாகிய அஷ்டாங்க மார்க்கங்களாவன (1) நற்காட்சி. (2) நல்லொழுக்கம். (3) நல்வாய்மை. (4) நற்செய்கை. (5) நல்வாழ்க்கை. (6)நன்முயற்சி. (7) நற்கடைப்பிடி. (8) நற்றியானம்.

இவையே தேரவாத பௌத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

கடவுள் உண்டு என்பதை மறுக்கும் பௌத்தமதம் ஒவ்வொருவரும் தத்தமது நிர்வாணத்தை(முக்தியை) புத்தர் காட்டிய வழிகளில் ஒழுகித் தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. கங்கையில் முழுகுவது, காவிரியில் குளிப்பது, விரதம் இருப்பது, வேள்வி, புூசை, தேர், திருவிழா, காவடி, யாத்திரை இவற்றால் நிர்வாணத்தை அடைய முடியாது என்பது புத்தசமயக் கோட்பாடாகும். ""நான் வழியைத்தான் காட்ட முடியும். ஆனால் அதில் நடக்க வேண்டியவர்கள் நீங்கள்"" என்று திட்டமாகச் சொன்னவர் புத்தர்.

ஆனால் இன்றைய சிறீலங்கா பௌத்தமத பீடாதிபதிகள் புத்தர் போதித்த போதனை எதையும் பின்பற்றுவதாக இல்லை. ஆன காரணத்தினாலேயே இன்று உலகில் மது அருந்துதல், தற்கொலை செய்தல், விபச்சாரத் தொழில் இவற்றில் பௌத்த சிறீலங்காவே முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. நாய்வாலைக் கூட நிமிர்த்தி விடலாம் ஆனால் யுத்தத்திற்கு அறைகூவல் விடும் கருணையில்லா அஸ்கிரிய, மல்வத்தை புத்தமத பீடாதிபதிகளையும் ஏனைய பௌத்த பிக்குகளையும் அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீர் ஆக்க முடியாது.



ரனெநகiநென


ரனெநகiநென
ஆழசந...


லுயாழழ! ளுவைநடீரடைனநச
ஜஊடழளநஸ




ஜஊடழளநஸ


லுயாழழ! ளுவைநடீரடைனநச
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 06:42 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:57 PM
[No subject] - by kuruvikal - 11-04-2003, 06:21 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 06:52 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 01:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 11-10-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-11-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 06:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-12-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-12-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-13-2003, 12:44 PM
[No subject] - by sethu - 12-09-2003, 09:51 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:15 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:17 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)