12-10-2003, 12:22 PM
<img src='http://thatstamil.com/images16/cinema/kamal-new34-300.jpg' border='0' alt='user posted image'>
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக வருகிறார்.
மதுரை மாவட்டத்தை பின்புலமாகக் கொண்டு அட்டகாசமான கிராமத்துக் கதையுடன் களம் இறங்கியுள்ளார் கமல்ஹாசன். விருமாண்டி என்ற கேரக்டரில் தூக்குத் தண்டனை கைதியாக நடித்துள்ளார் கமல்.
தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியற்றின் கொடுமைகளையும், அந்தத் தண்டனைகளால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தப் படத்தில் அப்பட்டமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் கமல்.
வெறும் கிராமத்துப் படம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதே சமயம் பயங்கர வியப்பையும் அளிக்கும் வகையில் செமையான மெசேஜையும் வைத்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்.
விருமாண்டியின் துணையாக வருவது அபிராமி. இவரது அப்பாவாக நடித்திருப்பது நெப்போலியன். இவர் நல்லம நாயக்கர் என்ற பெயரில் ஊர்த் தலைவராகவும் வருகிறார். தூக்குத் தண்டனைக் கைதிகளின்பால் அனுதாபம் காட்டும் நல்ல ஜெயில் அதிகாரியாக வருகிறார் நாசர். விருமாண்டியின் கூட்டாளியாக கொத்தாள தேவர் என்ற பெயரில் வருகிறார் பசுபதி.
ஏஞ்சலா என்ற கேரக்டரில் ரோகிணி நடித்துள்ளார். டாகுமென்டரி படம் எடுக்கும் பெண்மணியாக நடித்திருக்கும் அவர், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பேட்டி எடுத்து உலகுக்கு அவர்களின் அவல நிலையை வெளிப்படுத்துகிறார்.
விருமாண்டிக்குத் தெரிந்ததெல்லாம் அடி, உதை, வெட்டுக் குத்துதான். ஆனால் அந்த வன்முறைக்குப் பின்னால் என்ன உள்ளது, பின்னணி என்ன என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்த கதையும்.
கிட்டத்தட்ட தேவர் மகன் போலத் தெரிந்தாலும், அதையும் மீறி சமூக அக்கறை தொனிக்கும் கருத்தை கமல் கையில் எடுத்திருப்பதை உணர முடிகிறது.
இந்தப் படம் நிச்சயம் ஒரு சினிமாப் படமாக மட்டும் இல்லாமல், தூக்கு தண்டனைக்கு எதிராக சமூக அக்கறையுடன், சமூக பிரச்சினையை அலசும் படமாகவும் இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.
இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டுகிறது. அதேபோல, விரு விரு விருமாண்டி என்ற பாடலும், பெரிய கருப்பத் தேவர் பாடும் பாடலும் படு அட்டகாசமாக வந்துள்ளது. இனி தமிழக கிராமப்புறங்களில் இந்தப் பாட்டுக்களை நித்தம் நித்தம் ஒலிக்கலாம்.
That'stamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>