12-17-2005, 10:31 PM
வணக்கம் இரசிகை...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். யாழ் களத்தின் தோற்றத்தை கவிதையாக தந்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான வரிகள். நாரதர் எழுதியுள்ள அதே வரிகளையே நானும் கவிதையின் மகுடமாகக் கருதுகிறேன்.
உங்கள் கவிதை உணர்வோடு இங்கு சில விடயங்களை நானும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
யாழ்களம் இரசிகை குறிப்பிட்டது போல பலரால் வாசிக்கப்படுகிறது, பல நாடுகளிலிருந்தும். பல்வேறுபட்ட தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் யாழ் களத்தைக் கவனிக்கிறார்கள். பல்வேறு தரப்பட்டவர்களும் யாழ் களத்தில் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு மாணவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை யாழில் உள்ளார்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கியம் - அரசியல் துறை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள்...
இப்படி பட்டியல் நீளும்.
ஊடகங்கள் என்னும்போது தமிழ்த் தேசிய ஊடகங்களும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான ஊடகங்களும் களத்தை பார்வையிடுகின்றன.
ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றும் பலர் யாழ் இணையத்தை தமது கணினியின் முதற்பக்கமாக ஆக்கி வைத்துள்ளார்கள்.
ஈழத்திலிருந்து போராளிகளும் யாழ் களத்தை பார்வையிடுகிறார்கள். பங்கு கொள்கிறார்கள்.
யாழ் களத்திலிருந்து நல்லவிடயங்கள் எடுக்கப்பட்டு வெளியாட்களால் பயன்படுத்தப்படுகின்றன. சில ஊடகங்கள் யாழ் களத்திலிருந்து பல நல்லவிடயங்களை எடுத்து பயன்படுத்துகின்றன.
இன்னும் நிறைய சொல்லலாம்...
எனவே யாழ் களத்தை மேலும் பயனுள்ள களமாக மாற்றியமைக்கவேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது.
யாழ் இணையத்தை மேலும் மெருகூட்ட மோகன் அண்ணாவுக்கு பல யோசனைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செயற்படுத்துவற்கான நேரம், ஆள்உதவி போன்றன குறைவாகவே இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் இவற்றை நிச்சயமாக செய்வோம்.