12-18-2005, 07:02 PM
வணக்கம் ஜெயதேவன்...
எனக்கும் நீங்கள் இப்படி எழுதுவதில் உடன்பாடில்லை. எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன அறிவதற்கும், எழுதுவதற்கும், அலசுவதற்கும். தவறுகளை, குற்றங்களை சுட்டிக்காட்டுவதும், அவற்றின் பின்னணியை வெளிப்படுத்துவதும் நல்ல விடயம்தான். ஆனால், அவற்றை களத்தை அசிங்கப்படுத்தாமல் எழுதலாமே? இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு குற்றவாளிகளின் பெயர்களையும் களத்தில் பதிவுசெய்து கண்ட கண்ட மாதிரி எழுதுவார்கள். களம் மேலே அனிதாவும், இரசிகையும் சொன்னதுபோல் குப்பையாகிவிடும். குற்றவாளிகள், தமிழ்த்தேசியத்தை சீர்குலைப்பவர்கள், தமிழர் நலனுக்கு எதிராக செயற்படுபவர்கள், தமிழர் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் என்று பார்க்கப்போனால் பட்டியல் நீளுமல்லவா? அவ்வளவு பேரும் களத்தில் தமது சுயசரிதைகளை எழுதத் தொடங்கினால் அது நாகரீகமானதாக இருக்குமென்று நம்புகிறீர்களா? எனவே உங்களின் சொந்தப் பெயரில் வேறு புனை பெயரிலோ இணைந்து புலத்தில் நடக்கும் சமூகச் சீர்கேடுகள் பற்றி எழுதலாமே.
நீங்கள் இப்படி எழுதுவதால் களத்தில் வீண் சச்சரவுகளும், சண்டைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன.
இன்னொரு யோசனை. நீங்கள் ஏன் உங்களுக்கானதொரு வலைப்பதிவைத் தொடங்கக்கூடாது? ஒரு வலைப்பதிவைத் தொடங்கி அதிலே நீங்கள் என்னென்னெல்லாம் சொல்ல விருப்பமோ அவற்றை அங்கேயே எழுதுங்களேன். அங்கு யாரும் உங்களைத் தடுக்கமாட்டார்கள் தானே?