12-13-2005, 07:20 PM
ஈழ இந்திய தமிழர்களிடையே ஒரு மனவேறுபாடும் நம்பிக்கையின்மையும் உண்டு. இரண்டு தரப்புமே ஒருவர் மற்றவரை தாக்கிய எழுதப்பட்ட படைப்புக்கள் இணையத்தில் நிறையவே உண்டு. இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் மற்றய தரப்பு என்ன எழுதினாலும் அது நம்மை தாக்கி எழுதப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஈழ இந்திய தமிழர்கள் கலந்து பேசி நட்புணர்வுடன் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்து கொண்டால் இந்த நிலையை மாற்றலாம். ஆனால் இங்கே நடக்கும் கருத்தாடல்கள் சில மன வேறுப்பாட்டை அதிகரிப்பனவாகவே இருக்கின்றன. அவற்றை தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். மறப்போம் மன்னிப்போம். இந்த தலைப்பில் மன வேறுபாட்டை அதிகரிக்கும் வகையில் கருத்தாடல்கள் தொடர்ந்தால் எனக்கு தலைப்பை பூட்டுவதை தவிர வேறு வழியில்லை.
மோகன் தாஸ்,
உங்களது படைப்புகளை தொடர்ந்து இணைக்கும் அதே வேளை களத்தில் இணைக்கப்படும் மற்றயவர்கள் ஆக்கங்கள் குறித்த உங்கள் விமர்சங்களையும் எழுதுங்கள். இதன் மூலம் நமது கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>