12-12-2005, 02:05 PM
மோகன்டாஸ் ,
இங்கு சில பேர் பல பேர்களில் வந்து தங்களின் கருத்துக்களை சரி என நிறுவ விதண்டாவாதம் செய்வது ,யாழ்க் களத்திற்கு புதிய விடயம் அல்ல.இதனால் நீங்கள் சோர்ந்து விடாதீர்கள்.இது இந்த நபர்களின் கருத்து உள்வாங்கல் மற்றும் உள வளம் சம்பந்தமான பிரச்சினை.குளக்காட்டான் ,மற்றும் சாணாக்கியனின் கருத்துக்கள் இவற்றை ஆதாரபூர்வமாக காட்டியுள்ளன.கருத்தியல் ரீதியாக கருத்தாட முடியாத தருணங்களில் இவர்களின் கடைசி ஆயுதம், கருத்தாடுபவரை சிறுமைப் படுத்துவது.இதைப் பற்றி மேலும் கருத்தாடுவதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் இது போன்ற ஆக்கங்களை மென் மேலும் எழுதுங்கள் அவற்றை யாழ்க் களத்திலும் இணையுங்கள்.
உங்களைப் போல் ஈழத் தமிழர் பால் ஆர்வம் உடய உறவுகளை நாங்கள் இங்கே எதிர் பாக்கிறோம்.உங்கள் வரவு இங்கே நெடு நாளாக இருப்பவர் சில பேருக்கு உறுத்தலாக இருக்குமே ஒழிய, எல்லாரும் அப்படி அல்ல.சளைக்காமல் எழுதுங்க்கள் உங்களுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும்.