Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிவாஜி - ரஜனி & ஷங்கர்
#1
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம்.


இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாதா எழுதுகிறார். முதல் முறையாக ரஜினி படத்திற்கு ஸ்டண்ட் அமைக்கிறார் பீட்டர் ஹெய்ன். (அந்நியனில் சும்மா வித்தை காட்டினாரே.. அவர் தான்)


சமீபத்தில் பூஜை போடப்பட்ட இப்படத்தின் ஷýட்டிங் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் தொடங்கியது.¬முதல் காட்சியாக ரஜினி, ஷ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை சுட்டனர்.

தொடர்ந்து ஹைதராபாத்தில் 3 மாதங்கள் வரை ஷýட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக முக்கிய நடிகர்களிடம் 3 மாதத்திற்கான கால்ஷீட்டை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துள்ளார் ஷங்கர்.


சிவாஜி படத்தில் இடம் பெறும் முக்கிய கேரக்டர் ஒன்றில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க ரஜினியும், ஷங்கரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அமிதாப் உடல் நலமின்றி இருப்பதால் அந்த கேரக்டரில் ஆந்திராவைச் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

அது சிரஞ்சீவியாகக் கூட இருக்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷேசம். இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்க இந்தியில் ஆள் தேடி வருகிறார்கள். அது பெரும்பாலும் ராணி முகர்ஜியாக இருக்கக் கூடும் என சிவாஜி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Reply


Messages In This Thread
ரெடி, ஆக்ஷன், சிவாஜி. - by Luckylook - 12-15-2005, 11:47 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 06:30 AM
[No subject] - by rajathiraja - 12-30-2005, 07:05 AM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 08:20 AM
[No subject] - by Mathan - 12-30-2005, 11:08 AM
[No subject] - by Vasampu - 12-30-2005, 01:58 PM
[No subject] - by கறுணா - 12-30-2005, 08:47 PM
[No subject] - by வினித் - 12-30-2005, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)