12-11-2003, 09:17 AM
கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நற்பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை" என்பது தமிழில் வழங்கும் நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த பழமொழிகளில் ஒன்று. அது எல்லோருக்கும் தெரிந்த பழமொழியும் கூட. தமிழக முதல்வர் முத்துவேலர் கருணாநிதிக்கு அது தெரியாதிருக்க நியாயமில்லை.
இன்று நேற்றல்ல ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக பாக்கு நீரணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அப்படிச் சுடப்பட்டோரின் எண்ணிக்கை முந்நூற்றை இதுவரை தாண்டியிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் 788க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
1983ம் ஆண்டிற்கும் 1994ம் ஆண்டு ஆனிமாதத்திற்கும் இடையில் தமிழக மீன்பிடிப் படகுகள் மீது 355 முறை சிறீலங்கா கடற்படை தாக்குதல் நடாத்தியுள்ளது. ஐம்பத்தொன்பது (59) படகுகள் எரிக்கப்பட்டன அல்லது நாசமாக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் மொத்தம் 93 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
கொந்தளிக்கும் கடலில், காற்றைக் கிழித்து, மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு சாவுக்கும் வாழ்;வுக்கும் இடையில் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தினாhல் ஏற்படும் அழிவுகளை மட்டும் அல்லாமல் செயற்கையான அழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் நடுக்கடலில் வைத்து தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிறீலங்கா கடற்படை "" தமிழக மீனவர்கள் எல்லை மீறி எங்கள் கடற்பரப்புக்கள் வந்தார்கள். சுட்டோம்"" என்று திமிரோடு சொல்லிவிடுகிறது.
பாக்கு நீரணையில் இந்திய -இலங்கைக் கடற்பிரதேசத்தைப் பிரிக்க ஏதோ வேலி போட்டிருப்பது போலவும், அந்த வேலி தாண்டி இந்த மீனவர்கள் சென்றது போலவும் சிறீலங்காக் கடற்படை நடந்து கொள்கிறது.
இப்படி நடுக்கடலில் நடக்கும் தாக்குதல்கள், கொலைகள்பற்றி கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ இல்லை. இந்தியக் கடற்படை எந்தவிதத்திலும் இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லை.
தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை. சாகிறவர்கள் தமிழர்கள். சாதாரணமாகவே தமிழ்நாட்டுக் காரர்கள் என்றாலே வடக்கில் இருக்கும் இந்திக்காரனுக்கு இளப்பம் அதிகம். . அதிலும் சாகிறவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில் இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?
இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் என்று போராட்டங்கள் நடாத்தி இராமேசுவரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதி மீனவர்கள் களைத்தே போனார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில வழங்கப்பட்டாலும் அந்த உறதி மொழிகள் பின்னர் காப்பாற்றப்படுவதில்லை.
கடந்த தை மாதம் 3 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வழக்கம்போல் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். அதில் ஒரு மீனவர், பெயர் இராசா, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். அவருக்கு உரிய நேரத்தில் போதிய சிகிட்கை அளிக்கப்படாத காரணத்தாலேயே அவர் இறந்துபட நேர்ந்தது என்று எஞ்;சிய மீனவர்கள் கூறினார்கள். இராசா நெஞ்சுவலியால்தான் இறந்தார் என்று இந்தியத் தூதுவரும் சிறீலங்கா சிறைச்சாலை அதிகாரிகளோடு ஒத்தூதினார். விடயம் அத்தோடு முடிந்து விட்டது. இறந்த மீனவரது குடும்பத்திற்கு சிறீலங்கா அரசிடம் இருந்து இழப்பீடு எதனையும் இந்தியத் தூதுவர் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அப்படியொரு முயற்றி செய்ததாகக்கூடச் செய்தி வரவில்லை.
சிறையில் வாடும் எஞ்சிய 10 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரியும் அவர்கள் சென்ற விசைபடகுகளைத் திரும்பத் தருமாறும் கேட்டு இராமேசுவரம் மீனவர்கள் இரண்டு நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். ஆனால் பலன் என்னவோ வட்டந்தான்.
இந்நாள்வரை இந்தப் பத்து மீனவர்களும் சிறீலங்காவின் கொடிய சிறைக்கூடத்தில் நாளும் பொழுதும் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மிக அண்மையில், சரியாகச் சொன்னால் சித்திரை 25ம் நாள் தமிழக மீனவர்கள் அறுவர் இலங்கைக்குச் சொந்தமான கடற்பகுதியில் எல்லை மீறி நுளைந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி காட்டுமிராண்டித்தனமான முறையில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். சுட்டுக் கொலை செய்யப்பட்டதோடு சிறீலங்கா கடற்படை அமைதி அடையவில்லை. அவர்கள் சென்ற படகையும் நாசம் செய்தது.
குமார், முனுசாமி, அஞ்சப்பன் என்று அழைக்கப்பட்டவர்களே சிறீலங்காக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நடுக்கடலில் பலியாகிய அப்பாவித் தமிழர்கள் ஆவர்.
எஞ்சிய வேலுச்சாமி, அரிச்சந்திரன், சந்திரசேகரன் என்ற மூவரும் படுகாயம் பட்டு மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களது உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பிட்ட மீனவர்கள் எல்லை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் புகுந்தார்கள் என்று சொன்னால் அவர்களை கைது செய்வதுதானே? அவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?
அதிசயம் என்னவென்றால் இம்முறை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கொஞ்சம் விழித்துக் கொண்டு இந்தப் படுகொலையைக் கண்டித்துள்ளார்கள். திரு. வீரமணியின் தலைமையிலான திராவிடர் கழகம் இந்தப் படுகொலையைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்கு செய்யதுள்ளது.
இதைவிட மிகப் பெரிய உலக அதிசயம் என்னவென்றால் தமிழக முதல்வர் கருணாநிதியும் சிறீலங்கா அரசு தமிழக அரசின் பொறுமையைச் சோதிப்பதாக திருவாய் மலர்ந்துள்ளார். "அத்து மீறி நுழைந்தால் கைது செய்வதுதானே? சுடச் சொல்லி எந்தச் சட்டம் சொல்கிறது" என்று முதல்வர் சூடாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்படி "சிறீலங்கா அரசு தமிழகத்தின் பொறுமையை சோதிப்பதாகவும், இப்படியான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்றால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்" என்று மனோகரா, பராசக்தி பாணியில் முதல்வர் கருணாநிதி பேசுவது இதுதான் முதல் தடவை அல்ல. அவ்வப்போது இப்படி வீரவேசமாகப் பேசுவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
முதல்வர் கருணாநிதிக்கு சூடு சொரணை இருக்குதோ இல்லையோ இப்படி தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சிறீலங்காவின் சிங்களக் கடற்படையினரால் காக்கை குருவிபோல் சுடப்பட்டு கொலைசெய்யப்படுவதைப் பார்க்க உலகளாவிய தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது.
சிறீலங்கா ஒரு சுண்டக்காய் நாடு. விடுதலைப் புலிகளிடமே சிறீலங்காவின் கடற்படை உட்பட முப்படையும் கும்பிடக் கும்பிட அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நூறு கோடி மக்களைக் கொண்டதும் உலகத்தின் 4வது பெரிய இராணுவத்தையும் உடைய இந்தியாவின் பெருங்குடி மக்கள் ஒரு சுண்டங்காய் அளவு பருமனுள்ள சிறீலங்காவின் கடற்படையினரால் கேட்டுக் கேள்வியின்றி சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.
ஒருவிதத்தில் இந்திய அரசு சிறீலங்காவிடம் தடியைக் கொடுத்து அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சதீவை சிறீலங்காவின் அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன் காரணமாக சுருங்கி விட்டது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.
கச்சதீவு இராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையில் இருந்து 13 மைல் தொலைவிலும் இருக்கிறது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது.
1974ம் ஆண்டு கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி கச்சதீவு சிறீலங்காவிற்குத் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டது. மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும் செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி பின்னர் நீக்கப்பட்டது. 1976ம் ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தந்தின்படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
கச்சதீவு சிறீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்" என்ற முழகத்தை முன்வைத்தது. 1991ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.
1991ம் ஆண்டு ஐப்பசி 4ம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.
கலைஞர் கருணாநிதி பதவி இழந்து எதிர்கட்சி இருக்கைகளில் இருக்க நேரிட்டபோது கச்சதீவை மீட்கும் போராட்டம்பற்றி அவ்வப்போது அறிவித்தார். அறிவிப்போடு சரி. மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் கச்சதீவுப் பிரச்சினையை கலைஞர் கருணாநிதி முற்றாகக் கிடப்பில் போட்டு விட்டார். இதுதான் தமிழனது கச்சதீவு சிங்களவனது தீவாக மாறிய சோகக் கதை.
கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீட்கும்வரை இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களுக்கு பாக்கு நீரணையில் பாதுகாப்பு அடியோடு இல்லை.
இப்போது மாநிலத்தில் மட்டும் அல்ல. மத்தியிலும் திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் பதவி வகிக்கின்றன. கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீளப்பெறவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களது எஞ்சியுள்ள மானத்தை காப்பாற்ற இதுவே நல்ல சமயம். இதனை நழுவவிடக்கூடாது. இல்லாவிட்டால் அவரது வீர வசனங்களில் அர்த்தமே இல்லை. கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
" நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வாஎ ரடி- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி! "
என் அருமைச் செல்வமே! உன் தந்தையின் நன்மைக்குத்தான் உன் வீரக்கரங்களைக் கட்டிப் போட்டேன்! இந்த விசமக்காரி முன் சிரம் தாழ்த்தி நின்றேன்! யாருக்காக?
பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனே அவரையே சிiறியில் போட்ட பிறகு பொறுமைக்கு எங்கிருக்கிறது பெருமை? என் அருமை மனோகரா பொறுத்தது போதும்! பொங்கி எழு!
தாயின் ஆணை கிடைத்து விட்டது! புறப்படு மனோகரா புறப்படு!
மகாராசா எங்களுடைய குடும்பம் எப்படிச் சீரழிந்து விட்டது என்பதைப் பார்த்தீர்களா? கட்டுண்டு தவிக்கும் மனோகரனைப் பாருங்கள் மகாராசா?
ஹா! .....ஹா! ...ஹா!
ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மானிட உருவில் வந்து இந்த மண்ணை வளைக்க வந்த மாபாபிகளே!
இப்படிச் சிரித்தவர்கள் வாழ்ந்ததில்லை! அழுதவர்கள் கெட்டதில்லை! என்று ஜெகம் சொல்லும் மந்திரத்தை மறந்து விட்டீர்களா? செப்படி வித்தையால் செங்கோலை முறியடிக்க வந்த சிறுநரிக் கூட்டமே!
கண்ணீரின் மகிமையை உணர முடியாத கயவர் கும்பலே!
நடிகை கண்ணாம்பாவின் நீண்ட முழக்கத்தின் ஒரு பகுதியைத்தான் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மீட்டு முடிந்த மட்டும் மேலே தந்திருக்கிறேன்.
மனோகரா திரைப்படத்தில் இடம்பெறும் கலைஞர் கருணாநிதியின் இந்;த அனல் தெறிக்கும் வீர வசனங்களுக்கு இப்போது என்ன வந்தது என்ற கேள்விக் கணையை எனக்கு நீங்கள் வீசுவது தெரிகிறது. இதையும் படியுங்கள். அதன்பின் காரணம் தானகப் புரியும்.
"மடிந்தாள் உன்மகன் களத்தில்" என்றான்
மனம் ஒடிந்து நிமிர்ந்தான் தாய்க் கிழவி ஒருமுறை!
"தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு,
களமும் அதுதான்!
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்" என்றாள் - முதுகில் என்றான்!
கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள்,
வாளை எடுத்தாள்,
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
"கோழைக்குப் பால் கொடுத்தேன்"
குப்புற வீழ்ந்து கிடக்கும்
கோழைக்குப் பேர் போர்வீரனா?
முன்பொரு நாள்
பாய்ந்து வந்த ஈட்டிக்கும்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்
அவனுக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே?
நீண்டு கவிதையில் காணப்படும் இந்த சில வரிகளுக்கும் கலைஞர் கருணாநிதிதான் சொந்தக்காரர். சங்ககால எட்டுத் தொகை நூல்களில்; ஒன்றான புறநாற்றில் காக்கைபாடினியார் நற்சென்னையார் என்ற செந்நாப்புலவர் பாடிய பாடலுக்கு (புறம் 278) கல்லுகளை அடுக்கி கொத்தனார் வீடு கட்டுவதுபோல சொல்லுகளை அடுக்கி புதுக் கவிதை தீட்டினாலும் வார்த்தகைளில் கொப்பளிக்கும் வேகத்தையும், சூட்டையும் சாமானியமானதென்று தள்ளிவிட முடியாது!;
1953ம் ஆண்டு கல்லல்குடிப் போராட்டத்தில் களம்சென்று பின்னர் திருச்சி சிறையில் ஆறுமாதக் கடுங்காவல் கைதியாக இருந்தபோது பிறந்த பல கவிதைகளில் இதுவும் ஒன்று. ""வைரமணிகள்"" என்ற நூல் வடிவில் இவை வெளிவந்தன.
இந்த வீர வசனங்களுக்குச்; சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தவர்கள்தான் ஒரு காலத்தில் தமிழ் மக்களிடை, குறிப்பாக கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவ - மாணவிகள் மத்தியில் சங்க காலத்துச் சிறப்பினையும், புறநானூற்றின் பெருமையையும், தமிழின் செழுமையையும் எடுத்துச் சொல்லி இன உணர்வையையும், இன எழுச்சியையும் விழிப்பையும் ஏற்படுத்தினார்கள். அந்தப் பேரெழுச்சி திமுக ஆட்சியைக் கைப்பற்று மட்டும் அதற்குச் சற்றுப் பின்னரும் தீக்கொழுந்தாக சுடரிட்டு எரிந்தது!
தமிழரின் பொற்காலமான சங்ககால புறநானூற்று காட்சிகளை சொல்லோவியமாகத் தீட்டிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வளைந்து கொண்டு வந்த தமிழர்களின் முதுகெலும்பை நிமிர்த்தினார்கள்.
இந்திக்கு எதிரான மொழிப் போரில் "எப்பக்கம் வந்திடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்" என்று பரணி பாடப்பட்டது.
"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள்ளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரியைப் போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
செங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய் கின்;றதமிழ்
எங்கள் மூச்சாம்! "
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தது!
இந்திக்கு எதிரான போரில் பல தமிழ் உணர்வாணர்கள் தங்கள் இன்னுயிரை ஈகை செய்தார்கள். ஆயிரக்கணக்கானோர் " புூங்குயில் கூவிடும் மாஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்றும் "சிறைச்சாலை எங்கள் தவச்சாலை" என முழங்கிய வண்ணம் சிறை போனார்கள். தொண்டர்கள் மட்டுமல்ல பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றார்கள்.
அவையெல்லாம் இன்று கனவாய் பழங்கதையாய் போய்விட்டது. "" விடுதலைப் போராட்டமா? ஆயுதப் போரா? ஐயகோ எனக்கு வன்முறையே பிடிக்காது. அதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறறோம், இப்போதும் எதிர்க்கிறோம், முப்போதும் எதிர்ப்போம்"" என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாட்சிமை தங்கிய டாக்டர், கலைஞர் தமிழினத் தலைவர் முத்துவேலர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு தரம் அல்ல பல தடவை!
தமிழ்நாட்டில் பட்டங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. கலைஞர் கருணாநிதி எத்தனை பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கிறார் பார்த்தீர்களா?
தமிழினத் தலைவர் என்றால் ஒரு தமிழனுக்கேனும் பொல்லாங்கு வந்துற்றால் அவனுக்காக அவர் படமெடுத்தாடும் நாகம் போல் சீற வேண்டாமா?எதிரியை தடிகொண்டு தாக்க வேண்டாமா? முதுகெலும்பை ஒடிக்க வேண்டாமா?
" தருக்கினாற் பிற தேசத்தார்
தமிழன்பால் என் நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தார்
ஆதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் அவர் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின்பத்திற்
குதிக்கும் நாள் எந்நாளோ?"
என்று உயிரோடு இருந்தபோது ஆதங்கப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்ற 22ம் நாள் சனிக்கிழமை ஆனையிறவு - இயக்கச்சி இராணுவ தளங்களை முற்றாகத் துகள்துகளாகத் தகர்த்ததன் மூலம் சிங்கள இராணுத்தின் முதுகெலும்பை நொருக்கினார்கள். அதையிட்டு அண்ணாவின் பெயரையும் பாரதிதாசனின் பெயரையும் நாளொன்றுக்கு நூறுதரம் செபிக்கும் தமிழினத் தலைவர் வாய்திறந்து சில வார்த்தை முத்துக்களைத்தானும் உதிர்ப்பார் என்று சிலர் நினைத்தார்கள். மனிதர் வாயையே திறக்கக் காணோம். அந்த துணிச்சலை இப்போதெல்லாம் நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. புறநானூற்றுக்கு புதிய கவிதை எழுதிய கலைஞர் எப்போதோ இறந்து போனார். இப்போ வாய் திறந்தால் ஆட்சிக்கும் தனது பதவிக்கும் ஆபத்து வந்து விடுவோமோ என்று பயந்து சாகும் வெறும் கருணாநிதிதான் இருக்கிறார்.
வி.புலிகளின் வெற்றியைக் கொண்டாட தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு கடல்மடை போல் பாயும் வீர மறவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஏன் "உள்ள உயிர் ஒன்றுதான் அதுவும் செந்தமிழுக்கென்றால் இன்றே செத்தொழிந்து போகட்டும்" என்று எண்ணிச் செயலாற்றும் எதற்கும் அஞ்சாத, எதிரிகளின் சொற்கணைகளுக்கு கண் இமைக்காத ஒரு தமிழர் படையே தமிழ்நாட்டில் இருக்கிறது.
மாவீரன் திரு. பழ. நெடுமாறன் தலைமையில்; இயங்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சிங்கள இராணுவத்தின் மிகப் பெரியதும் வெல்ல முடியாதது என எதிரியால் இறுமாப்புடன் கூறப்பட்டதுமான ஆனையிறவு இராணுவத்தளம் அடியோடு அழித்து விடுதலைப் புலிகள் வெற்றிக் கொடி நாட்டியதை விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.
"ஆனையிறவை வெற்றிகொண்ட செய்தி தமிழர்கள் காதுகளில் தேனாகப் பாய்கிறது, 20ம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சிpயில் ஒன்றாக ஆனையிறவு இராணுவ தளம் தகர்க்கப்பட்டது தமிழினத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படும் என்று நெடுமாறன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தை மீண்டும் புலிகள் கைப்பற்றப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. தமிழீழ விடிவு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தொடங்கி விட்டது, தன்னிகரற்ற இராணுவத் தளபதியான பிரபாகரன் உயர்ந்து தமிழினத்துக்கு என்றும் அழியாத பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவருக்கும் அவரது தலைமையில் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவீரன் நெடுமாறனிடம் காணப்படும் இந்த மகிழ்ச்சி வெள்ளத்தை, பெருமிதத்தை கலைஞரிடம் காண முடியாது. அதை அவரிடம் எதிர் பார்ப்பது முட்டாள்தனம். அவர்தான் அந்த துர்வாச முனிவர் மேனகைக்குப் பிறந்த தனது குழந்தையை (சகுந்தலை) ஏற்க மறுத்ததுபோல தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காது இருந்து வருகிறார்.
சரி விடுதலைப் போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும். அதை ஆதரிக்கவும், அதையிட்டுப் பெருமைப் படவும் ஒருவருக்குத் தகுதி வேண்டும். அது எல்லோருக்கும் வராது. இராசிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நால்வரில் நளினி நீங்கலாக மற்றவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. நளினிக்குப் பரிந்துரை செய்யததில் ஆச்சரியம் இல்லை. உச்ச நீதிமன்ற மூன்ற நீதியரசர்களில் ஒருவர் நளினிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென்று ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறார். சோனியா காந்தியும் அவ்வாறுதான் பரிந்துரை செய்திருந்தார். அது மட்டுமல்ல மற்ற மூவர்களைப் பொறுத்தளவில் கருணை காட்டப்படுவதை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றுகூடக் கூறியிருந்தார்.
அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட மனிதவுரிமை அமைப்புக்கள் இந்த நால்வரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுள்ளன. இவ்வாறே வடநாட்டு மூத்த வழக்கறிஞர்கள் பலர் இந்த நால்வருக்கும் கருணை காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு மூன்று வலுவான காரணங்கள் முன் வைக்கப்பட்டன.
(1) தூக்குத் தண்டனை மனித நேயம், மனிதவுரிமை அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான தண்டனை. உயிருக்கு உயிர் என்ற கோட்பாடு அநாகரிகமானது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துள்ளன.
(2) இராசிவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் விசாரித்து தீர்ப்பளிக்கப் பட்டது. அந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மரண தண்டனை ஏற்கனவே உச்சநீதி மன்ற நீதிபதிகளால் இல்லத்துச் செய்யப்பட்டது. காரணம் அரசு தரப்பு இந்திய பாதுகாப்புக்கு எதிராக எதிரிகள் சதிசெய்தார்கள் என்று முன்வைத்த குற்றச்சாட்டை உச்சமன்ற நீதிபதிகள் நிராகரித்தார்கள். சதி ஒரு தனிநபருக்கு (இராஜிவ் காந்தி) எதிரானதேயொழிய நாட்டுக்கு எதிரானதல்ல எனவே தடாச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புச் செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தார்கள்.
(3) கொலைக்குப் பொறுப்பானவர்கள் ஏற்கனவே இறந்து போனார்கள். இந்த நால்வரும் கொலையோடு நேரடியாகச் சம்பந்தப் படாதவர்கள்.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமல்ல தூக்குத் தண்டனையைக் கொள்கையளவில் எதிர்க்கும் கலைஞர் நால்வரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு பரிந்துரை செய்திருக்கலாம். தமிழினத் தலைவர் என்று பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஈடாகவும் நடக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் காஞ்சுர மரத்தில் இருந்து தீங்கனிகளை எதிர்பார்க்க முடியாது. கோட்டானிடம் இருந்து கிளிமொழி கேட்க முடியாது.
வி.புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதைக்கூட கலைஞர் ஆதரித்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அதை நியாயப்படுத்த ""ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு இந்தத் தடை பரிந்துரைக்கப் பட்டு வருகிறது"" என்ற சப்பை வாதத்தை கலைஞர் முன்வைத்தார். அப்படியென்றால் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்காமல் அவரையே முதலமைச்சராக மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அவர் வேண்டாம் என்றுதான் கலைஞரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். "" வி.புலிகளை பொறுத்த மட்டில் எனக்கும் ஜெயலலிதாவிற்கும் கருத்து வேறுபாடில்லை"" என்று கலைஞர் சொல்வதைப் பார்க்க அவர்மீது கோபத்திற்குப் பதில் பரிதாபந்தான் பிறக்கிறது!
கலைஞரைப் போன்றவர்கள் மகாகவி பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர் நடிப்பு சுதேசிகள்பற்றி எள்ளி நகையாடினார். இந்தக் கிளிக் கண்ணிகள் முத்துவேலர் கருணாநிதிக்கு சமர்ப்பணம்.

வஞ்சனை சொல்வாரடி- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி!
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே!
நாளில் மறப்பாரடீ"
(யேஅயெயனரஇ 2000)