12-13-2005, 07:26 PM
இங்கு தமிழினி தந்த கதை சார்ந்த ஒரு வரி மேலோட்ட விமர்சனத்தைத் தவிர கதை தொடர்பில் எவரும் விமர்சனம் நல்கவில்லை..! மோகனதாஸ் வாருங்கள்..கதை சுப்பர்... நல்ல கதையோட்டம் இவை கதைக்கான விமர்சனமாக நமக்குத் தெரியவில்லை..! இதுதான் இங்கு எல்லா இடமும் சொல்லப்படுகிறது...! கதையின் கரு சார்ந்து அது எடுத்துச் செல்லப்பட்ட வடிவத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் ஈழத்தமிழர் யதார்த்த நடைமுறைக்குப் புறம்பான எண்ண ஓட்டங்கள் ஒரு பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதையே நாங்கள் மோகந்தாஸுக்கு சுட்டிக்காட்ட விரும்பினோம்..! அதற்குப் பதில் எழுதப் போக...கருத்தியல் பேதங்களை வளர்த்து, கருத்துக்களத்தில் நிலவும் கருத்தியல் பேதத்தால் வரும் வேற்றுமைகளை நிலைநிறுத்தி தூயவன் சொன்னது போல தங்களை கருத்தியல் கதாநாயகர்களாக சித்தரிக்க விரும்புவோர் தேவையற்ற விளக்கங்களையும் விமர்சனத் திரிபுகளையும், குற்றச்சாட்டுகளையும் காழ்புணர்ச்சி வெளிப்பாடுகளையும் கொட்டிவருவதன் மூலம்...ஈழத்தமிழர்கள் எந்த வகையில் ஒரு ஆக்கத்தின் மீதான விமர்சனத்தை அணுகுகின்றனர் என்பதற்கு உதாரணமாகி தங்களுக்கிடையே உள்ள "ஒற்றுமையையும்" எடுத்தியம்பிக் கொண்டு இருக்கிறார்கள்..!
புதியது என்றாலும் வந்தவரத்தில் ஒரு படைப்பை கண்மூடித்தனத்துக்கு ஆதரித்து விமர்சிக்க வேண்டும் என்பது வாசகர்களை முட்டாளாக்கி கருத்தியல் போலித்தனத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதாகவே தென்படுகிறது..! இது வளமான கருத்துப் பிறப்பாக்கலுக்கு உதவாது..! இதனால் தான் பல்லாயிரம் கருத்துக்கள் வெறும் எழுத்துவடிவத்தில் சமூகத்தினை அடையாமல் ஏட்டுச் சுரக்காயாய் இருக்கின்றன...! மோகந்தாஸ் கதை என்ன இப்படி எத்தனையோ கதைகள் பிறந்தும் எங்கும் உண்மைகள் உணரப்பட்டதாக தெரியவில்லை..! இன்னும் இன்னும் கருத்தியல் பேதங்களும்..உண்மைக்கு திரையிடலுமே தொடர்கிறது..!
மோகந்தாஸின் கதையில் எங்களை மிகவும் பாதித்த விடயம்... ஈழத்தமிழ் பெண்ணை காதலித்தால் கிடைப்பது சயனைட் குப்பி என்பது போல.... சொல்லப்பட்ட ஒரு கருத்து...! சிலர் சொல்கிறார்கள் மோகந்தாஸுக்கு ஈழத்தின் மீது காதல் என்று...உண்மையில் அவரிடம் ஈழத்தின் மீது காதல் என்பதிலும் இந்தியாவின் குற்றங்களை மறைத்துவிட வேண்டும் என்ற தொனியே மேலோங்கி இருந்திருக்கிறது...! அதனாலேயே கருணா விடயத்தில் கதாபாத்திரத்தை எள்ளி நகையாடிவிட்டு...ஐபிகேவ் ராஜீவ் காந்தி விடயத்தில் சென்சிற்றிவ் மற்றர் என்று அடக்கி வாசித்துள்ளார்...! நாங்கள் சந்தித்த பல இந்திய இளைஞர் யுவதிகளிடம் ஐபிகேவ் மற்றும் ராஜீவ் காந்தி பற்றிக் கேட்டத்தில் அவர்கள் ஈழத் தமிழர்களையே குற்றவாளிகளாகக் காட்டினர்..! அப்போ அவர்கள் சொன்ன விடயம் நீங்கள் சொல்வது படி உங்கள் தரப்பு நியாயம் புரிகிறது....ஆனால் நாம் அறிந்தடெல்லாம் வேறு என்று...! இதையே கதையை எழுதியவரும் கொண்டிருக்கிறார்..! ஈழத்தைக் காதலிப்பவராக இருந்திருந்தால்...அதில் தனது நிலைப்பாட்டை தன் காதலிக்கு சொல்லி இருக்கலாமே..! ஏன் சொல்லவில்லை...?????! :?: :?:
தயவுசெய்து சாணக்கியன் நீங்கள் மோகந்தாஸுக்காக வரிந்து கட்ட வேண்டாம்..கதை எழுதிய அவரிடமே சில விளக்கங்களை கோர விரும்புகின்றோம்....அது அவருக்கும் எமக்கும் தெளிவு கிடைக்க வழி செய்யும்..! நாம் மோகந்தாஸிடம் கோரும் சந்தேகத்தில் மற்றவர்களும் தலையிட வேண்டாம்...! அதையும் மீறித் தலையிட்டால் இது தொடர்பாக இங்கு கருத்தாடுவதில் பயனில்லை..அதாவது எமது பக்க சந்தேகங்களை முன் வைப்பதில் பயனில்லை..! சாணக்கியன் உங்களுக்கு எமது சந்தேகம் சிறுமையாகத் தெரிந்தால் தெரிந்து கொண்டு அடக்கி வாசிக்கவும்..! எங்களுக்கு அது முக்கியமாக இருக்கு...!!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>