12-13-2005, 10:18 AM
பிஜி தீவு அருகே கடலுக்கடியில் அடுத்தடுத்து 2 பூகம்பங்கள்: சுனாமி எச்சரிக்கை
டிசம்பர் 13, 2005
சுவா:
ஆஸ்திரேலியாவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவுகளுக்கு அருகே கடலுக்கடியில் இன்று அடுத்தடுத்து 2 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன.
அந் நாட்டின் நேரப்படி பிற்பகல் 3.16 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 10.30 மணி) இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் சில நெடிகளில் இந்த இரு நிலநடுக்கங்களும் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடலுக்கடியில் 29 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தின் சக்தி ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆகப் பதிவானது. அதையடுத்து சில வினாடிகளில் 6.8 என்ற அளவுக்கு அடுத்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கம் கடலுக்கடியில் 166 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
இதையடுத்து பசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>