12-13-2005, 06:58 PM
mohandoss Wrote:இது வேண்டுமென்றே வம்பு செய்வது. என்னுடைய ஐபி அட்ரஸ் தருகிறேன். தளத்தின் மட்டுறுத்துனர் சோதனை செய்து கொள்ளலாம். இது என்னுடைய கம்பெனியின் ஐபி முகவரி 203.197.90.136, மற்றது என் வீட்டினுடைய கணிணியின் ஐபி முகவரி அதன் விவரம் வேண்டுமானால் இன்று இரவு தருகிறேன். என் உரையாடல்கள் இங்கிருந்து தான் வந்திருக்கும். இடம் புனே, இந்தியா, அட ராமா இதென்ன எனக்கு வந்த சோதனை.
ஒரு விஷயம் எனக்கு என் படைப்புகளின் விமரிசனங்களை நேரடியாக வாங்கிக்கொள்ளவோ எதிர்த்துப்பேசவோ முடியும். முகமூடி அணியும் தேவை எனக்குகிடையாது. நான் இந்தக்களத்திற்கு வந்ததிற்காக வருந்தும்படி ஆகிவிடும் போலிருக்கிறது. மட்டுறுத்துனருடையவோ இல்லை, தள நிர்வாகியினுடைய பதிலையோ இதற்காக வேண்டுகிறேன்.
வணக்கம் மோகன் தாஸ்,
நலமா?
பொதுவாக நாம் யாழ் கள நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் இரண்டு பெயர்களில் வருகின்றார்களா, அவரும் இவரும் ஒன்றா போன்ற விடயங்களை உறுதிப்படுத்துவது இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் ....
1) ஒருமுறை அடையாளத்தை உறுதிப்படுத்தினால் பலரும் தம்முடைய மற்றும் பிறருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு எதிர்காலத்தில் கேட்டு இந்த போக்கு தொடரும் வாய்ப்பு உண்டு. இது தேவையற்ற சிக்கல்களை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தும்.
2) அடுத்த மிக முக்கியமாக ஐபி முகவரியை மாற்றி வெவ்வேறு ஆட்களாக தோன்றமளிக்க கூடிய தொழில்நுட்ப வசதி இணையத்தில் உண்டு. அதனால் ஐபி முகவரியை வைத்து இவர் நிச்சயமாக அவரல்ல போன்ற அடையாளங்களை நிரூப்பித்தாலும் அது 100% சரியான தகவலாக இருக்க முடியாது.
இந்த பெயர் பிரச்சனையை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் கதை குறித்த விமர்சனங்களுக்கு கதை ஆசிரியரின் கோணத்தில் உள்ள சில கருத்துக்களை சாணக்கியன் எழுதும் போது இருவரும் ஒருவர் போன்று ஒரு தோற்றப்பாடு உருவானதால் தூயவன் அப்படி எழுதியிருக்கலாம். எது எப்படியோ அது உங்களை மனவருத்ததை உருவாக்கியிருந்தால் வருந்துகின்றேன்.
நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

