Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்...
#2
[size=18]தேடுதல்கள் சுற்றிவளைப்புகளைப் படையினர்
நிறுத்தாவிட்டால் தாக்குதல்கள் தொடரும்!
பயிற்சி பெற்ற 250 வீரர்கள் தயார் நிலையில் என்கிறது மக்கள் படை
குடாநாட்டில் சுற்றிவளைப்புகள்,தேடுதல்கள்,கைதுகள் மற்றும் பொதுமக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிடில் இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் நாள்களில் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது பொங்கி எழும் மக்கள் படை என்ற அமைப்பு.
இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் 50 பேர் ஒப்பமிட்டு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் யாழ்.மாவட்டத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.தமது அமைப்பைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட வீரர்கள் குடாநாட்டில் இராணு வத்தினர் மீது தாக்குதல்களை நடத்தத் தயார் நிலையில் உள்ளனர் என்ற தகவலையும் மக்கள் படை வெளியிட்டிருக்கின்றது.
கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குடாநாட்டில் அண்மைக்காலமாக எமது மக்கள் மீது இராணுவ அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக குடாநாட்டில் எமது தேச விடுதலைக்கும்
தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்த கல்வியலாளர்களையும் எமது ஆதரவாளர்கள் பலரையும் ஸ்ரீலங்கா ராணுவமும் அதனோடு இணைந்த ஒட்டுக்குழு வான ஈ.பி.டி.பியும் படுகொலை செய்துள்ளது. அதற்குப் பதிலடியாக நாமும் சிறிலங்கா இராணு வத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தோம். எனினும்,தொடர்ந்தும் இராணுவமானது எமது மக்களை அச்சுறுத்தும் வகையில் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதிலும் அச்சுறுத்துவதிலும் சுற்றிவளைப்புக்கள் மூலம் தேடுதல் நடத்தி எமது மக்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
அண்øமக்காலப் பகுதிகளில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நாமே மேற்கொண்டோம்.கடந்த சில நாள்களாக எமது தாக்குதல்களை இடைநிறுத்தியிருந்தோம். ஆனால் இராணுவம் எம்மக்கள் மீது தனது அராஜகங்களைத் தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான எமது படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குடாநாட்டில் 250இற்கும் மேற்பட்ட எமது வீரர்கள் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களைநடத்தத் தயாராகவுள்ளனர். இராணுவத்தினர் தமது சுற்றி வளைப்புக்கள், கைதுகள் என்பவற்றை உடன் நிறுத்தவேண்டும். இல்லையேல் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருக்கும். எமது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்படின் இராணு வத்தினர் பலர் கொல்லப்படுவர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினராகிய நீங்கள் இராணுவ அராஜகங்களை நிறுத்துவதை உறுதிப்படுத்துவீர்களானால் நாம் எமது தாக்குதல்களை நிறுத்தி தங்களின் அலுவலகத்திற்கு முன்னால் வரத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இனிவரும் நாள்களில் இராணுத்தினர் மீது கடும் தாக்குதல்கள் தொடரும். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்
பொங்கியெழும் மக்கள்படை நேற்றிரவு பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்துள்ள மற் றொரு அறிக்கையில் :
அரச கூலிகளின் அதீத ஆக்கிரமிப்பின் உச்சம் எமது தாயக நிலங்களில் அதிகரித் துள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அண்மைக்காலங்களில் எமது மண்ணில் இராணுவ இயந்திரத்தின் ஆக்கிரமிப்புப் போரானது சுற்றிவளைப்பு என்றும், தேடுதல் என்றும், கைதுசெய்தல் என்றும், துன்புறுத் தல் என்றும், பெண்கள் மீதான பாலியல் வன் முறை என்றும் எமது மக்களின் இயல்பு வாழ்வு முற்றுமுழுதாகப் பாதிப்பு அடைந் துள்ளது. புலிகளைக் கைதுசெய்தல் அல்லது தாக்குதல் நடத்துவோரைக் கண்டுபிடித்தல் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர் கள் கைதுசெய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், புலிகளும் அரசும் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது இராணுவ இயந்திரத்தின் உயிர்க்கொலை களிலிருந்து வீட்டு வேலிகளை வெட்டி அத்துமீறி உட்பிரவேசிக்கும் வரை நீண்டு செல்கிறது. இதை இனியும் அனுமதிக்க முடி யாது.
எனவே, பொங்கியெழும் மக்கள் படை யாகிய நாம் அணிதிரண்டு இராணுவத்தின் இச்செயற்பாடுகளை முழுமையாக எமது மண்ணிலிருந்து அகற்ற முடிவுசெய்துள் ளோம் அவ்வடிப்படையில் பின்வரும் விடயங்களை உடன் நிறுத்தவேண்டும்.
* தேடுதல் என்ற பெயரில் இடம்பெறும் சுற்றிவளைப்புக்கள் உடன் நிறுத்தல்வேண் டும்.
* கைதுசெய்யப்பட்ட எமது உடன்பிறப் புகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
* எமது மக்களின் இயல்புவாழ்நிலை களை பாதிக்கும்வண்ணம் தருவிக்கப்பட்ட இராணுவம், படைநிலைகளிற்கு திரும்பப் பெறுதல் வேண்டும்.
* புதிய இராணுவ முகாம்கள், காவ லரண்கள் அமைத்தல் நிறுத்தப்படல் வேண் டும்.
மக்களின் இயல்பு வாழ் நிலைத் தோற் றத்திற்கான இடையூறாக இருக்கும் இரா ணுவ இயந்திரமயமாக்கல் தொடருமானால் வேட்டொலிகளும் குண்டுச்சத்தங்களும இராணுவ பிணக்குவியல்களும் உருவாவதை அரச கூலிப்படைகளால் தடுக்கவோ, தவிர்க் கவோ முடியாது என்பதனை சிறிலங்கா பேரினவாத அரச கூலிப்படைகளுக்கு அறியத்தருகின்றோம் என்றுள்ளது.

உதயன்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-15-2005, 11:31 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:36 AM
[No subject] - by sri - 12-20-2005, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)