Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
#7
Quote:நன்றி மறவோம் உன் நாமம் மறவோம்.
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

(ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24 வயது தமிழக இளைஞன் அப்துல் ரவூப் தீக்குழித்த 15.12.1995 நினைவின் எட்டாண்டு நிறைவில் இக்கவி அவனுக்காய்......)


அப்துல் ரவூப் !
எட்டாண்டின் முன் எங்களுக்காயெரிந்தவன்.
சந்தனங்களாய் புலிகள்
செந்தணலில் எரிந்து கொண்டிருந்த சமயம்
வெந்தணலால் தனைமூட்டி
எங்கள் விழயழுகை பொறுக்காமல்
வெந்தவன்.

இருபத்து நான்கு வயதில்
ஈழத்தவன் வாழ்வுக்கு
ஆதரவுக் கரம் நீட்டி
அணைந்த சுடர்.

மானத்தான் அவன்
மரணத்தையெழுதி வைத்து
அணுவணுவாய் அவன் சுவாசம்
அழித்த து}யவன்.
அன்றோடு அவன் கதை
அழிபட்டுப் போகவில்லை.
இன்றும் அவன் சாவின் பொருள்
எங்கள் நெஞ்சுகளில் எரிகிறது.

நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்.

மாரியில் வந்து சேரும்
மாவீரர் நினைவு நாளில்
அவனுக்காயும் விளக்கெரியும்.
விழிகசிய அவனுக்கும் - எம்
வீரரின் கல்லறைகள்
விழாவெடுக்கும்.

இருவேறு தேசங்களின்
எல்லைகளை அலையின் கைகளால்
எல்லை நாட்டிய உப்பு நீரின்
உவர்ப்பில் கூட அப்துல் ரவூப் - உன்
உயிர் வாசம்.

'இன்னும் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்"
நீ சொல்லிப்போன வார்த்தைகள் இவை.

இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை.

பத்தாண்டின் முன் பேசிய வார்த்தைக்கே
புத்தாயிரம் தாண்டிய இவ்வாண்டில்
பொடாவெனும் பெயரில்
பொல்லெடுத்து ஆடுகிறது.
பேயொன்றின் கதை கேட்டு
உன் தேசம் பேசிய வாய்களையெல்லாம்
மூடிய சிறைகளுக்குள்
மறைத்து வைத்துள்ளது.
இதுதானாம் உங்கள் நாட்டுச் சனநாயகம்.

எது சொல்ல ?
எதைச் சொல்ல ?
எங்களுக்குள் நீங்கள்
இன்றும் இருக்கின்றீர்
தங்களுக்குள் பல நினைத்து
தள்ளியிருந்தாலும் பொறுத்திடலாம்
கொள்ளி எடுத்து வைத்துப்
பேய் கொடிய ஆட்டம்.

பறவாயில்லை நண்ப ,
பொறுத்திருக்கிறோம்
பேய் தன் சுயம் அறிந்து
பெண்ணாகி , எம் பொன்னு}ரைப் , புலிகளைப்
புரிந்திடும் வரை
பொறுத்திருப்போம்.

நன்றி மறவோம் - உன்
நாமம் மறவோம்.
உன் நினைவென்றும் - எம்
உயிர் மடியில் உறைந்திருக்கும்.

12.12.03.
இன்று (15.12) இவரின் நினைவுதினம்.

எமக்காக தனையழித்த இவரை நினைவில் கொள்வோம்.
<b>
?

?</b>-
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 12-15-2003, 11:22 AM
[No subject] - by Paranee - 12-15-2003, 01:21 PM
[No subject] - by anpagam - 12-15-2003, 03:09 PM
[No subject] - by anpagam - 12-15-2003, 03:50 PM
[No subject] - by shanmuhi - 12-15-2003, 08:57 PM
[No subject] - by Aalavanthan - 12-15-2005, 11:57 PM
[No subject] - by RaMa - 12-16-2005, 10:06 PM
[No subject] - by அருவி - 12-17-2005, 09:28 AM
[No subject] - by poonai_kuddy - 12-17-2005, 01:02 PM
[No subject] - by அருவி - 12-17-2005, 01:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)