12-13-2005, 09:43 PM
<b>இன்னுமொரு சம்பவம்.</b>
கடந்த வெள்ளிக்கிழமை (09-12-05) London Streatham Odeon சினிமாவிற்கு ஆறு படம் பார்க்க போயிருந்தேன். படம் இரவு 11.30 அளவில் ஆரம்பித்தது. படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடமளவில் உள்ளே வந்த பொலிசார் பின் வரிசையில் இருந்த சிலரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்த்து சென்றார்கள். ஏறத்தாள அரைமணி நேரம் நீடித்த இந்த கைது நடவடிக்கையின் போது பின் வரிசையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் பொலீசாருக்கு எதிராக மிக கடுமையான எழுத்தில் தரமுடியாத வார்த்தைகளை உபயோகித்தார்கள்.
இவர்களை என்ன காரணதுக்காக கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் இளைஞர் குழு (Gang) ஒன்றை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்களை தாக்க கூடிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும் பின்னால் இருந்த ஒருவர் சொன்னார் .... சரிவர தெரியவில்லை. வழக்கமாக விஜய் படம் போன்ற பெருமளவில் மக்கள் வரக்கூடிய படங்களிற்களிற்கு அனைவரையும் Odeon Cinema Security Officers செக் பண்ணிய பின்பே உள்ளே அனுமதிப்பார்கள். அன்றைய தினம் சோதனை ஏதும் நடக்கவில்லை என்பதால் அதனை பயன்படுத்தி ஆயுதங்களை உள்ளே கொண்டு வந்திருக்க வாய்ப்பு உண்டு.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>