12-13-2005, 02:19 PM
இதில் பெரிதாக சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை. திருமணத்தை வேண்டுமென்றால் இந்தியாவில் நடத்துங்கள். காரணம் இரு பகுதி உறவுகளும் வந்து கலந்து கொள்ளலாம். தற்போதைக்கு உங்கள் எதிர்கால மனைவிக்கு சுவிஸில் குடியுரிமை பெற்றவராதலால் அவர் உங்கு வந்து உங்களோடு இருப்பதில் பிரைச்சினை ஒன்றுமில்லை. அதே போல் நீங்கள் இங்கு வருவதற்கும் ஸ்பொன்சர் விசா பிரைச்சினை இல்லை. உங்கள் பிரித்தானியா விசாவுடனேயே இங்கே வந்து செல்லலாம். பின் உங்களுக்கும் உங்கு குடியுரிமை கிடைத்ததன் பின் இருவரும் இறுதியாக முடிவெடுக்கலாம் எங்கு சேர்ந்து வாழலாமென்று.

