12-13-2005, 02:17 AM
தமிழர் தாயகப்பகுதிகளில், வணிகர்கள் என்ற போர்வையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் பெருமளவில் ஊடுருவியிருப்பதாக தெரியவருகின்றது. உடுபுடவைகள் வணிகம், மற்றும் பழவகைகள், இரத்தினக் கற்கள் வணிகம் போன்ற போர்வையுடன் இலங்கை வரும் இவர்கள் இங்கு தங்கியிருந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
அண்மைக்காலமாக வானு}ர்திகள் மூலம் வந்து யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இவர்கள் உள்நுழைந்து வியாபாரம் என்ற போர்வையில் தமது உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் கொழும்பிலும் தமிழர் அல்லாத இந்திய உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் வணிகர்களாக வருபவர்கள் போன்று அல்லாது இவர்கள் ஆடம்பரமாக வந்து இரத்தினக்கல் வணிகம் செய்வது போல் தங்களை காட்டிக்கொண்டு, பெரும்பாலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தங்கள் கண்காணிப்புகளை நடத்துகின்றனர். இரவில் விடுதிகளில் தங்கிவிட்டு பகல் நேரங்களில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு புடவை வணிகம் என்ற போர்வையில் ஊடுருவி உளவு பார்க்கும் இந்திய உளவாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியத் தமிழர்களே. யாழ்ப்பாணத்தில் காலை நேரங்களில் வீடுவீடாகக்கூட சென்று வணிகம் செய்யும் இவர்கள் மாலையில் இனந்தெரியாத நபர்களுடன் மோட்டார் ஊர்திகளிலும்; செல்வதையும் அவதானிக்க முடிவாதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன
நன்றி சங்கதி