Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று தமிழிழத்தில்
#9
மட்டக்களப்பு மாவட்டம் பறங்கியாமடுவில் இருவர் ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த இரு சடலங்கள் குறித்து பொதுமக்கள் இன்று காலை ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இரு சடலங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

சம்பவம் நடந்த பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாலையடித்தோனாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான தம்பிமுத்து தம்பிராசா (வயது 29), சந்திவெளியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரன் (வயது 22) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமது வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பறங்கியாமடு பகுதியில் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

புதினம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-07-2005, 12:59 PM
[No subject] - by sri - 12-08-2005, 11:43 AM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 01:03 PM
[No subject] - by sri - 12-10-2005, 01:39 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 01:39 PM
[No subject] - by sri - 12-13-2005, 08:49 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)