Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ?
#1
நாடாளுமன்றத்துக்கு வெடி குண்டு மிரட்டல்: அவைகள் ஒத்திவைப்பு பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் வெளியேற்றம்

நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவுக்கு அமெரிக்கத் தூதரகம் தகவல் தந்ததையடுத்து லோக் சபாவும் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டு பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இரு அவைகளிலும் மோப்ப நாய்ப் படைகளும், கமாண்டோக்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது 11.45 மணியளவில் திடீரென சைரன் ஒலி எழும்பியது. இதையடுத்து லோக்சபாவை ஒத்தி வைத்த சபாநாயகர் எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

அதே போல ராஜ்யசபாவை திடீரென ஒத்தி வைத்த துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில் இந்த சைரன் ஒலித்தது. இதையடுத்து பிரதமர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பலத்த பாதுகாப்புடன் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சௌத் பிளாக்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே போல பிற அமைச்சர்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எம்பிக்கள் அனைவரும் அவைகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் நாடாளுமன்றத்தை அங்குலம் அங்குலமாக கமாண்டோக்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தைச் சுற்றி பாராமிலிட்டரிப் படைகளும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதியமைச்சகம் ஆகியவை அமைந்துள்ள சௌத் பிளாக், நார்த் பிளாக் ஆகிய கட்டடங்களைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததாக உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் உங்களுக்குத் தந்ததா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்தார்.

ஆனால், அவையில் இருந்து அவசரமாக வெளியேறிய பாஜக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் மத்திய உளவுப் பிரிவான ஐபிக்குத் தகவல் தந்துள்ளது என்று அமைச்சர்ள் தெரிவித்தனர் என்றார்.

இரு அவைகளும் மீண்டும் 3 மணிக்குக் கூடும் என விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பாதகவும் பதற்றமடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்தார்.

வெடிகுண்டு குறித்து நீங்கள் தான் தகவல் தந்தீர்களா என டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கேட்டபோது, பாதுகாப்பு விஷயங்கள் குறித்து நாங்கள் ஏதும் பேசுவதில்லை. அதை நீங்கள் இந்திய அரசிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் என அதன் செய்தித் தொடர்பாளர் டேவிட் கென்னடி கூறினார்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. முழுமையான அளவில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது என்றார்.

லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் சோதனைகள் முடிந்து 3 மணிக்கு அவை கூடும் என்றார்.

அதே போல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியும் உறுப்பினர்கள் அனைவரும் 3 மணிக்கு அவைக்குத் திரும்பலாம் என்றார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என லோக்சபா செயலாளர் ஆச்சாரி தெரிவித்தார்.

தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ? - by Mathan - 12-16-2005, 09:38 AM
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:45 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 09:58 AM
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:59 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:07 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 10:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:38 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 01:12 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:03 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:07 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:13 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:16 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:22 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:27 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:31 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:35 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:22 PM
[No subject] - by AJeevan - 12-16-2005, 04:37 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:51 PM
[No subject] - by siluku - 12-16-2005, 05:49 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:36 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:37 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 04:54 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:01 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 06:59 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)