12-10-2003, 01:08 PM
Karavai Paranee Wrote:பெண்ணடிமை ஆணாதிக்கம்
உண்மையில் பெண்களிற்கு பெண்களிலிருந்துதான் விடுதலை கிடைக்கவில்லை. இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.
களத்தின் முகப்பில் இடப்பட்ட மகளிர் மாநாடு பற்றிய நிகழ்வு வாசித்தேன். புல்லரித்தேன். இன்னமும் பெண்களிற்கு விடுதலை இல்லை பெண்கள் அடக்கப்படுகின்றார்கள் அடிமைகளாக வாழ்கின்றார்கள் என்று முழங்கிக்கொள்கின்றார்கள். அன்றைய நிகழ்வில் அப்புத்தக வெளியீட்டில் ஆக்கங்களில் எல்லாம் பெண்களின் எழுத்துக்களும் அவர்களின் ஆளுமையும்தான் இருக்கின்றன. இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும். எல்லோருமே குடும்ப பெண்கள்.
அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.
எமது தேசத்தில் மாமியார் கொடுமை இல்லை. (இல்லையென்றே சொல்லலாம்.) ஆண்களால் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள் என்பதும் தற்சமயம் இல்லை. (எங்கேயோ ஒருசில இடங்களில் காணக்கிடைப்பினும்) தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.
எனக்கு ஆணிய பெண்ணிய சிந்தனைகளிலோ ஆணாதிக்க பெண்ணடிமை பிரச்சினைகளிலோ தலையிட்டு அதனை பெரிதாக்க மனம் இல்லை. எனினும் மனதில் பட்டதை சொல்ல தோன்றுகின்றது.
பால்வினைத்தொழில்
விருப்பத்தின் பேரில் யாரும் அதில் ஈடுபாடு கொள்வதில்லை. (பெண்கள்) குடும்ப வறுமை. முக்கிய காரணம் வறுமைதான். அதைவிட வேறு காரணம் காணமுடியாது. எனினும் அதில் இருந்து பெண்களால் மீள முடியாது என சொல்வது வெட்கக்கேடானது. முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும். பெண்களால்தான் பெண்களை திருத்த முடியும். உங்களால் முடியாது என்கின்றபோது ஆண்கள் மீது குற்றம் திணிப்பது இயலாமை என்றே தோன்றுகின்றது. பொங்கி எழும்போதுதான் எதையுமே எம்மால் உடைத்தெறிய முடிகின்றது.
இந்தியாவில் ஒரு பெண்ணால் சீதனக்கொடுமைக்கெதிராக பொங்கி எழு முடிகிறபோது ஏன் எம்மால் முடியாது
சரியான தருணத்தில் தரப்பட்ட சரியான கண்ணோட்டத்துடனான கருத்து....! நன்றி பரணி தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு....!
இதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம்...சரியான சிந்தனைகளும் மாற்றங்களுமே சமூகத்தை வளம் மிக்க பாதையில் வழிநடத்தும்...!
:twisted:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

