Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவட்டம்!
#1
<b>ஒளிவட்டம்!</b>

<b>கடைசி Exam ல் கடைசிக்கு முதல்க்கேள்விக்கு விடை தெரியாமல் கோவைசரளா கணக்கில் முழிந்து முழிந்து கொண்டிருக்கும் போது " என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்" என்று எங்கோ ஒரு பாட்டு ஒலிப்பது போல ஒரு பிரமை. அடச்சீ..... இப்ப பாட்டு ரொம்ப முக்கியம் என உள் மனசு திட்டித் தீர்க்க சரி கையை உயர்த்தி Profடம் ஒரு try போட்டு பார்ப்பம் என கையை உயர்த்தினேன். கிழவி ஒன்று என்னை நோக்கி ஆடி அசைந்து நடந்து வர 5 நிமிடம் ஆகிவிட்டது! சரி, அதுக்குள்ள என்னத்தை பெரிசா நான் பண்ணித் தொலைக்கப் போறன் என்று மனசை தேத்திவிட்டு, கடசிக்கு முதல் கேள்வியை விளங்க படுத்தச் சொல்லி அன்புக்கட்டளை இட்டேன். மேலும் ஒரு 10 நிமிடம் இன் வரவிற்கு காத்திருக்கச் சொல்லி கம்பி நீட்டியது கிழவி. முன்னால் இருக்கும் சபி மூசி மூசி எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த கறுவல் பென்சிலோடை விளையாடிக் கொண்டு என்னை பார்த்தொரு smile எனக்கும் ஒளிவட்டம் தான்டி "Don't worry " என உறுதிப்படித்தினாள். ஐயோ கடவுளே next semester இந்தக் course offer பண்ண வேணும் என்று நல்லூர்க்கந்தனுக்கு நேர்த்தி வைக்க நல்லூர்க்கந்தனே நேரில் வந்தது போல் Prof வந்து என்னுடைய பிரச்சினையைக் கேட்டார். அந்தாளும் நான் கேட்ட கேள்வியைப் படித்து பார்த்துவிட்டு, cookieக்கு எதிர்பார்த்திருந்த puppy போல இருந்த என்னிடம் "you should know this! " என்று குண்டைத்தூக்கி போட்டார். இவரைப்போய் கேட்டேனே என்னை செருப்பால் அடிக்க வேணும்! " No no always there is next semester! " என்று தேற்றிக்கொண்டு, Exam hallல் Toronto பயணத்துக்கு என்னென்ன தேவையென மனதுக்குள் List போடத் துடங்கினேன்.

"இந்த Torontoவே இப்படித்தான் நேரம் போறது தெரியாது. இந்தா நேற்று வந்தது போல் கிடக்குது ஆனா.... வந்து பத்து நாளாச்சு!" என்று நண்பி சாருவிடம் கூறிக்கொண்டு Elevatorஆல வெளியில வர ஊருல பக்கத்துவீட்டுப் பரமுஅக்கா Lobbல கதிரைல இருந்து வெளியில் கொட்டுகிற Snowவை எண்ணிக்கொண்டிருந்தார். சாரு, இந்தக் கிழவிட்ட மாட்டுப்பட்டா கரைச்சலடி, Let's go by the back door, என்று மெதுவாகச் சொல்லி முடிக்க , பரமுக்கா திரும்பவும் சரியாக இருந்தது, " அட சின்ராசுடை மகளே இங்க வா இங்க வா என்று பரமுக்கா, அருகில் நான் செல்ல, சாரு என்னுடன் வந்தாள். " எப்பஅடி பிள்ளை ottawaவால வந்தனீ?" பரமுக்கா தொடங்க "Here we go... " என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு "ரெண்டு மூண்டு நாளைக்கு முதல்தான் வந்தனான். நீங்கள் எப்படி இருக்கிறியள்? என்று பதிலுக்கு நான் கேட்டேன். "எனக்கு என்னாச்சி குறை, அது சரி உனக்கின்னும் எத்தனை வருசமடி பிள்ளை இருக்குது" என விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல முருங்கை மரத்தில் ஏறினா பரமுக்கா! நானும் பதில் தெரியாவிட்டாலும் அதைச் சொல்லாவிட்டால் என் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என எண்ணி, வழமை போல அதே பொய்யை விட்டேன்."அடுத்த வருடம் co-op செய்யலாம் என இருக்கிறன், அதோட First year ல English படிச்சதால வேற ஒரு வருடம் backup " என்று சொல்லி கிழவியின் கேள்விக்கு years தேடிக்கொண்டிருந்தேன். கிழவியோ" நீ போய் 3.5 வருடம் ஆகுதே இன்னும் 2 வருடம் தேவையா பிள்ளை?" என RCMP கணக்கில் கேள்விக் கணைகளை தொடுத்தது. கடவுளே இந்தக் கிழவி தன்ட வயசை விட்டுட்டு என்ட university yearsசை எண்ணிக் கொண்டிருக்குது என நினைக்க வாழ்க்கை வெறுத்தது!


ஒன்றும் சொல்லமுடியாமல் " ஓமாச்சி நீங்களும் எங்களொட வந்து படிச்சுப் பார்த்தாத்தான் உங்களுக்கு கஷ்டம் தெரியும்!" என்று கொஞ்சம் தைரியத்தை வரவளைச்சுக் கொண்டு சொன்னேன்." அவன் கந்தையர்ட்டை மோள் உன்னோட universityக்குப் போனவள் இப்ப முடிச்சு வேலையும் எடுத்துட்டாள்" என பரமக்கா சொல்லச் சொல்ல எரிச்சல் எரிமலையாகிக் கொண்டிருந்தது!" அவ ஆச்சி 3 வருட Program செய்தவ. நான் 4 வருச Program செய்யுறன், அது வேற... இது வேற,.... " என தமிழ் வாத்தியார் போல பரமக்காக்கு விளங்கப்படுத்தி திரும்பி பார்த்தேன். சாரு Escape ஆகிக் கன நேரமாயிருந்தது. " பரமக்கா என்ட Friend எனக்கு car ல பார்த்துக்கொண்டிருக்கிறா, அப்ப நான் போயிட்டு வாறன்" என பரமக்காக்கு Snow எண்ணும் வேலையைத் தொடர வாய்ப்பளித்து விடைபெறும்போது "you have ten more minitues remaining! " என்ற குரலொலிக்க திடுக்கிட்டுச் சுயநினைவுக்கு வந்தேன் அப்போது தான் பரீட்சை எழுதுக்கொண்டிருப்பது ஞாபகத்துக்கு வந்தது. பரீட்சைதாள்களை ஒப்படைத்த கணம் Busterminalல் காத்திருக்கும் Toronto busக்கு விரைந்தேன்.


யாவும் கற்பனை.</b>
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
ஒளிவட்டம்! - by Rasikai - 12-16-2005, 12:24 AM
[No subject] - by Selvamuthu - 12-16-2005, 01:13 AM
[No subject] - by sOliyAn - 12-16-2005, 02:39 AM
[No subject] - by sathiri - 12-16-2005, 04:12 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 07:38 PM
[No subject] - by narathar - 12-16-2005, 08:30 PM
[No subject] - by shanmuhi - 12-16-2005, 09:11 PM
[No subject] - by tamilini - 12-16-2005, 09:17 PM
[No subject] - by Saanakyan - 12-16-2005, 11:03 PM
[No subject] - by RaMa - 12-17-2005, 12:49 AM
[No subject] - by AJeevan - 12-17-2005, 12:50 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 04:43 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:01 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:03 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:04 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:07 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:08 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:09 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:13 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 05:15 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:19 AM
[No subject] - by Rasikai - 12-17-2005, 05:20 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 07:17 AM
[No subject] - by அருவி - 12-17-2005, 08:55 AM
[No subject] - by ப்ரியசகி - 12-17-2005, 12:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)