12-18-2005, 02:44 AM
மிக்க ஆழமாக சிந்திக்க வைத்த ஒரு தலைப்பு, ஆனால் தெளிவுபெற முடியவில்லை. கலாச்சாரம்(பண்பாடு-தூயதமிழ்.) பொதுப்படையாக ஓரு மக்கள் கூட்டத்தின் வாழ்க்கைமுறைமை எனகூறலாம். ஆனால் வரையறுத்து சொல்லமுடியாதெனவே எண்ணுகின்றேன். எப்படி இதனை ஒரு வரையறைக்குள் உட்படுத்த முடியாது இருப்பதுபோல இது தொடர்பான ஆராய்வுகளும் திடமான முடிவுகளாக அமையாது. காலநேரங்களுக்கேற்றபடி மாற்றமடையலாம். முக்கியமாக ஆராய்ச்சியாளரின் கண்ணோட்ட முறைமைக்கேற்ப பலவாறு மாறுபடுமெனச் சொல்லலாம்.
எனவே அது பற்றிய ஒரு விளக்கத்தினைப்பெறுவதற்கு பலகோண கருத்துக்களையும் உள்வாங்குவோம்.
ஆனால் இங்கு பேசப்படுகின்ற விடயம் கலாச்சாரம் என்பதை விடுத்து ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் ஒருகுறிப்பிட்ட இடத்தில் ஒரு குறித்த காலத்தில் எதிர்நோக்கும் இன்னல்களை மையமாக வைத்து நகர்வதனால் மேலே பலர் குறிப்பிட்டிருப்பதனைப்போல கலாச்சாரம் என்பதை பிறிதொரு இடத்தில் ஆராய்தலே நலமாயிருக்கும்.