12-11-2003, 09:15 AM
தொப்பிகள் எத்தனை தொப்பிகள் ?
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு இலாபம் என்பார்கள். சிங்களவர்களும் - தமிழர்களும் இரண்டு பட்டால் முஸ்லிம்களுக்கு இலாபம். முஸ்லிம்கள் என்று சொல்லும்போது முஸ்லிம் பொதுமக்களை நான் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளையே குறிப்பிடுகிறேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் முஸ்லிம்களை அமைச்சராகக் கொள்ளாதஅமைச்சரவை இருந்ததே இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி இவைதான் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வந்திருக்கின்றன. அந்த நாள் தொட்டு இந்த நாள்வரை இந்த இரண்டு கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகித்து வந்திருக்கிறார்கள். இதனால் இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளிலும் முஸ்லிம்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூடுவிட்டுக் கூடுபாய்கிற விக்கிரமாதித்தன்போல மாறி மாறி முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி தாவி இருந்திருக்கிறார்கள்.
எடுத்துக் காட்டுக்குச் சொல்லவேண்டும் என்றால் எம்.எச். மொகமது அலி மூதூர் தொகுதியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டிலும் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குப் போயிருக்கிறார். இரண்டுமுறை தமிழரசுக் கட்சி சார்பில் நின்றும் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் அதில் இணைந்திருந்தார்கள். 1956ல் கல்முனையில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முதலியார் எம்.எஸ். காரியப்பர் வெற்றி பெற்றார். அவரைப்போல அவரது மருமகள் எம்.எம். முஸ்தாபா நிந்தாவுூரில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த வெற்றியைக் கொண்டாட கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதலியார் காரியப்பர் மற்ற முஸ்லிம்களைப் போலல்லாது தான் தொப்பி பிரட்ட மாட்டேன் என்று தலையில் இருந்த தொப்பியைச் சுட்டிக் காட்டிப் பேசி பெரிய கையொலியைப் பெற்றுக் கொண்டார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து அவர் ஆளும் கட்சிப் பக்கம் நாலுகால் பாய்ச்சலில் தாவி விட்டார். அவரைப் பின்பற்றி அவரது மருமகள் முஸ்தாபாவும் கட்சி தாவினார்.
தமிழரசுக் கட்சியில் நெடுங்காலம் நிண்டு பிடித்தவர் ஜனாப் மசூர் மவுலான. தமிழரசுக் கட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு பலமுறை தோல்வி கண்டவர். ஆனால் அவரும் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமமாகி கோட்டல் கூட்டுத்தாபனத்தில் உப தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
இவற்றை குறையாக நான் சொல்லவில்லை. நடந்தவற்றை இளைய தலைமுறையினருக்காக பதிவு செய்கிறேன். அவ்வளவுதான். ஆனானப்பட்ட "சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை" 1977ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் புகுந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தாவி அமைச்சரானார். அவருக்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் சட்டத்தையே திருத்தினார். எதிர்க்கட்சியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சிக்கு தாவலாம். ஆனால் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவமுடியாது. தாவினால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். தர்மிஷ்டர் ஜே.ஆரின் "நீதி" இது!
1988ல் நடந்த பொதுத் தேர்தலில் இராசதுரை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். அதனாலென்ன. ஒன்றும் கெட்டுப் போகவில்லை.ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருக்கு தூதுவர் பதவி கொடுத்து மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆங்கிலம் தெரியாமல் அவர் என்ன பாடுபட்டாரோ அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
1970ம் ஆண்டு பதியுதீன் மொகமது சிறீலங்கா கட்சி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர்தான் தமிழ்மாணவர்களது உயர் கல்விக்கு எதிரான தரைப்படுத்தலை அமுல்படுத்திய புண்ணியவான். அவர் காலத்தில் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியெய்திய முஸ்லிம் மாணவர் எவருக்கும் வேலை இல்லை என்ற பிரச்சினையே இருக்கவில்லை. எல்லோருக்கும் தமிழ் ஆசிரியர் வேலை போட்டுக் கொடுத்தார்! ஏற்கனவே ஆசிரியர்களாக இருந்தவர்கள் பள்ளிக் கூட அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டார்கள். கல்வி அமைச்சில் பார்த்த இடமெல்லாம் நீக்கமற முஸ்லிம் அதிகாரிகள் நிறைந்திருந்தார்கள்! பலாலி, கோப்பாய் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நூற்றுக்கு தொண்ணுhறு விழுக்காடு முஸ்லிம் மாணவர்கள். "காக்காவுக்கு காக்கா செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள்" இதுதான் அமைசர் பதியுதீன் அவரது கொள்கையாக இருந்தது. அதனை ஒளிக்காமல் போகிற வருகிறவர்களிடம் வெளிப்படையாகச் சொன்னார்.
அமைச்சர் பதியுதீன் மொகமது கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இலாபம் அடைந்த ஒரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு முதலாவது எம்.பி. செ. இராசதுரை. இரண்டாயிரம் மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டு சில கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் பதியுதீன் மொகமதுவிடம் இருந்து வாங்கிக் கொடுத்தார். இவையெல்லாம் பழைய குப்பை. கிளறினால் அப்புறம் மூக்கைப் பிடிக்க வேண்டிவரும்.
மக்கள் முன்னணி அரசில் துறைமுகம் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் எம்.எச்.எம். அஷ்ராப். அவரது முழுப் பெயர் முகமது குசேன் முகமது அஷ்ரப். சட்டத்தரணி. அவர் அமைச்சராக இருந்த கடந்த ஆறு ஆண்டுகளில் முஸ்லிம் மக்களது வேலையில்லாப் பிரச்சினையை பெருமளவு தீர்த்து வைத்துவிட்டார்.
அவர் அமைச்சின் கீழ் வரும் கொழும்பு துறைமு அதிகார சபையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை வேலையில் அமர்த்தி இருக்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சில தமிழர்கள் கூட முஸ்லிம் பெயர்களில் வேலையில் சேர்க்கப்பட்டார்கள். இது பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
கடந்த இரண்டுவாரமாக இவர் நடித்த நாடகம் பற்றியே கொழும்பில் இருந்து வெளியாகும் நாள், கிழமை ஏடுகள் இவற்றின் முன்பக்கச் செய்தியாக இருந்தன. சாதாரணமாக அரசியல் செய்திகளை சரியாகக் கணித்து எழுதும் "நம்நாடு" கொழும்பு முகவர் கடந்த வாரம் அஷ்ரப்பையும் அவரது முஸ்லிம் காங்கிரஸ்பற்றியும் எழுதும்போது கோட்டை விட்டு விட்டார். "சவால்விட்டபடியே அரசியல் கூட்டை முறித்தார் அஷ்ரப்! தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ்" என்பதுதான் அவர் எழுதிய செய்திக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு! பாவம். அவர் என்ன செய்வார். மெக்காவில் இருந்து நாடு திரும்பிய அஷ்ரப் விமானநிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த குண்டுதுளைக்காத உத்தியோக வண்டியை திருப்பி அனுப்பி விட்டு அவரது சொந்த வண்டியில் வீட்டுக்குப் போனார். அவரது மெய்பாதுகாப்பாளர்களுக்கும் கல்தா கொடுத்தார். மெக்காவுக்குப் போகுமுன் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக 22 பக்கக் கடிதத்தைக் கொடுத்த கையோடு அஷ்ரப் உத்தியோக வதிவிடத்தையும் காலி செய்து விட்டார். மெடினாவில் உம்றா யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் அஷ்ராப் மீண்டும் 50 பக்கங்களில் ஒரு சூடான கடிதத்தை சனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதினார். அதில் சிறீலங்கா முஸ்லிம் கட்சிதான் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்றார். தனது கட்சியின் ஆதரவின்றி மக்கள் முன்னணி ஆட்சிக் கட்டில் ஏற முடியாதென்றார். "அம்மணி நீங்கள் பிரபாகரனை மேசைக்கு அழைத்துப் பேசி அரசியல் தீர்வொன்றைக் கண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவின்றி நீங்கள் சமாதனத்தை அடைய முடியாதென்று ( ஆயனயஅஇ நஎநn கை ஆச. Pசயடிhயமயசயn உழஅநள வழ வாந நெபழவயைவiபெ வயடிடநஇ வாந அரஉh-றயவெநன pநயஉந உயnழெவ டிந யஉhநைஎநன றiவாழரவ வாந ஆரளடiஅ உழஅஅரnவைல கரடடல வாசழறiபெ வைளநடக றiவா லழர யனெ ளவசநபெவாநniபெ லழரச உயரளந யனெ அளைளழைn) சனாதிபதி சந்திரிகாவை மிரட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக அமைச்சர் பவுசியை அமைச்சரவையில் இருந்து தூக்காவிட்டால் தனது கட்சி மக்கள் முன்னணியோடு வைத்திருக்கிற கூட்டணியை உடைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிடும் என்றும் சவால் விட்டார்.
இப்படியெல்லாம் அவர் எகிறிக் குதித்ததைப் பார்த்த யார்தான் அவர் தனது விலகல் கடிதத்தை திருப்பிப் பெறுவார் என்றோ, வாலைச் சுருட்டி காலுக்குள் வைத்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிடச் சம்மதிப்பார் என்றோ எதிர்பாத்திருக்க முடியும் ? ஆனால் அஷரப்பின் அரசியல் வாழ்க்கையை அவதானித்து வந்தவர்களுக்கு அவரது அரசியல் குத்துக்கரணங்களையிட்டு ஆச்சரியப்பட மாட்டார்கள்.
இவரது பிறந்த ஊர் அம்பாரை மாவட்டத்தைச் சார்ந்த சம்மான்துறை. பிறந்த திகதி 1948ம் ஆண்டு ஐப்பசி 23. மூன்று பெண்கள் ஒரு ஆண் அடங்கிய குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு. தகப்பன் ஒரு விதானையார். "காரியப்பர் குடும்பம்" என அழைக்கப்படும் இந்தக் குடும்பம் அன்றைய கண்டி அரசர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குடும்ப உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல கிராமங்களின் தலையாரிகளாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988ம் ஆண்டில் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளுடனும் தேர்தல் உடன்படிக்கை செய்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டி போட்டுள்ளது. 1977ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றிக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரப்புரை செய்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. "அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கத் தவறினாலும் நான் தமிழீழத்தை வென்றெடுப்பேன்" என அஷ்ராப் மேடைகளில் மார்தட்டினார். இப்படி மேடைகளில் முழக்கம் செய்வது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.
1988ம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் அஷ்ராப்பும் அவரது முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளாரான ரணசிங்க பிரேமதாசாவை ஆதரித்தது. அப்போதெல்லாம் "பண்டாரநாயக்க" என்ற வார்த்தை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் கெட்ட வார்த்தையாகக் கணிக்கப்ட்டது. எழுபதுகளில் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா, கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமது, அலாவி மவுலானா புடைசூழ காத்தான்குடிக்கு வருகை தந்தபோது அவர்கள் மீது கல்லுகள் வீசப்பட்டது. கல்வீசியவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
ஒரு கட்டுரையாளர் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி அண்மையில் எழுதும்போது அவர் மூன்று தொப்பிகளை வைத்திருப்பதாகச் சொன்னார். ஒன்று அவர் தலையில் போட்டுக் கொள்வததற்கு. மற்றது அரசியல் வளையத்தில் எறிவதற்கு. மூன்றாவது அவர் பேசுவதற்கு ( ஆங்கிலத்தில் ஒருவர் அர்த்தம் இல்லாமல் பேசினால் ர்ந ளை ளிநயமiபெ வாசழரபா hளை hயவ என்று சொல்வது வழக்கம்).
அஷ்ராப் தனது அரசியல் வாணிபத்திற்கு ஏழை முஸ்லிம்களின் வாக்குகளையும் பணக்கார முஸ்லிம்களின் நன்கொடைகளையும் நம்பி இருக்கிறார். அண்மையில் கொழும்பில் வாழும் கொழுத்த செல்வந்தரும், வணிகரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டோடும் நேற்றுவரை கூடிக்குலாவிக் கொண்டிருந்தவருமான ஏ.ஜே.எம். முஸாமில் என்பவரை அஷ்ரப் தூண்டில் போட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு இழுத்துப் போட்டு விட்டார். இந்த இழுப்புக்கு முஸாமில் தலையில் இருக்கும் மூளையைவிட மடியில் இருக்கும் பணம்தான் முக்கிய காரணி என்பது சொல்லாமலே விளங்கும். முஸாமில் இப்போது முஸ்லிம் காங்கிரசின் இன்னொரு முகமான தேசிய ஒற்றுமை முன்னணி (யேவழையெட ருnவைல யுடடயைnஉந (Nருயு)) சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
கொழும்பில் நடந்த தேசிய ஒற்றுமை முன்னணியின் மாநாட்டுக்கு அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய சரத் கொன்கககேயை வந்திருந்தார். உடனே அவரைக் கட்டிப் பிடித்து உறவு கொண்டாடிய அஷ்ரப் அவரை முன்னணியின் உப தலைவராக அஷ்ரப் நியமித்தார். இவர் ஒரு சிங்கள-பவுத்த தீவிரவாதி. தமிழருக்கு எதிராக விஷம் கக்குவதில் பெரிய வல்லுனர். ஆனால் இருபத்து மணித்தியாலங்கள் கழித்து கொன்கககே மக்கள் ஐக்கிய முன்னணியில் போய்ச் சேர்ந்து விட்டார்! இந்த சம்பவம் அமைச்சர் அஷ்ரப் எந்தப் பிசாசோடும் சேரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது அவருக்கும் அவரது கட்சிக்கும் கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. பதவி ஒன்றிலேயே குறி.
அஷ்ரப் கட்சிக்குள் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என கட்சி வட்டாரங்களில் முணுமுணுப்பு இருக்கிறது. அதனை உறுதிப்படுத்துவது முஸாமில் அவர்களது மைத்துனர் எம்.எம். சுகீர், அபுூபக்கர், டாக்டர் ஐ.எம். இலியாஸ் (யாழ்ப்பாண மாவட்டம்) இந்த மூவருக்கும் அஷ்ராப் கட்சியிலிருந்து கல்தா கொடுத்திருக்கிறார். இவர்கள் மூவரும் அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்pனர்களாக இருந்தவர்கள். தன்னை யாரும் அசைக்க முடியாது என்று திமிரோடு பேசுகிறார். குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் எந்தக் கொம்பனும் தன்னை நெருங்க முடியாது என்கிறார். ,அதனை நிரூபிப்பதுபோல வரப்பத்தான்சேனையில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சேகு இசத்தீன் ஆதரவாளர் இருவர் சிறீலங்கா முஸ்லிம் கட்சி ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்! வேட்புமனு தாக்கல் செய்து விட்டு சேகு இசத்தீன் தனது ஆதரவாளர்களுடன் அக்கரைப்பற்றுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கல்முனை, காரதீவு போன்ற கிராமங்களில் தமிழர்களது கடை கண்ணிகளை கொள்ளையடித்து வீடு வாசல்களுக்கு தீயிட்டுக் கொளுத்தியவர்கள் முஸ்லிம் கட்சி ஆதரவாளர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
அடுத்த அமைச்சரவையில் இரண்டு முழு அமைச்சர் பதவிகளையும் இரண்டு அரை அமைச்சர் பதவிகளையும் சனாதிபதி சந்திரிகாவோடு அஷ்ரப் பேரம் பேசி இப்போதே வாங்கிப் போட்டார் எனக் கதை அடிபடுகிறது. மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெறாவிட்டால்? பாய்ச்சலில் வீரராhன அஷ்ரப்புக்கு இருக்கவே இருக்கிறது ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி! அது போனால் இது. ஒன்று போனால் மற்றது. பதவியென்றால் யாருக்கும் எவருக்கும் ஊழியம் செய்ய அவர் காத்திருக்கிறார்.
சும்மா சொல்லக் கூடாது அமைச்சர் அஷ்ரப் காட்டில் இப்போது பலத்த மழை பெய்கிறது. ஒன்றுக்கு மூன்று தொப்பிகள் வைத்திருக்கும் அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
(ளுநிவ 2000) வேலுப்பிள்ளை தங்கவேலு