Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ?
#24
இந்திய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு புரளி

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை இந்திய நேரம் 11.48 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக இந்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாடில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல், தமிழக தலைநகர் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து, உள்ளூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் புதுதில்லிக்கு தகவல் தெரிவித்தனர் என்றார் சிவ்ராஜ் பாடில்.

இரு அவைகளிலும் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு, ஆபத்தான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், மதியம் 3 மணியளவில் மீண்டும் கூடின.

மக்களவை மீண்டும் கூடியபோது மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் இன்றைய சம்பவம் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் எப்போதும் விழிப்புடன் இருப்போம் என்றும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பணியமாட்டோம் என்றும் உறுதி ஏற்போம் என்றார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 5 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் அப்போது குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:45 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 09:58 AM
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:59 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:07 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 10:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:38 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 01:12 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:03 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:07 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:13 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:16 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:22 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:27 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:31 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:35 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:22 PM
[No subject] - by AJeevan - 12-16-2005, 04:37 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:51 PM
[No subject] - by siluku - 12-16-2005, 05:49 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:36 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:37 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 04:54 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:01 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 06:59 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)