Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு
#2
<b>காட்டிக்கொடுப்பவர்களுக்கு தகுந்தபாடம் புகட்டுவேன் - ஆறுமுகன் தொண்டமான் </b>

சிறுபான்மை சமூக கட்டமைப்பை உடைக்க ஆளும் தரப்பு முனையும் என்றால் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற சமூகத்தினை பிரிக்கும் எண்ணப்பாட்டுடன் சுயநல நிந்தனையுடன் செயற்படுகின்றவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. தமிழழோசைக்கு அவர் நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இது குறித்த மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசு தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று இ.தொ.கா. எடுத்த முடிவு, மக்கள் சார்பாக சிந்தித்து எடுக்கப்பட்டது. அதே போன்று மலையக மக்களும் தங்களது சமூகக் கட்டமைப்பினை நிலைநிறுத்தியே வாக்களித்துள்ளனர்.

இதனால் தனிப்பட்ட நபர்களின் சலுகைக்களுக்காக சமுகத்தை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்திற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இ.தொ.கா.வைப் பிரிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. சுகாதரார துணையமைச்சுப் பதவியை வடிவேல் சுரேஸ_க்கு வழங்கியிருப்பதன் மூலமே இது பகிரங்கமாக்கப் பட்டுள்ளது. எமது கட்சியினை பிரிக்கும் முயற்சிகள் ஆளும் தரப்பினரின் உதவிகளுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக இ.தொ.க. அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும். அடுத்த கட்ட பயணத்திற்கும் நாம் தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார

தகவல்: சங்கதி
[size=14] ' '
Reply


Messages In This Thread
Re: தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு - by தூயவன் - 12-15-2005, 07:16 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 02:08 PM
[No subject] - by narathar - 12-17-2005, 02:27 PM
[No subject] - by Eelathirumagan - 12-17-2005, 02:32 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 02:37 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)