06-22-2003, 10:01 AM
பொங்கும் தமிழ் எங்கும் தங்குக!
--------------------------------------------------------------------------------
கடல் கடந்து வந்தும் உங்கள் நினைவுகளோடு வாழும் எம் இனிய புலம்பெயர் மக்களின் சார்பாக இந்த வாழ்த்துரையை அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பல்லாயிரம் ஆண்டு காலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த எம் இனம் இன்று சுதந்திரத் தேவியின் வருகைக்காய் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றது.
இவ்வுலகமே எம் இனத்தின் துன்பங்களைவேடிக்கை பார்த்தப்போது அவர்களின் துன்பங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் எதிரியின் முற்றுகை;குள்ளேயிருந்தும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியவர்கள் நீங்கள். இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் நாமும் பங்கேற்க முடியவில்லை என்கின்ற கவலை எமக்கிருந்தாலும், எம் உணர்வும் எம் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படு;த்திக்கொள்கின்றோம்.
எம் இனத்தின் அடையாளத்தையும், எம் மக்களின் பிரதிநிதிகளையும் எம் தேசத்தின் தலைமையையும் இந்த உலகமே திரண்டு நின்று புறக்கணித்தாலும், மாணவ சக்தியான நீங்களும் புலம் பெயர்ந்த நாங்களும் அவர்களுக்காக இருக்கும் வரை எம் இனத்தை யாராலும் அசைக்கமுடியாது என்பதனை இதன்மூலம் உறுதிப் படுத்துகிறோம். தடைகள் பல வந்தாலும் உங்கள் பொங்கு தமிழ் இனிதே நடக்கட்டும் அதனை இந்த உலகமே மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து பார்க்கட்டும்.
நாம் இங்கே தேசிய நிரோட்டத்தில் கலந்து விட்டோம் என்று நீங்கள் கவலைகொள்ளதேவையில்லை. ஒரு தாயின் பாலைக்குடித்து வளந்தவர்கள் எல்லோரும் தேசத்தின் மேல் அளவு கடந்து அன்பு வைத்திருக் கின்றார்கள். எங்களின் ஆதரவு இருக்கும்வரை, யாரும் விலை பேசிட முடியாத தலைமை இருக்கும் வரை, எதையும் துணிந்து நின்று முன்னே செல்லும் நீங்கள் இருக்கும் வரை யாரும் எம்மை இனிமேலும் அடக்கிடமுடியாது. இந்தப் பொங்கு தமிழ் ஒழுங்கே அமைந்து பின் அதுவே உலகநாடுகளில் பரவி எம் இனத்தின் அபிலாசைகளை கட்டியம் கூறிட வாழ்த்துகிறோம்.
கனடா தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகள் -
தமிழர் தேசிய அமைப்பு - கனடா
வுயஅடை ருniஎநசளவைல புசயனரயவநள யனெ ளுவரனநவெள உழழசனiயெவiபெ உழஅஅவைவநந-
வுயஅடைள யேவழையெடளைவ யுளளழஉயைவழைn - ஊயயெனய
தொடர்புகளுக்கு: கனடா 00 1 905-201-4964