Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டங்கள் படும் பாடு..!
#2
வணக்கம் குருவிகள்!

பட்டங்கள் பற்றிய உங்கள் கட்டுரையோடு நானும் ஒன்றி நிற்கவே விரும்புகின்றேன். பட்டங்கள் ஒரு புறம் கொடுத்து பலரை எட்டங்கள் தள்ளிய திட்டங்கள் உடையோரை எனக்கும் தெரியும். சிலநேரங்களில் சமூகத்தோடு ஒன்றிப்போதலே சாலச்சிறந்ததென எண்ணுவேன். மௌனம்தான் சிலநேரங்களில் சிறந்த மருந்து. படிப்பென்பது எல்லாநேரங்களிலும் கைகூடும் கருவியன்று. அதற்காய் படித்தவந்தான் மேதை என எண்ணி ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பலர் உள. தாய் தந்தையர் இழைக்கின்ற தவறிற்கு தனயன் சுமக்கின்ற கடனைப்போன்றது நமது வாழ்க்கை. படித்தவன் தான் படைக்க முடியும் பட்டம் பெற முடியுமென்றால் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை. நான் படித்த காலங்களில் தமிழில் எனது மதிப்பெண் 28. இந்த இருபத்தி எட்டிலும் விட பட்டங்கள் வழங்குவதில் தவறு இருப்பதாக எனக்குப் புரியவில்லை. இந்த 28 மதிப்பெண்களை நான் பெற்றதனால் தமிழ் பயில்வதில் ஆர்வத்தைவிட வெறுப்பே அதிகரித்தது. ஒருவனை தட்டிக்கொடுத்தல் போன்றதுதான் பட்டங்கள் என ஏன் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏழ்நிலை வேண்டாம், இழிநிலைவேண்டாம், ஓராமாய் மனிதனை ஒதுக்குதல் வேண்டாம். ஆயிரம் பேசி என்ன பயன் பொருளினை ஈட்டுபவன் முன்னே செல்கிறான். போதனை கேட்டவன்
ஆண்டியாய் ஆனான்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-13-2005, 09:56 PM
[No subject] - by sOliyAn - 12-14-2005, 01:27 AM
[No subject] - by RaMa - 12-14-2005, 06:29 AM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 06:30 PM
[No subject] - by Mathuran - 12-17-2005, 09:34 PM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 05:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)