12-13-2005, 10:41 PM
மோகன்தாஸ் உங்களின் ஆக்கத்தை நான் வாசித்த பொழுது ஒரு கதையாக அல்லது கற்பனையால் பலமாக மெருகூட்டப்பட்ட ஒரு உண்மை அனுபவமாகவோ இருக்கவில்லை. ஆரம்பம் முதல் முடிவுவரை ஆடம்பரமின்றி ஒழிவு மறைவு இன்றி அப்படியே உணர்வுகளை அனுபவங்களை எழுதியுள்ளீர்கள் போன்று உணர்ந்தேன்.
Politically correct ஆக எழுத வேண்டும் சர்ச்சைகளை உருவாக்காத முறையில் எழுத வேண்டும் வாசகர்களை கவர எழுத வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை போன்று இருந்தது.
ஈழவிடுதலைப் போராட்டம் ஈழத்தமிழர் பால் ஆரம்பத்தில் உங்களின் விளக்கம் சார்ந்த நிலைபாடிற்கு இறுதிப்பகுதியில் மாற்றங்கள் வந்திருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. அந்த மாற்றம் தற்காலிகமானதா, அது ஒரு ஈழப்பெண்ணோடு உங்களின் தனிப்பட்ட உள மனரீதியான ஈடுபாட்டினால் மாத்திரம் தான் உருவானதா இல்லை கொள்கைரீதியிலும் தெளிவுற்றிருக்கிறீர்களா போன்றவற்றை உணரமுடியவில்லை.
முன்பின் தெரியாத ஒருவரை (கருத்துக்களத்தில் கருத்துக்கள் என்று கூட வாசிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல்) ஒரே ஒரு ஆக்கத்தை மாத்திரம் வைத்து மதிப்பிடவிரும்பவில்லை. மேலும் ஆக்கங்களை சந்தர்பம் வரும் பொழுது வாசித்தபின் சில விமர்சனங்களை வைக்கலாம் கேள்விகளை கேக்கலாம் என்று இருந்தேன்.