Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு
#22
சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

வி.புலிகள் அரசியல் யாப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரம் படைத்த ஒரு இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் திட்டத்தை முன் வையுங்கள் என்கிறார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவோ அரசியல் யாப்புக்கு உட்பட்ட நிர்வாக அமைப்புப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.

உச்ச சபை. (யுpநஒ ஊழரnஉடை )
அபிவிருத்தி சபை.
இடைக்கால நிர்வாக சபை.

என்று குண்டுச் சட்டிக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்கா குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்!

அதனால் ''புத்தாக்க முறையிலான பயனுடைய அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிற்கான வரைவு யோசனைகளை அரசு முன்வைக்க வேண்டும் என்று நாம் விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை"" என வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மை என்னவென்றால் அரசியல் யாப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க வேண்டும் என்றால் அரசியல் யாப்புத் திருத்தப்பட வேண்டும்.

அரசியல் யாப்புத் திருத்தப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இருண்டு பெரும்பான்மை வாக்குகள் வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லை.

தமிழர் தேசிய கூட்டணியின் வாக்குகளைச் சேர்த்துக் கூட்டிப் பார்த்தாலும் மொத்த உறுப்பினர் தொகை 130க்கு மேல் தேறாது.

யாப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு சரியாக 150 உறுப்பினர்களது ஆதரவு தேவை.

அப்படியென்றால் சட்ட திருத்தம் நிறைவேறுவதற்கு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தலைமை தாங்கும் மக்கள் முன்னணியின் ஆதரவு தேவை.

ஆனால்; சனாதிபதி சந்திரிகாவோ முதலில் வி.புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒரு அரசியல் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க முடியும் என்கிறார்.

சனாதிபதி சந்திரிகாவின் நிபந்தனைக்கு இணங்க வி.புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பார்களா? அது நடக்காத காரியம்.

இடியப்பச் சிக்கல் என்பார்களே? அது போன்ற சிக்கல்தான் இதுவும்!

இந்த இடைக்கால நிர்வாகசபை என்பது 1987 ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வி.புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய முன்னணி (ருNகு)? தனது 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தது.

"றுந றடைட ளநவ ரி யn iவெநசiஅ உழரnஉடை in வாந ழெசவா யனெ நயளவ கழச ய டiஅவைநன னரசயவழைn."

''நாங்கள் ஒரு குறுகிய காலத்துக்கு வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவோம்.""

மீண்டும் 2002ம் ஆண்டு யுூன் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பின்வருமாறு கூறியிருந்தார்.

''ளுசi டுயமெயn Pசiஅந ஆinளைவநச சுயnடை றுiஉமசநஅநளiபொந hயள வழடன வாந எளைவைiபெ றுழசடன டீயமெ னழழெச உழஅஅரnவைல வாயவ வாந pசinஉipயட ழடிதநஉவiஎந ழக வாந pசழிழளநன pநயஉந வயடமள டிநவறநநn வாந பழஎநசnஅநவெ யனெ வாந வுயஅடை வுபைநச சநடிநடள in வுhயடையனெ ளழழn றயள வழ ளநவ ரி யn iவெநசiஅ யனஅinளைவசயவழைn in வாந ழெசவா யனெ நயளவ ழக வாந உழரவெசல யனெ ளிநநன னநஎநடழிஅநவெ ழக வாந யசநய." (வுhந Pநழிடந'ள னுயடைல-துரநெ 06இ 2002)

''அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தைகளின் முக்கிய நோக்கம் வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதே. இவ்வாறு தன்னைச் சந்தித்த உலக வங்கி மற்றும் கொடையாளி சமூகத்திற்கு சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்தார்."" (பீப்பில்ஸ் டெயிலி - யுூன் 06, 2002)

மீண்டும் தாய்லாந்து பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு முதல் வாரம் (செப்டம்பர் 9ம் நாள்) கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஜன பல மெகெயும (துயயெ டீயடய ஆநாநலரஅய) பேரணியின் போது பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பின்வருமாறு குறிப்பிட்டார்.

''Pசiஅந ஆinளைவநச சுயnடை றுiஉமசநஅநளiபொந யனனசநளளiபெ வாந கiயெட துயயெ டீயடய ஆநாநலரஅய சயடடல யவ வாந ஊழடழஅடிழ வுழறn ர்யடட ழn ளுநிவநஅடிநச 9இ 2002இ னநஉடயசநன வாயவ hநnஉந வாந னநஅயனெ கழச யn iவெநசiஅ யனஅinளைவசயவழைn வழ உழஅpடநவந வைள வசயளெவைழைn iவெழ ய pழடவைiஉயட ழசபயnளையவழைn. வுhளை ளை வாந வாiமெiபெ டிநாiனெ வாந னநஅயனெ கழச யn iவெநசiஅ யனஅinளைவசயவழைnஇ" hந ளயனை.

கொழும்பில் நடந்த மே நாள் விழாவில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா "யுலெ அயவவநச வாயவ னழநள ழெவ ளநநம வழ னiஎனைந ளுசi டுயமெய உழரடன டிந வயமநn ரி யவ வாந னளைஉரளளழைn வயடிடந." (வுhந ளுரனெயல டுநயனநச - ஆயல 26இ2003)

''நாட்டைத் துண்டாடதபடி கேட்கப்படும் எந்த விடயமானாலும் பேச்சு வார்த்தை மேசையில் பேசுவதற்கு எடுக்கப்படலாம்."" (த சன்டே லீடர்- மே 26, 2003)

இவ்வாறெல்லாம் தேனொழுகப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இப்போது ''அரசியல் யாப்புக்கு உட்பட்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையைத்தான் எங்களால் உருவாக்க முடியும்'' என்று பேசுகிறார்!

செப்தெம்பர் 15ல் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் இடைக்கால நிர்வாக சபை அமைப்பதுபற்றிக் கேட்ட ''அரசியல் யாப்புச் சிக்கல் இருக்கிறது. அதற்குப்பதில் ஒரு கூட்டு செயல் அணி (துழiவெ வுயளம குழசஉந) உருவாக்குவோம்"" என்று அரசியல் யாப்பு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்தார். ஒரு வார காலத்தில் அரசு தரப்பு இப்படி 'தட்டை" மாற்றி வாசித்ததிற்கு என்ன காரணம்?

இந்த இலட்சணத்தில் அமெரிக்க அரசாங்க துணைச் செயலர் றிச்சார்ட் ஆர்மிடேஜ் (புநழசபந யுசஅவையபந) வி.புலிகள் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் என்று பயமுறுத்தும் தொனியில் பேசி இருக்கிறார்.

''நாங்கள் வி.புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியல் இட்டுள்ளோம். உண்மையில் நாங்கள் அவர்களை வேட்டையாடி அவர்கள் நிதி திரட்டுவதை நிறுத்த முயற்சிக்கிறோம். அவர்கள் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற வரைவிலக்கணம் செய்வதில் இருந்து தப்பவதற்கான சூழ்நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும்."" (யப்பானிய தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்- யுூன் 10, 2003)

அமெரிக்க துணை அரசாங்க அமைச்சர் வி.புலிகள் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துவதும், வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதும் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சாகும்.

''ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் போனதில் நேரம் முற்றாக வீணானது"" என்று வி.புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திரு.சு. ப தமிழ்ச்செல்வன் சொல்லி இருக்கிறார். பின் எதற்காக ஏழாவது சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் போய் மேலும் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

''வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும்"" என்று மூக்கைப் பிடித்தால் வாயைத் திறக்கத் தெரியாத குழந்தை போல துணைச் செயலர் சொல்கிறார். மெத்த நல்லது. இந்த உபதேசத்தை இராக் விடயத்தில் அமெரிக்கா ஏன் கடைப்பிடிக்கவில்லை?

ஒன்றரை இலட்சம் அமெரிக்கப் படையை இராக்கில் இறக்கி அந்த நாட்டின் மீது பாரிய குண்டுத்தாக்குதலை நடாத்தி அதன் கட்டுமானத்தை ஏன் வீணாகச் சிதைக்க வேண்டும்?

இராக்கின் முன்னாள் சனாதிபதி சதாம் குசேனோடு பேசிச் சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கலாமே? ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை ஓரங்கட்டிவிட்டு, அதன் அணுவாயுத பரிசோதகர்களின் அறிக்கைக்குக் காத்திராமல் அவசர அவசரமாக படை திரட்டிப் போய் அந்த நோஞ்சான் நாட்டோடு சண்டையிட்டு ஏன் அதனை அழிக்க வேண்டும்? ஐயாயிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொஞ்சமும் இரக்கமின்றி குண்டு வீசி ஏன் கொல்ல வேண்டும்? கேட்டால் யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று அலட்சியமாகப் பதில் அளிப்பதா?

தெரியாமல்தான் கேட்கிறோம் ''உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறொரு நியாயமா?""

''அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார்"" என்று புளா தூக்கியவன் மாதிரி துணை இராசாங்க செயலர் பேசுகிறாரா இல்லையா?

வி.புலிகள் மீது அழுத்தம் கொடுக்கும் துணை இராசாங்க அமைச்சர் அது போன்ற அழுத்தத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? சனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு அந்த அழுத்தத்தை ஏன் கொடுக்கக் கூடாது?

வி.புலிகளை மட்டும் ''பிள்ளையார் கோயில் ஆண்டிகள்"" என்ற நினைப்பில் வாய்க்கு வந்தபடி ஏசுவதும் ''வேட்டையாடப்"" போவதாகத் திமிரோடு பேசுவதும் ஏன்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் அமெரிக்கத் தமிழர்களின் நிதியுதவியை மட்டும் நம்பி நடைபெறும் போராட்டம் அல்ல.

வி.புலிகளுக்கு தடை விதிப்பதும், நிதி திரட்டலைத் தடுத்தலும் சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைத்த முட்டாளின் கதை போன்றதுதான். தடைக்குப் பின்னர்தான் ஆனையிறவு வி.புலிகள் கையில் விழுந்தது! பளை விழுந்தது!

எதுவானாலும் துணை இராசாங்க செயலர் யோர்ஜ் ஆர்மிராஜ் அவர்களது சண்டியன் பேச்சை வைத்து நாங்கள் அமெரிக்க நாட்டை எடை போடக் கூடாது. துணை இராசாங்க அமைச்சர் போலல்லாது அமெரிக்க நாட்டை உருவாக்கிய சிற்பிகள் புத்திசாலிகள். மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள்.

அமெரிக்க நாட்டின் யாப்பின்படி பேச்சுச் சுதந்திரம், அமைப்புகள் இயங்கும் உரிமை அந்த நாட்டின் அடிப்படைச் சுதந்திரங்களாகும். துணை இராசாங்க செயலர் சரி சனாதிபதி புஷ் சரி அந்த அடிப்படைச் சுதந்திரங்களை தலை கீழாக நின்றாலும் பறித்து விட முடியாது.

துணை இராசாங்க அமைச்சரது பேச்சு பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் வி.புலிகள் பேச்சு வார்த்தையில் இருந்து விலகினால் இந்தியாவும் அமெரிக்காவும் சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவும் ஆயுதங்கள் வழங்கவும் முன்வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளும் சிறீலங்கா இராணுவத்துக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் போர்க் கப்பல்களும் வழங்கி வரும் நாடுகள்தான். அமைச்சர் தொழிலுக்கு புதிது. அமெரிக்க இராணுவத்தினால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவுதான் வி.புலிகளிடம் கும்பிடக் கும்பிட அடிவாங்கியது!

தமிழீழ மக்கள் சார்பில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டும்வரை வட-கிழக்கில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பையே வி.புலிகள் கேட்கிறார்கள்.

அது முடியாவிட்டால் ''பேசிப் பயனில்லை"" என்ற முடிவுக்கு வி.புலிகள் தள்ளப்படுவார்கள்.

அடுத்தடுத்து அனைத்துலக கடற்பரப்பில் வைத்து வி.புலிகளின் வணிகக் கப்பல்கள் சிறீலங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்படுவதை அவர்கள் எப்போதும் சும்மா பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டு மார்ச் 10, யுூன் 12 திகதினளில் வி.புலிகளின் வணிகக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அவற்றில் பயணம் செய்த வி.புலிகள் அநியாயமாக வீர மரணம் எய்தினார்கள். ஒன்றல்ல இரண்டு வணிகக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டது பாரதூரமான யுத்த நிறுத்த மீறல்களாகும்.

இப்போது வி.புலிகள் கேட்கும் அரசியல் அதிகாரம் படைத்த இடைக்கால நிர்வாக சபையை அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினதாகும். சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடியை எவ்வளவு காலத்திற்குத்தான் சுற்றுவது?


கனடா ~நம்நாடு| (20-06-03)
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-17-2003, 06:50 PM
[No subject] - by sethu - 06-18-2003, 01:05 PM
[No subject] - by sethu - 06-18-2003, 01:22 PM
[No subject] - by sethu - 06-18-2003, 01:47 PM
[No subject] - by cannon - 06-18-2003, 01:53 PM
[No subject] - by sethu - 06-18-2003, 02:13 PM
[No subject] - by cannon - 06-18-2003, 03:45 PM
[No subject] - by sethu - 06-18-2003, 04:59 PM
[No subject] - by sethu - 06-18-2003, 06:14 PM
[No subject] - by sethu - 06-18-2003, 06:25 PM
[No subject] - by sethu - 06-18-2003, 07:33 PM
[No subject] - by sethu - 06-18-2003, 07:34 PM
[No subject] - by sethu - 06-18-2003, 07:35 PM
[No subject] - by sethu - 06-18-2003, 07:37 PM
[No subject] - by sethu - 06-18-2003, 07:38 PM
[No subject] - by sethu - 06-19-2003, 03:33 PM
[No subject] - by sethu - 06-19-2003, 07:00 PM
[No subject] - by sethu - 06-21-2003, 10:34 AM
[No subject] - by sethu - 06-21-2003, 11:44 AM
[No subject] - by sethu - 06-21-2003, 11:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 10:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 10:01 AM
[No subject] - by Guest - 06-22-2003, 10:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 11:13 AM
[No subject] - by kuruvikal - 06-23-2003, 12:57 PM
[No subject] - by sethu - 06-24-2003, 06:39 PM
[No subject] - by sethu - 06-26-2003, 07:37 AM
[No subject] - by P.S.Seelan - 06-26-2003, 01:04 PM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 01:15 PM
[No subject] - by sethu - 06-26-2003, 07:04 PM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 09:18 PM
[No subject] - by P.S.Seelan - 06-27-2003, 01:01 PM
[No subject] - by GMathivathanan - 06-27-2003, 01:49 PM
[No subject] - by sethu - 06-27-2003, 07:36 PM
[No subject] - by GMathivathanan - 06-27-2003, 10:26 PM
[No subject] - by sethu - 06-28-2003, 09:17 AM
[No subject] - by sethu - 07-01-2003, 11:33 AM
[No subject] - by P.S.Seelan - 07-02-2003, 01:02 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 02:19 PM
[No subject] - by sethu - 07-02-2003, 02:36 PM
[No subject] - by sethu - 07-02-2003, 03:23 PM
[No subject] - by sethu - 07-02-2003, 09:10 PM
[No subject] - by sethu - 07-06-2003, 05:55 PM
[No subject] - by GMathivathanan - 07-06-2003, 07:46 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 04:35 PM
[No subject] - by S.Malaravan - 07-07-2003, 08:15 PM
[No subject] - by GMathivathanan - 07-07-2003, 09:05 PM
[No subject] - by sethu - 07-08-2003, 01:19 PM
[No subject] - by sethu - 07-10-2003, 11:34 AM
[No subject] - by sethu - 07-10-2003, 11:36 AM
[No subject] - by GMathivathanan - 07-10-2003, 02:44 PM
[No subject] - by GMathivathanan - 07-10-2003, 03:27 PM
[No subject] - by sethu - 07-11-2003, 11:20 AM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 01:41 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:04 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:05 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:16 AM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 11:38 AM
[No subject] - by sethu - 07-19-2003, 09:23 AM
[No subject] - by sethu - 07-19-2003, 10:08 AM
[No subject] - by Paranee - 07-19-2003, 01:35 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 03:54 PM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:00 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 06:15 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:35 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:58 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 07:07 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:46 PM
[No subject] - by sethu - 07-26-2003, 09:42 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 10:04 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:47 AM
[No subject] - by Mullai - 07-27-2003, 07:57 AM
[No subject] - by sethu - 07-27-2003, 08:06 AM
[No subject] - by P.S.Seelan - 07-27-2003, 12:35 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 12:53 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:45 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 03:49 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:51 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 03:57 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:58 PM
[No subject] - by P.S.Seelan - 07-29-2003, 01:07 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 01:27 PM
[No subject] - by sethu - 07-29-2003, 01:59 PM
[No subject] - by P.S.Seelan - 07-30-2003, 12:55 PM
[No subject] - by GMathivathanan - 07-30-2003, 01:30 PM
[No subject] - by S.Malaravan - 07-30-2003, 05:05 PM
[No subject] - by GMathivathanan - 07-30-2003, 05:54 PM
[No subject] - by P.S.Seelan - 07-31-2003, 12:42 PM
[No subject] - by GMathivathanan - 07-31-2003, 02:41 PM
[No subject] - by sethu - 07-31-2003, 07:02 PM
[No subject] - by GMathivathanan - 07-31-2003, 07:07 PM
[No subject] - by P.S.Seelan - 08-01-2003, 12:32 PM
[No subject] - by P.S.Seelan - 08-01-2003, 12:35 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 08:00 AM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 08:00 AM
[No subject] - by P.S.Seelan - 08-02-2003, 12:25 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 03:00 PM
[No subject] - by sethu - 08-02-2003, 03:23 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 06:46 PM
[No subject] - by P.S.Seelan - 08-03-2003, 12:43 PM
[No subject] - by GMathivathanan - 08-03-2003, 01:35 PM
[No subject] - by P.S.Seelan - 08-04-2003, 12:48 PM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 02:04 PM
[No subject] - by P.S.Seelan - 08-05-2003, 12:47 PM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 12:51 PM
[No subject] - by P.S.Seelan - 08-05-2003, 12:57 PM
[No subject] - by GMathivathanan - 08-05-2003, 01:04 PM
[No subject] - by P.S.Seelan - 08-06-2003, 12:39 PM
[No subject] - by GMathivathanan - 08-06-2003, 01:44 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 12:29 PM
[No subject] - by கபிலன் - 08-07-2003, 12:37 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 12:57 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:35 AM
[No subject] - by sethu - 08-10-2003, 09:08 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 09:15 AM
[No subject] - by கபிலன் - 08-10-2003, 10:50 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:32 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 12:59 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:24 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 12:36 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)