12-17-2005, 03:25 PM
ம்ம்ம் சிநேகிதி உங்கள் கட்டுரையின் ஆதங்கம் புரிகிறது
ஆமாம் மயூரம் என்பது சமஸ்கிருத சொல்.
அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர்.

<b> .. .. !!</b>