12-13-2005, 08:23 AM
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சாந்தி ஒரு இளைஞன் தலைமுடி தோள்வரை வளர்ந்திருந்தது காதிலே தோடு கழுத்தில் இரண்முன்று சங்கிலிகள் அவன் போட்டிருந்தது கிழிந்த ஜீன்சா அல்லது கிழித்து போட்டிருந்தானா என்று தெரியவில்லை தோளில் ஒரு புத்தக பை காதில் வோக்மன் கொழுவியருந்தான்.
சாந்திக்கு உடல் சாது வாக நடுக்கமெடுத்து இதயதுடிப்பும் அதிகரித்தது பதில் வணக்கம் சொல்லுவமா விடுவமா என்று ஒரு தடுமாற்றம் சே வேண்டாம் என் நினைத்தவள் பேசாமல் தலையை குனிந்த படி எப்படா லிப்ற் கீழேபோய் சேரும் என்று காத்து நின்றவள் லிப்ற் கிழே நின்றதும் விறு விறுவென வெளியேறி பஸ் நிலையத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.
ஆனாலும் அவளிற்கு ஒரு பிரமை அந்த அவன் தன்னை பின் தொடர்ந்து வருவது போல ஆனாலும் திரும்பி பாக்காமல் நடந்தவாறே நினைத்தாள் ரவி சொன்னது உண்மை தான் அந்த பெடியனை பாத்தாலே ஒரு மாதிரியிருக்கு ஆழும் சடையும் அவனின்ரை கோலமும் பாத்தாலே பயமா இருக்கு என்ற நினைத்தபடி பஸ் நிலையத்தை அடைந்தவள் மெதுவாய் திரும்பி பார்த்தாள்.
அவன் கொஞ்ச தூரத்தில் வோக்மன் பாடலுக்கு தலையை ஆட்டியபடி ஒரு புத்தகத்தை படித்தபடி நின்றிருந்தான் அவனும் பஸ்சிறகாக தான் நிக்கவேண்டும் என்று நினைத்தவள் வேறு பலரும் அங்கு நின்றபடியால் சற்று ஆறுதலடைந்தாள் .
அன்று மாலை வீடு வந்தவள் ரவியிடம் காலைவிடயத்தை கூற நினைத்தவள் பின்னர் எதற்கு அவன் என்ன வணக்கம் தானே சொன்னவன் பிறகு தன்ரை பாட்டிலை போட்டான் இனியேதும் தொந்தரவு தந்தால் சொல்லலாம் என நினைத்து பேசாமல் இருந்து விட்டாள்.
ரவி வேலையால் வந்ததும் சாந்தியிடம் சாந்தி நாங்கள் கலியாணம் செய்ததிற்கு பாட்டி தரேல்லையெண்டு என்ரை சினேதங்கள் ஒரே பிரச்சனை இப்ப நீரும் வந்திட்டீர் வாற சனிக்கிழைமை என்ரை சினேகிதருக்கு ஒரு பாட்டி குடுப்பம் ஒரு பத்து பேரளவிலை வருவினம் கொஞ்ச பலகாரங்கள் செய்யும் .
எல்லாம் வெள்ளையள்தான் அதாலை சாப்பாடுகளை உறைப்பை கனக்க போடாமல் செய்யும் அதோடை மறந்திட்டன் நான் வேலையாலை வந்த உடைனைநாளைக்கு பின்னேரம் டொக்கரிற்டையும் ஒருக்கா போக வேணும் வெளிக்கிட்டு நில்லும் என்ன.
சாந்தி கொஞ்சம் குழம்பியவளாய் டொக்டரிற்ரையோ ஏன் உங்களிற்கு ஏதும் வருத்தமோ என்ன பிரச்சனை.
இல்லையப்பா உமக்குதான்
சாந்தி ஆச்சரியமாய் எனக்கோ எனக்கென்ன பிரச்சனை எனக்கொரு வருத்தமும் இல்லையே.
ரவி அவளின் முன்னால் போய் நின்றவாறே இஞ்சை நான் சொல்லுறதை கொஞ்சம் வடிவா கேளும் நீர் இப்பதான் வந்தனீர் கொஞ்சம் பிரெஞ்சு மொழியை படிச்சு ஒரு வேலை ஒண்டு தேடியெடுக்குமட்டும் ஒரு வருசத்திக்காவது எங்களிற்கு பிள்ளை வேண்டாம் அதுமட்டுமில்லை நாங்களும் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம் அதாலை நாளைக்கு டொக்ரரிட்டை போய் உம்மை செக் பண்ணி ஒரு கொஞ்ச காலத்திற்கு தற்காலிக தடைஒண்டு செய்யதான் இது இஞ்சை சாதாரணமா செய்யலாம் பயப்பிடாதையும்விரும்பேக்கை எடுத்தா போச்சு என்னு ரவி சாதாரணமாகூற
சாந்திக்கு ரவி சொல்வது கொஞ்சம் நியாயமாக பட்டாலும் பயமாகவும் இருந்தது குழம்பிய மனநிலையில் ரவியை பார்த்து சரி நீங்கள் சொல்றுறீங்கள் பிறகு ஏதும் பிரச்னையள் வராட்டி சரி நாளைக்கு வெளிக்கிட்டு நிக்கிறன்.
மறுநாள் ரவி சாந்தியை அழைத்து சென்று வைத்தியரிடம் காட்டி சாந்திக்கு தற்காலிக குடும்ப கட்டுபாடும் செய்யபட்டது.அவர்கள் தயார் செய்த விருந்து நாளான சனிக்கிழைமையும் வந்தது சாந்தி தாயிடம் கற்று வைத்திருந்த பலகார வகைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்க ரவி வரேற்பறையில் மேசையை ஒழுங்கு பண்ணி மதுவகைகள் மற்றும் வேண்டிய பொருட்களை ஒழுங்கு படுத்தி முடித்தான்.
வரவேற்பறையில் வந்து பார்த்த சாந்தி என்னப்பா பத்துபேர்தான் எண்டியள் ஆனால் ஒரு அம்பது பேர் குடிக்கிற அளவுக்கு சாராய போத்தல் அடுக்கி வைச்சிருக்கிறியள். இண்டைக்கு திருவிழா போலைதான்.
ரவி தலையை ஆட்டியபடி சாராயம் இல்லை இதுகள் விஸ்கியும் பியரும் உமக்கு எங்கை இதுகளை பற்றி விழங்கபோகுது பேசாமல் சாப்பாடுகளை கொண்டு வந்து அடுக்கும் ஆக்கள் வாற நேரமாகிது.மற்றது இன்னொரு விசயம் இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.
ம் .......இங்கை வாழவெண்டு வந்திட்டம் ஏதோ இங்கத்தை பழக்க வழக்கங்களையும் அனுசரித்துதானே ஆகவேணும் என்றவாறே செய்த சாப்பாடுகளை அடுக்கி விட்டு அவளது வாழ்வில் முதல் திருப்பத்தை எற்படுத்த போகும் அந்த இரவு விருந்திற்காய் தன்னை அழகுபடுத்தி தயாரானாள். :
என்ன உறவுகளே நீங்கள் என்னை நினைத்து பல்லை நறநறவெண்டு கடிக்கிறது விழங்கிது ஏகத்துக்கும் குழப்பி கதையை இழுக்கிறனா ?? தொடர் கதையெண்டா அப்பிடித்தான் அடுத்த தொடரில் சந்திப்போம்: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/