12-17-2005, 05:12 PM
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 13</b>
மண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டம் போல் அவன் மனதினுள்ளே தன்னை பற்றிய அன்பான காதல் உணர்வுகள் ஓடுவது, வேணியின் கைகளை சண் பற்றி இருக்கும் போது... வேணியால் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
இருவரும் ஒன்றாகவே பஸ்ஸில் வீடு வந்தார்கள் வரும் போது பக்கத்து இருக்கைகளில் அமர்ந்த படியே கதைத்தபடியே வந்தார்கள் அப்போ சண் "வேணி உங்கடை படிப்பு முடியும் வரை நாங்கள் கவனமாக இருக்கவேணும் நீங்களும் கவனமாக படியுங்கோ அடிக்கடி நான் உங்களை பார்க்கவோ, நீங்கள் எங்கள் வீட்டுக்கோ வராமல் இருக்க வேண்டும் இது தான் இப்போதைக்கு நல்லது எங்களுக்கு" அவன் பேச்சில் வேணிக்கு தன்னால் எந்த சங்கடமும் வராமல் இருக்க வேணும் அதனால் அவள் பாதிக்க படக்கூடாது என்ற அக்கறையை புரிந்து கொண்ட வேணிக்கு மனதுக்குள்ளே பெருமையாக இருந்தது.
ஒரு நாள் யாழ் நகரில் டியூசன் முடிந்து வரும் போது அவளுக்கு அருகே வந்த சண் "வேணி நேரம் இருக்கோ என்னுடன் துணிக்கடைக்கு வரமுடியமா" என்று கேட்டான். "ஓ நான் வாறேன்" என்று சொல்லி அவனுடன் துணிக்கடைக்கு போனாள் வேணி. "என்ன வாங்க போறீங்கள்" என்று கேட்டா வேணியிடம்" இல்லை தீபாவளி வருகுது அது தான் உங்களுக்கு ஒரு சாறி வாங்கித் தர ஆசையாக இருக்கு அது தான் உங்களுக்கு பிடித்த சாறி வாங்குங்கோ நான் காசு கொடுக்கிறேன்" என்று சண் சொன்னான்.
அதைகேட்ட வேணிக்கு உண்மையாகவே அவனை அணைத்து முத்தமிட மனதில் ஒரு உத்வேகம் வந்தது இருக்கும் சூழ்நிலை அவள் ஆசையை கட்டிப் போட்டது. "என்னப்பா நீங்கள் என்னை இப்படியெல்லாம் கேட்கிறீங்க உங்களுக்கு எனக்கு என்ன சாறி பொருத்தம் என்று நினைக்கிறீங்களோ அதை எடுத்து தாங்கோ அதை நான் கட்டுறேன்" என்று வேணி சொல்ல சண் அவள் பேச்சை கேட்டுச் சிரித்தான் "ஏனப்பா சிரிக்கிறீங்க " என்று வேணி கேட்க " இல்லையப்பா உங்கள் விருப்பப்படியே வாங்கி தாறன் " என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான் "இல்லை நீங்கள் ஏதோ நக்கலாக சிரிக்கிறீங்க" என்று வேணி சொல்லி விட்டு நடந்து கொண்டு போகும் போதே அவனை நெருங்கி யாருக்கும் தெரியாதபடி அவன் விரல்களை பிடித்த படியே நடக்க தொடங்கினாள்.
அவளுக்கு ஊராக்கள் பார்த்தாலும் பயமில்லை என்ற உணர்வு வந்தது அப்போ அவளிடம் "வேணி வீட்டில் அம்மா அப்பா அன்புடன் கதைக்கிறது போலத் தான் நீங்கள் என்னுடன் கதைச்சீங்கள் அது தான், அதை நினைத்து மனதுக்குள்ளே நினைத்து சிரித்தேன்" என்று சொல்ல "ம் ம் எப்போதும் நீங்கள் எனக்கு உரியவர் தானே பிறகு என்ன தனிய இருக்கும் போது "அத்தான் என்று உங்களை கூப்பிட ஆசையா இருக்கு கல்யாணத்துக்கு பிறகு அப்பிடித்தான் கூப்பிடுவேன்" என்று காதலுடன் அவன் விரல்களை பிடித்தபடியே சொன்ன வேணியை "அதுக்கு என்ன இப்போதே கூப்பிடுங்கோ நல்ல இருக்கும்" என்று சொல்லி கண்னடித்தான் சண்.

inthirajith