Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் புதிதாக 10 ஆயிரம் இராணுவ துருப்புக்கள் களமிறக்கம்
#1
வெள்ளி 16-12-2005 07:17 மணி தமிழீழம் யாழ் நிருபர்

யாழ் குடாநாட்டில் புதிதாக 10 ஆயிரம் இராணுவ துருப்புக்கள் களமிறக்கம்

யாழ் குடாநாட்டில் புதிதாக 10 ஆயிரம் படைகள் களம் இறக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து யாழ் காங்கேசந்துறை கடற்படைத் தளத்திற்கு நாளாந்தம் பல கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக யாழ் கடற்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

காங்கேசந்துறைக்கு வந்திறங்கும் இராணுவ துருப்புக்கள் மாலை வேளைகளில் குறிப்பாக 6 மணி 7 மணி போன்ற வேளைகளில் கனரக வாகனங்களில் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டின் ஏனைய இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் குறிப்பாக யாழ் குடாநாட்டு கரையோரப் பகுதிகள், கண்டி வீதி ,பருத்தித்துறை வீதி போன்றவற்றில் 75 மீற்றருக்கு இரு இராணுவ வீரர்கள் தரித்து நின்று கண்காணிப்பு நடவடிக்கையில்

அதேவேளை யாழ் குடாநாட்டில் உள்ள சந்திகளில் 5 தொடக்கம் 7 வரையிலான இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில்

கடற்பாதுகாப்பும் அதிகரித்ததோடு டோரா பீரங்கிப் படகுகளும் நீருந்து விசைப் படகுகளும் பாதுகாப்பு கடமைகளில் அதிகளவு

பலாலி இராணுவ பெருந்தளத்திலிருந்து பல்குழல் ரொக்கட் செலுத்திகளும் டாங்கிகளும் தென்மராட்சி வரணி படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த கனரக ஆயுதங்கள் வரணி சந்தியில் மக்களின் பார்வைக்காக குறிப்பிட்ட மணி நேரம் படையினரால் வைக்கப்பட்டிருந்தது.


Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
யாழில் புதிதாக 10 ஆயிரம் இராணுவ துருப்புக்கள் களமிறக்கம் - by Vaanampaadi - 12-16-2005, 10:41 AM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:24 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)