Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டங்கள் படும் பாடு..!
#3
நன்றி குருவிகள். தினக்குரலில் வெளியாகி, தமிழமுதத்தில் மீள் பிரசுரமான சாந்தி ரமேஸ் வவுனியனின் கட்டுரையை இங்கே இணைத்தமைக்கு நன்றி.
குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து உற்சாகமூட்டக்கூடியவை. அதேபோல புதுவருடம்.. நத்தார் போன்ற சிறப்பான நாட்களில் வாழ்த்துகளின் பரிமாற்றங்கள் ஒரு மனிதனை உற்சாகப்படுத்துவனவாக அமைகின்றன. அதேபோல, பட்டங்கள் என்ற பெயரிலே கலைஞரையோ எழுத்தாளரையோ நாடும் கௌரவங்களால் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக உற்சாகமடைவார்கள். அதனால் அவர்களது திறமைகள்கூட பொறுப்புணர்வுடன் பரிணாம வளர்ச்சியை எட்டிவிடவும் முயலலாம்.
மற்றும், குறிப்பிட்ட துறையில் ஆர்வமோ அக்கறையோ உள்ளவர்கள்தான் அத்துறை சார்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் பட்டத்தைப்பற்றி அக்கறை கொண்டு, அதன் தகுதியைப்பற்றி ஆராயவோ தராதரம் பார்க்கவோ முற்படுவார்கள். அப்போது உண்மையான தகுதியுடையோருகஇகு வழங்கப்படும் பொருத்தமான பட்டங்கள் நிலைநிற்கின்றன. மற்றவை போலிகளாய்பொசுங்குகின்றன.
உண்மையான தகுதியுடையவர்கள் நிச்சயம் பேசப்படுவார்கள். மற்றவர்கள் என்னதான் அர்த்த இராத்திரியில் குடைபிடித்தாலும்நகைப்புக்குத்தான் உரிமையாளர்களாவார்கள்.
ஆகவே, பட்டங்களை வரவேற்பதில் தவறில்லை. ஆனால் அவை எவ்வளவு தூரம் பொருத்தம் என்பதை காலம் காட்டி நிற்கும்.
உதாரணமாக, எம்ஜிஆருகஇகு பல பட்டங்கள் இருப்பினும், 'மக்கள் திலகம்" எனும் பட்டமே அழியாமல் நிலைநிற்கிறது.அதேபோல 'நடிகர் திலகத்'தையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆக, என்னதான் பட்டங்களைப் பொருத்திக் கொண்டாலும், பட்டங்கள் அவரவர் திறமையைப் பொறுத்துத்தான் அவரவர்களுடன் வாழும் எனக் கொள்வதுதான் உசிதம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-13-2005, 09:56 PM
[No subject] - by sOliyAn - 12-14-2005, 01:27 AM
[No subject] - by RaMa - 12-14-2005, 06:29 AM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 06:30 PM
[No subject] - by Mathuran - 12-17-2005, 09:34 PM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 05:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)