12-17-2005, 02:08 PM
இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் முழுமையாக மானத்தோடும் மரியாதையோடும் வாழ அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வன் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு ஆறுமுகம் தொண்டமான் அளித்த நேர்காணல்:
கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?
பதில்: புதிய அரச தலைவர் பதவிக்கு வந்த சூழலில் தமிழ் மக்கள் இடையே காணப்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும் கலந்துரையாடினோம்.
கேள்வி: தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டுமென்று ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இக் காலகட்டத்தில் ஏன் நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?
பதில்: எப்போதோ ஒருநாள் இந்த முயற்சி நடைபெறவேண்டும். யாராவது ஒருவர் தொடங்கத்தான் வேண்டும. அதனடிப்படையில் நாம் தொடங்கியுள்ளோம்.
கேள்வி: என்ன தேவை தற்போது உள்ளது?
பதில்: சிறுபான்மையினராகிய தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
கேள்வி: இந்த நேரத்தில் தொடங்கவேண்டிய தேவையென்ன?
பதில்: முன்னர் ஒருவரும் என்னிடத்தில் கேட்கவில்லை. நாங்கள் தான் கேட்கிறோம்.
கேள்வி: மலையகத்தில் இருந்து ஒரு கட்சிவந்து மற்ற இடங்களிலுமுள்ள தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய அரசியல் தேவையேதும் உள்ளதா?
பதில்: அரசியல் தேவையென்று எதுவும் இல்லை. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். சிங்கள மக்கள் ஒன்றிணைந்து செயற்படும் நிலையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடாதா?.
கேள்வி: முன்னர் ஒரு முறை மலையகப் பிரச்சினை வேறு. வடக்கு-கிழக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறீர்களே?
பதில்: மலையகப் பிரச்சினைகள் வேறு. வடக்கு-கிழக்குப் பிரச்சினைகள் வேறு. இப் பிரச்சினைகள் பற்றி பின்னர் பார்க்கலாம். தற்போது தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
சிங்கள இனவாத அரசாங்கத்தில் சிங்களவர்கள் ஒன்றாக இருக்கும் நிலையில் ஏன் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படமுடியாது?. தமிழர்களுக்கு என ஒரு பொதுவான கட்சியிருக்கலாம்.
கேள்வி: இந்த ஒற்றுமையின் மூலம் எதனைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?
பதில்: மானத்தோடும்இ மரியாதையோடும் வாழலாம் என்பதால்தான்.
கேள்வி: இப்போது அப்படி வாழவில்லையா?
பதில்: அரைகுறையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். முழுமையாக வாழலாம் என்பதுதான்.
கேள்வி: ஏனைய கட்சிகளோடு எப்படி நீங்கள் கூட்டுச் சேரப்போகிறீர்கள்?
பதில்: யாரையும் பிரித்து வைத்துச் செயற்படப் போவதில்லை.
கேள்வி: இன்றைய சந்திப்பில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டனவா?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள் என்றார் தொண்டமான்.
நன்றி: புதினம்

[size=14] ' '