Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பான வேண்டுகோள்
#3
நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் சுனாமி நடந்த நேரத்தில் எங்கள் மக்களுக்கு போக இருந்த நிதியை எப்படி சிங்களப் பேரினவாதிகள் நீதிமன்றம் மூலமாக தடை செய்தார்களோ அதே நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கே கஸ்டத்தை ஏற்படுத்த வேண்டும். இவ் விடயம் மட்டுமல்ல எந்தவொரு விடயத்திலும் சிங்கள தேசத்தில் நடக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கு நாம் முட்டுக்கட்டை போடவேண்டும். அது கூட எம் போராட்டத்தின் மற்றுமொரு பரிமாணமாக சிங்களதேசத்தை அடிபணிய வைக்ககூடும்.

எனது நண்பர் ஒருவர் சுனாமிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இரத்தினபுரி ஊடாக கதிர்காமம் சென்று வந்தார். அக் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பணம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த அரசாங்கம் காட்டுப் பாதைகளில் பல கிலோமீற்றர் து}ரத்துக்கு முதல்தர வீதி அமைப்பை செய்து கெண்டிருந்ததைக் கண்டதாகச் சொன்னார். இதற்கு எப்படி பணம் கிடைத்தது?

கெல்மட் போடுவதற்கு சட்டம் எப்படி என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதனால் தான் ஆலோசனை கேட்டிருந்தேன். ஆனால் ஜேவிபி காலப்பகுதியிலும் சரி, பிற்பட்ட காலப்பகுதியிரும் சரி நீதிமன்றத்தை எவரும் அணுகியிருக்காதால் தான் தடுக்கமுடியவில்லை என்று நினைக்கின்றேன். அணுகியிருப்பின் ஒன்று நீதி கிடைத்திருக்கும். அல்லது நீதிமன்றத்தின் முகத்தை அடையாளம் கண்டிருக்க முடியும்.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 12-15-2005, 03:32 AM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 05:00 AM
[No subject] - by Nitharsan - 12-15-2005, 05:02 AM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 05:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)