12-17-2005, 11:41 AM
மதன் ஏற்கனவே இவ்விடயம் களத்தில் விவாதிக்கப் பட்டதாக எண்ணுவதாக எழுதியுள்ளீர்கள். முடிந்தால் அந்த இணைப்பையும் இங்கு வழங்கி விடுங்களேன். முன்னைய கருத்துக்களையும் பார்க்கலாம். நான் இப்போது தான் பார்க்கின்றேன். மேலே சொல்லப்பட்ட கருத்தின் நாயகி தன் சுயவக்கிரங்களுக்காகவே (பாலியல் ஆசைகள் போன்றன) தமிழ் இளைஞர்கள் எல்லோரையும் குறை சொல்ல முனைகின்றார். எல்லா சமுதாயத்திலும் எல்லா வகையானவர்களும் இருக்கின்றார்கள். ஏன் கறுப்பர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாதா என்ன. எனக்குத் தெரிந்து இலண்டனிலேயே இளம் வயதில் உப்படி ஆட்டம் போட்ட நம் இனப் பெண்கள் சிலர் இப்போது பைத்தியம் பிடித்தவர்கள் போல் தமது தாய் தந்தையிடம் திரும்பி வந்து வாழ்கின்றார்கள். இவர்களை என்ன செய்வது என்று தெரியாமலும் யாராவது தமிழ் இளைஞன் மனமிரங்கி தன் மகளுக்கு வாழ்வு தர முன் வரமாட்டானா என்று ஏங்கியவாறு இவர்களின் பெற்றோர்கள் வாழ்கின்றார்கள்.

