Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ?
#26
நாடாளுமன்றத்துக்கு மிரட்டல் மெயில்: நெல்லை பிரவுசிங் சென்டரில் போலீஸ் அதிரடி சோதனை
டிசம்பர் 17, 2005

சென்னை:

நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த இமெயில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பப்பட்டது உறுதியாகியுள்ளது.




நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டது. இன்ஷா அல்லா என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெயிலின் ஐபி அட்ரஸை வைத்து அது நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பிரவுசிங் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை சரக டிஐஜி விஜய்குமார், எஸ்பி ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் பிராண்ட்பேண்ட் நெட் கபே என்ற அந்த இன்டர்நெட் சென்டரில் சோதனை நடத்தினர்.

அந்த இன்டர்நெட் சென்டரை நிர்வகிக்கும் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரவுசிங் சென்டருக்கு வந்து போனவர்களின் விவரம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த சென்டரில் உள்ள ஒரு கம்ப்யூட்டரில் இருந்து நேற்று காலை 9.30 மணி சுமாருக்கு சிபி இணையத் தளத்தின் மெயில் மூலமாக அமெரிக்கத் தூதரகத்துக்கு மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய நபரின் உருவ விவரத்தை சென்டரை நிர்வகிக்கும் பெண் வழங்கினார். அந்தத் தகவலின் அடிப்படையில் ஒரு உருவத்தை போலீசார் வரைந்துள்ளனர்.

அந்த நபரின் உருவ அமைப்பு கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடையே ஒரு நபரின் உருவத்துடன் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இரவு 10 மணியளவில் அந்த சென்டரை நெல்லை போலீஸ் கமிஷ்னர் ஜெய முரளி தலைமையிலான போலீசார் சீல் வைத்தனர். அந்த சென்டருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த இன்டர்நெட் சென்டரை சோதனையிட்ட பின் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்திலும் போலீசார் சோதனையிட்டனர். இங்கு எதற்காக சோதனை நடந்தது என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டது.
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:45 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 09:58 AM
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:59 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:07 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 10:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:38 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 01:12 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:03 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:07 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:13 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:16 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:22 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:27 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:31 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:35 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:22 PM
[No subject] - by AJeevan - 12-16-2005, 04:37 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:51 PM
[No subject] - by siluku - 12-16-2005, 05:49 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:36 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:37 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 04:54 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:01 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 06:59 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)