12-18-2005, 10:09 PM
உப்படி இன்னொருவரின் பெயரிலேயே வந்து தனிநபர் தாக்குதல்களை நடாத்தவதில் எனக்கும் உடன்பாடில்லை. இங்கே எல்லோருக்கும் எது சரி எது பிழை என்று தெரியும். மற்றவர்களின் பெயர்களில் வந்ததை களம் அனுமதித்ததே தவறு. நாளை பிரபாகரன் என்றோ தமிழ்ச்செல்வன் என்றோ யாராவது வந்தாலும் களம் அனுமதித்தே ஆக வேண்டும். ஆகவே இப்படியான தவறான நடவடிக்கைகளுக்கு உங்களைப் போன்றோரே வழியமைத்துக் கொடுக்காமல் நீங்களும் ஆனந்தசங்கரி எனப் பெயரில் வரும் கள உறவும் வேறு புனைப்பெயரில் உங்களின் பெயர்களைப் பதிவு செய்து களமாடுவதே உகந்த செயல் என நான் கருதுகின்றேன். அதே போல் ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். இங்கு தனிநபர் தாக்குலாகத் தொடரும் போது அது களத்தைத்தான் அசிங்கப் படுத்தும். வீட்டுச் சண்டையை வீதிக்குக் கொண்டு வருவது நமக்குத் தான் அசிங்கம். இது என் கருத்துத்தான் திணிப்பல்ல. ஏற்பதும் விடுவதும் உங்களின் விருப்பம்.

