12-10-2003, 04:07 PM
அப்ப இஞ்சை எழுதிறதை கூட அவையின்றை உரிமையில்லை, அவைக்கு நீங்கள் கொடுத்த சுதந்திரம், அட என்ன கொடுமை, அப்ப எங்களுக்கு இங்கை எழுத ஏதும் தடை முதல் இருந்ததே? பெண்கள் முன்னணியில் நிக்கிறார்கள், அது இது எண்டு நீங்கள் சொல்லுறது சரி ஆனால் அதனால் அவை விடுதலை பெற்று விடடினம் எண்டு நீங்கள் சொல்ல வாற தான் கொடுமை, மகா கொடுமை என்ன தெரியுமே அவையின்றை உரிமையை அவை பெற்றதை நீங்கள் பெரிசா சொல்லிக்காட்டிறீங்கள் பாத்தியளெ அதுவே கொடுமையாக தெரியவில்லை. ஒரு மனிதம் தான் செய்ய வேண்டயது மறுக்கப்பட்டு அது கிடைக்கும் போது அனுபவிப்பது யதார்த்தம். நீங்கள் எழுதலாம், பாடலாம், ஆடலாம், தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு எழும்பலாம் அனால் அவை அந்த அந்த இடத்திலை இருக்க வேணும். அண்கள் உலகத்தில் தான் இன்னமும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பாதற்கு ஒரு சில உதாரணங்களளை நான் முதலிலேயே கூறினேன். அது புரியாவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களுக்கு வோட்டு போடும் உரிமை கூட வெகு அண்மையில்தான் வந்தது. புரிந்தால் சரி!

